முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Five C’s of Cinematography : Workshop in Chennai 19.01.19 - Saturday



எழுத்திலிருக்கும் கதையை அதன் சுவாரசியம் குறையாமல் உணர்வுப் பூர்வமாக காட்சிப்படுத்துவதுதான் திரைப்பட உருவாக்கத்திலிருக்கும் ஆகப்பெரிய சவால்ஒரு பூமாலை கட்டுவது போல, ஒவ்வொரு ஷாட்டாக கோர்க்க வேண்டும்கோர்க்கப்பட்ட நேர்த்தியைப் பொருத்தே அது வடிவம் பெறுகிறது

ஒட்டுமொத்த சினிமாவை.. காட்சிகளாகவும், காட்சிகளைத் தனித்தனி ஷாட்டுகளாகவும் பிரித்தே படமாக்க வேண்டும்அப்படி பிரித்துப் படமாக்க பல்வேறு நுட்பங்கள் இருக்கின்றன

ஒரு காட்சியை எத்தனை ஷாட்டுகளாக பிரிக்கிறோம்..? 
அந்த ஷாட் என்னவகையானது
அந்த ஷாட்டை உருவாக்க எந்த லென்ஸை பயன்படுத்துகிறோம்.? 
ஒரு ஷாட்டின் நீளம் எத்தகையது.? 
ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்டுக்குமான உறவை எப்படி கட்டமைக்கப்போகிறோம்..? 
அதை எப்படி இணைக்கப் போகிறோம்..? 
Wide Angle Shot -இலிருந்து Close-Up Shot-வரைக்குமான பல்வேறு வகையான ஷாட்டுகளை எப்படி நெருடாமல் வரிசைப்படுத்துவது.?

..என்று பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இதற்கானப் பதில்களை கண்டடைவதும், அதை செயல்படுத்துவதும்தான் திரைப்படமென்னும் கலையின் ஆதார செயல்பாடு

இக்கேள்விகளுக்கான பதில்களை ‘Joseph V. Mascelli' என்னும் இயக்குநர் / ஒளிப்பதிவாளர் 'The Five C's of Cinematography' என்னும் தன்னுடைய புத்தகத்தில் விவரிக்கிறார்

திரைப்பட ஆக்கம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஆதாரமான நூல்களில் ஒன்று இது. 250 பக்கம் கொண்ட இப்புத்தகத்தை முழுமையாக படித்து புரிந்துகொள்வது என்பது ஒரு பெரும் இலக்கு

Camera Angles, Composition, Cutting, Continuity, Close-ups என்பவைதான் அந்த 5C-க்கள். இதன் ஒவ்வொரு பிரிவிலும் பழகுவதற்கு பல்வேறு நுணுக்கங்கள் இருக்கின்றன

இவற்றைப்பற்றித்தான் இப்பயிற்சி வகுப்பில் பார்க்கப் போகிறோம். ஆர்வம் கொண்ட நண்பர்கள் உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்.

Understanding the 5C’s of Cinematography
Workshop in Chennai 19.01.19 - Saturday 

Cost of the Workshop :

₹ 1999/- (early booking discount if booked by 10th Jan 2019)
₹ 2499/-  Full Price

TO REGISTER..
CALL:
+91 98842 04348 / +91 98406 32922 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...