பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி தேர்வை எழுதிவிட்டு .. பல மாதங்களாக கட்டுப்பாடாக படித்தக் க ளை ப்பு போக (!?), ஒட்டுமொத்தமாக பள்ளித்தோழர்கள் அனைவரும் , ஒரு திரைப்படத்திற்கு போனோம் . காலையில் தேர்வு முடிந்து , மதியம் திரைப்படம் . கமல் நடிப்பில் , பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘ சதிலீலாவதி ’ திரைப்படம் அது . கமல் படம் .. கமல் ரசிகன் .. அதுவே போதுமானதாக இருந்தது , அப்படத்திற்கு போவதற்கு . சிரித்து சிரித்து மகிழ்ந்தோம் என்பது மட்டும் நினைவிலிருக்கிறது . படம் மதியம் 2.30 துவங்கி மாலை 5.30 மணிபோல் முடிந்தது . நண்பர்களுக்கு விடை கொடுத்தோம் . நெருங்கிய நண்பர்கள் நான்கு ஐந்து பேர் மட்டும் , மீதமிருந்தோம் . எங்களுக்கு தேர்வு முடிந்த க ளை ப்பு இன்னும் போகவில்லை . கலைப்பைப் போக்க வேறெதேனும் செய்ய வேண்டியதாக இருந்தது . நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கெல்லாம் .. அன்றை நாட்கள் இல்லை . எங்கள் கலைப்பை போக்க , எங்களை மகிழ்விக்க எங்களுக்கு அப்போது இருந்த ஒரே வழி , ஒரே மார்கம் .. திரைப்படம் பார்ப்பதுதான் ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!