இரண்டு படங்களுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசம் , இரண்டும் வெவ்வேறு ‘ ஃபோக்கல் லென்ந்த் ’ (Focal Length ) கொண்ட லென்சுகளால் எடுக்கப்பட்டது என்பதுதான் . படம் A - 80mm லென்ஸாலும் , படம் B - 24mm லென்ஸாலும் எடுக்கப்பட்டது . 35mm ஃபார்மேட்டில் , 50mm (Normal Lens)- க்கு மேற்ப்பட்ட ஃபோக்கல் லென்ந்த்தை ‘Tele Lens’ என்றும் , அதற்கு கீழான ஃபோக்கல் லென்ந்த்தை ‘Wide Lens’ என்றும் அழைக்கிறோம் . Wide Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது , அது பார்க்கும் பரப்பளவு அதிகம் என்பதை நாம் அறிவோம் . கூடவே , Wide Lens லென்ஸுகளில் படம் பிடிக்கும்போது கேமராவிற்கு அருகிலிருக்கும் பொருட்கள் பெரிதாகவும் , கொஞ்சம் Distortion- வோடும் இருக்கும் . பின்புலக்காட்சிகள் சிறிதாக , தூரத்தில் இருப்பதைப்போன்றும் தெரியும் . Tele Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது , அது பார்க்கும் பரப்பளவு குறையும் , அதாவது கோணம் ‘Narrow’- வாகும் . மேலும் , படம் பிடிக்கப்படும் Subject- ம் அதன் பின்புலமும் நெருக்கத்திலிப்பதைப் போன்று தோன்றத்தை உண்ட...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!