முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Wide Vs Tele Lens



இரண்டு படங்களுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசம், இரண்டும் வெவ்வேறுஃபோக்கல் லென்ந்த்’ (Focal Length ) கொண்ட லென்சுகளால் எடுக்கப்பட்டது என்பதுதான். படம் A - 80mm லென்ஸாலும், படம் B - 24mm லென்ஸாலும் எடுக்கப்பட்டது

35mm ஃபார்மேட்டில், 50mm (Normal Lens)-க்கு மேற்ப்பட்ட ஃபோக்கல் லென்ந்த்தை ‘Tele Lens’ என்றும், அதற்கு கீழான ஃபோக்கல் லென்ந்த்தை ‘Wide Lens’ என்றும் அழைக்கிறோம்.

Wide Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது, அது பார்க்கும் பரப்பளவு அதிகம் என்பதை நாம் அறிவோம். கூடவே, Wide Lens லென்ஸுகளில் படம் பிடிக்கும்போது கேமராவிற்கு அருகிலிருக்கும் பொருட்கள் பெரிதாகவும், கொஞ்சம் Distortion-வோடும் இருக்கும். பின்புலக்காட்சிகள் சிறிதாக, தூரத்தில் இருப்பதைப்போன்றும் தெரியும்

Tele Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது, அது பார்க்கும் பரப்பளவு குறையும், அதாவது கோணம் ‘Narrow’-வாகும். மேலும், படம் பிடிக்கப்படும் Subject-ம் அதன் பின்புலமும் நெருக்கத்திலிப்பதைப் போன்று தோன்றத்தை உண்டாக்கும்

Subject- மட்டும் மையப்படுத்தி, அதனை அதன் பின்புலங்களிலிருந்து பிரித்து காட்ட, டெலி லென்ஸ் நன்கு பயன்படும். காட்சிக்கு தேவையில்லாதவற்றை தவிர்ப்பது, Shallow Focus - அதிகரிப்பது போன்றவற்றில் மூலம் இது சாத்தியப்படும்.

Subject-வுடன், அதன் பின்புலத்தை காட்சிப்படுத்த வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படும். குறிப்பாக குளோசப் சுடுவில்(shot) இத்தகைய நுட்பம் பயன்படும். ஒரே அளவு composition தான் என்றாலும், வைட் ஆங்கிள் மற்றும் டெலி லென்ஸின் பிம்பங்கள் வெவ்வேறாக இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்



நான் ஒளிப்பதிவாளராக பணி புரிந்த, மாத்தியோசி எனும் திரைப்படம், வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள்

கிராமப்பகுதி முழுவதும் 'Wide Angle' லென்சுகளைப் பயன்படுத்தினோம். நிலப்பகுதியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதனால் எல்லா பிரேம்களிலும் அவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். குளோசப் காட்சிகள் கூட வைட் ஆங்கிள் லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னையில் இதற்கு எதிர்மாறாக, லென்சுகளைப் பயன்படுத்தினோம். 'Wide Shots'கூட 'Tele' லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னை அவர்களுக்கு அந்நியமானதும் என்பதையும், சென்னையில் அவர்கள் தனித்து விடப்பட்டார்கள் என்பதையும் உணர்த்தும் விதமாக லென்ஸுகளை பயன்படுத்தினோம்

Maathi Yosi

Mathi Yosi

Mathi Yosi


பிரபல ஹாலிவுட் படமான ‘Revenant’ திரைப்படம் முழுவதும் 12mm - 21mm லென்ஸுகளை மட்டும் கொண்டு படம் பிடித்ததாக அதன் ஒளிப்பதிவாளர் ‘Emmanuel Lubezki’ சொல்லுகிறார். தமிழில் ஒளிப்பதிவாளர் ‘Santhos Sivan’ இயக்கிய ‘Terrorist’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வைட் ஆங்கிள் லென்ஸுகளால் படம் பிடிக்கப்பட்டது, குறிப்பாக Macro Lens-களை அதிகம் பயன்படுத்தியதாக சந்தோஷ் சிவன் சொல்லுகிறார். இவ்விரண்டு படங்களையும் வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள், வைட் ஆங்கிள் லென்ஸின் பயன் புரியும். அதேப்போல ஹாலிவுட் இயக்குநர்Terrence Malick’ தன்னுடைய படங்களை பெரும்பாலும் வைட் ஆங்கிள் லென்ஸுகளால் தான் படம் பிடிக்கிறார். 

Revenant

Terrorist

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...