இப்போதைய சூழல் , வாழ்வின் மீதான எதிர்பார்ப்பு , நம்பிக்கை , பிடிமானங்கள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது . இந்தக்காதில் வாங்கி , அந்தக்காதில் வெளியே விட்டுக்கொண்டு திரிந்து தத்துவங்கள் எல்லாம் உண்மையாகிவிடும் சூழலுக்கு வந்துவிட்டோம் . ‘ காயமே இது பொய்யடா … காற்றடைத்த பையடா ..!’ என்பது எத்தனை நிஜம் …!? நம்முடைய பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் . ‘ வெறும் காற்று … வெறும் மண் ’ என்றாகிட தயாராகி விட வேண்டியதுதான் . இதை உணரும் போது , மனம் வெறுமையில் நிற்கிறது . எதிர்கால வாழ்வு கனவாகிவிடும் சூழலில் , கடந்த கால வாழ்வு மட்டுமே கையிலிருக்கிறது . அதை வைத்துக்கொண்டு , உருட்டி … உருட்டி விளையாடுவது தவிர வேறென்ன செய்வது இப்போது ..! என் வாழ்வில் , என்னை பாதித்த , நடந்த , கடந்து , பாதையைத் திரும்பிப்பார்க்க முயல்கிறேன் . வாழ்வு என்னவெல்லாம் கொடுத்தது , எதையெல்லாம் உணர்த்தியது என்பதே சாரம் . * கடவுள் : அப்போது ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன் . தாத்தா , பாட்டி , அம்மா , சித்...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!