‘ காதல் தேசம் ’ திரைப்படம் வெளிவந்த போது , நான் பெங்களூரில் , கல்லூரிப்படிப்பில் இருந்தேன் . வருங்காலத்தில் ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்ற எண்ணத்தை , பனிரெண்டாம் வகுப்பு படித்த காலத்தில் வெளியான ‘ பம்பாய் ’ திரைப்படத்தின் மூலமாக , அதன் ஒளிப்பதிவாளர் திரு . ராஜிவ்மேனன் அழுத்தமாக என்னுள் ஏற்படுத்தி இருந்தார் . அதன் பின்பு ஒளிப்பதிவு குறித்து என் தேடல் இருந்த காலம் அது . அக்காலகட்டத்தில்தான் ‘ காதல் தேசம் ’ வெளியாயிற்று . படம் பார்த்து மிரண்டு போனேன் . அட்டகாசமான ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது . இருநாயகர்களும் தங்கி இருக்கும் அறை , அதன் சன்னல் , அதன் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய டேபில்ஃபேன் , அதன் பின்னால் பாய்ந்து வரும் ஒளி , பாடல்காட்சிகள் , குறிப்பாக ‘ முஸ்தபா முஸ்தபா ’ பாடல் , அதில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் மலை முகடுகள் என பரவசமான ஒரு உணர்வை அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு கொடுத்தது . அதன் பிறகுதான் , யார் அந்த ஒளிப்பதிவாளர் என கவனித்தேன் . பெயரை பார்த்த போது , ஆச்சரியமும் மகிழ்ச்சி...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!