சிறு , குறு முதலீட்டுத் திரைப்படங்கள் எடுக்க முதலில் தரமான கதை வேண்டுமென்றேன் . காரணம் , பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களில் , ஒரு பார்வையாளனை ஈர்க்க அல்லது உற்சாகம் கொள்ள வைக்க , பல்வேறு விஷயங்கள் இருக்கிறன . உச்ச நட்சத்திர நடிகர் , நடிகைகள் (Top Actors), பிரம்பாண்டமான அரங்குகள் (Sets), வெளிநாட்டு படபிடிப்பு (Foreign Locations), அசத்தலான பாடல்கள் (Top MUsic Directors, Best Songs), நடனங்கள் (Top Dance Masters), மிரட்டலான சண்டைக்காட்சிகள் (Top Fight Masters, Equipments) என்று பெரும் செலவு செய்து , கொண்டு வந்துவிட முடியும் . யோசித்துப்பார்த்தல் , நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும் . இதில் கதை என்று ஒன்றை ‘ கொஞ்சம் ’ வைத்தால் போது , படத்தை காப்பாற்றிவிட முடியும் . அதைத்தான் நம்முடைய ‘ கமர்ஷியல் திரைப்படங்கள் ’ தொடர்ந்து செய்து வருகின்றன . ஆனால் , ஒரு குறு முதலீட்டுத் திரைப்படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பிருக்காது , பார்வையாளனை முழுமையாக இரண்டு , இரண்டரை மணி நேரம் கவர்ந்து வைத்திருக்க வேண்டுமானால் , ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!