பெங்களூரில் சட்டம் படிக்கப்போன போதும் , ஒளிப்பதிவின் மீதான ஆர்வத்தின் காரணமாக , புகைப்படத்துறையின் நுட்பங்களையும் , கேமராக்களைப்பற்றி அறிந்துக்கொள்ளவும் ‘ கேமரா பழுதுப் பார்க்கும் ’ நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன் என்று முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா . அங்கே பணி செய்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது , அதைப்பற்றி பேசுவதற்கு முன்பாக , ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் குறிப்பிட்ட ஒரு தகவலை , சம்பவத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன் . அதன் தலைப்பு … Connecting Dot ( புள்ளிகளை இணைப்பது அல்லது இணைக்கப்படும் புள்ளிகள் ) ஸ்டீவ் ஜாப் ஆற்றிய ஒரு உரையில் இதனைக் குறிப்பிடுகிறார் . தன் வாழ்வில் , ஏன் எதற்கு என்று தெரியாமலையே , அவர் வைத்த புள்ளிகள் , பிற்காலங்கள் இணைக்கப்பட்ட போது , அதற்கு ஒரு வடிவம் கிடைத்ததைப்பற்றியப் பேச்சு அது . அதாவது , அவருடைய பள்ளிக்காலத்தில் , படிப்பு சரியாக வராமல் போனபோதும் , பொழுதைக் கழிக்க அவர் சென்ற இடம் , அப்போது அப்பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்ட ‘calligraphy’ வகுப்பு . ‘calli
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!