முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Cinema: Film Vs Digital

ஒரு திரைப்படத்தை ஃபிலிமில் (Film) எடுக்கலாமா, 'டிஜிட்டலில்'(Digital) எடுக்கலாமா என்றெல்லாம் இன்று ஆலோசிக்கப்படுகிறது. டிஜிட்டல் என்பது புதிய தொழில்நுட்பம்தான், அது வளர்ச்சியைக் குறிக்கிறது என்பதும், துறையை மேம்படுத்தும் என்பதும் உண்மைத்தான்.  டிஜிட்டல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போவதும், வருங்காலம் முழுதும் டிஜிட்டலாக மாறிவிடும் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ன? அதன் வளர்ச்சிப்பாதை என்ன? இன்று நமக்குக் கிடைக்கும் தொழில்நுட்பம் எத்தகையது? என்பததைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்குமான ஆதார வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.






இந்தக் கட்டுரை, இவ்விரண்டு தொழில்நுட்பமும் எப்படிச் செயல்படுகிறது என்பதையும், அவை பிம்பத்தை எப்படிப் பதிவு செய்கிறது, அவற்றுக்கிடையேயான வித்தியாசம் என்ன என்பதையும் விவரிக்கிறது.


ஃபிலிம் (Film):


ஃபிலிமென்பது, முப்பரிமாண (3D) தன்மை கொண்ட 'Mosaic of Silver Halide Crystals'  எனப்படும் வேதிப்பொருளின் துகள்களால் ஆனது. இந்தத் துகள்களின் மீது ஒளிவிழும் போது தன்னுள் வேதி மாற்றத்தைச் செய்துகொண்டு, காட்சியைப் பதிவுசெய்கின்றன. இந்தத் துகள்களின் அளவும், உருவமும் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கலவையான முறையில் பதிக்கப்படுகிறது.  அதன் மூலம் ஒவ்வொரு Frame களிலும் மாறுபட்ட அளவை, உருவத்தை உடைய துகள்கள் இருக்கின்றன, அவை பரவலாகக் கிடக்கின்றன. அதனால் ஃபிலிமின் ஒளி வாங்கும் தன்மை ஒரே மாதிரியாக இல்லாமல், மனிதக் கண்களைப்போன்று வேறுபட்ட ஒளி வித்தியாசத்தையும் வண்ண மாறுபாட்டையும் பதியச்செய்யும் வகையில் இருக்கிறது. கண்கள் பார்ப்பதைபோன்று துல்லியமாகப் பதிவுசெய்கிறது.

டிஜிட்டல் (Digital-Video)


வீடியோவில் 'Charged Coupled Device' (CCD) முறையில் ஒளியானது உள்வாங்கிப் பதியப்படுகிறது. CCD என்பது அதன்மேல் படும் ஒளியை மின்சாரமாக/ மின்காந்தமாக மாற்றுகிறது. அதன்மூலம் பெறப்படும் தகவல்களை (Datas) மின்காந்தத் துகள்களாகவோ, Digital Dataக்களாகவோ மாற்றி, ஒளி நாடாவிலோ (Tape) அல்லது 'Hard Disc' லோ சேர்க்கிறது. இந்த CCD யானது தட்டையாக, குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். இது முப்பரிமாணத்தன்மை (3D) கொண்டது அல்ல, உயரம் மற்றும் அகலம் மட்டும் கொண்ட இருபரிமாணத் (2D) தன்மைகொண்டது. அது மாறுவதே இல்லை, இதனால் ஒவ்வொரு pixal- ம் எப்போதும் ஒரே அளவிலான ஒளியையும், தகவலையும் பெறுகின்றது. அதனால் ஒளி மற்றும் வண்ணத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்வதில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  


ஃபிலிமின் முக்கியமான சில தகுதிகள் (Characteristics) ஒளியைப் பதிவுசெய்வதில் முக்கியத்துவம் பெறுகின்றன, அதற்கும் வீடியோவிற்குமான வித்தியாசத்தைப் பார்ப்போம்.


Grains:

ஃபிலிமில் Grains  எனப்படும் துகள்கள் முப்பரிமாணத்தில் இருப்பதினால், ஒளியானது தெளிவாகப் பதிவுச்செய்யப்படுகிறது. அதனால் காட்சியானது நாம் கண்களினால் பார்ப்பதுப் போன்று இயல்பாக இருக்கிறது. ஆனால் வீடியோவில் அப்படி இல்லை, அதனுடைய இருபரிமாணத்தன்மை ஒளி உள்வாங்குவதை கட்டுப்படுத்துகிறது. அதனால் பதிவுச்செய்யப்பட்ட காட்சியானது இயல்பாக இருப்பதில்லை.




Sharpness:

ஃபிலிமில் பதிவுச்செய்யப்பட்ட பிம்பத்தில் உருவங்களின் ஓரங்கள் தெளிவாக இருக்கும், அதாவது பிம்பமானது முழுமையாக, தெளிவாகப் பதிவு செய்யப்படுகிறது என்று பொருள்.  ஆனால் வீடியோவில் அப்படியல்ல, மங்கலான ஓரங்களையே பார்க்க முடிகிறது.  இதற்கும் முப்பரிமாணத்(3D) துகள்களும், இருபரிமாணத்தைப் பதிவு செய்யும் CCD யுமே காரணம்.




Depth of Field:

நம் காட்சியில் இருக்கும் நடிகர்களுக்கும், அவர்களின் பின்புலத்திற்குமான Focus வித்தியாசத்தைக் குறிப்பது, அதாவது நடிகர்களை Focus யிலும் பின்புலத்தை Out of Focus யிலும் கொண்டுவருவது, இது எதற்கு எனில், நடிகர்களை அவர்களின் சுற்றுப்புறத்திலிருந்து பிரித்து, பார்வையாளனின் கவனத்தை நடிகனின் மீது குவிப்பதற்காக. இது ஃபிலிமில் நமக்கு ஏற்றபடி சுலபமாகச் செய்யமுடியும்.  ஆனால் வீடியோவில் அவ்வளவாகச் செய்ய முடியாது, ஏனெனில் வீடியோவின் பிம்பம் பதியுமிடம் ஃபிலிமைவிடச் சிறியது, அதனால் நடிகன் மற்றும் சுற்றுப்புறமும் Focusல் இருக்கும்.  இது பார்வையாளனுக்கு சில சமயங்களில் இடையூறாக இருக்கும்.




Exposure Latitude:

'எக்ஸ்போஸர் லேட்டடியூட்' என்பது ஒரு காட்சியில், ஒளியின் அளவில் இருக்கும் வேறுபாட்டைப் பற்றிக் குறிப்பிடுவது, அதாவது நாம் பார்க்கத் தேவையான ஒளி அளவிலிருந்து, ஒரு பக்கம் படிப்படியாக் குறைந்து கொண்டேபோய் இருட்டிலும் (Shadow Area), மறுபக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போய் நாம் பார்க்க முடியாதபடி வெளிச்சமாகவும்(High Light Area) இருக்கும்.    


இந்த Shadow Area க்கும் High Light Area க்குமான இடைப்பட்ட ஒளி அளவிலிருக்கும் மாறுபாட்டை 'எக்ஸ்போஸர்' அளவால் குறிக்கிறார்கள்.   ஒரு அளவிலிருந்து இன்னொரு அளவு என்பது அதன் முந்தைய அளவிலிருந்து ஒரு மடங்கு அதிக ஒளியையோ, அல்லது ஒரு மடங்கு குறைந்த ஒளியையோ குறிப்பது.


ஒரு காட்சியின் ஒளி அளவை I, II, III, IV, V, VI, VII என்று கொண்டால்,
நாம் முழுமையாகப் பார்க்கத் தேவையான ஒளி அளவானது IV. 
அதற்குக் கீழாக வரும் III, II, I என்பது படிப்படியாக தன் முந்தைய அளவிலிருந்து பாதிப்பாதியாகக் ஒளி குறைவதைக் குறிக்கிறது.
அதே போல் V,VI,VII என்பது படிப்படியாக உயர்வதைக்குறிக்கிறது.


ஃபிலிம் என்பது 7 முதல் 11 வரையான அளவில் (Stops) மாற்றங்கள் கொண்ட காட்சியைப் பதிவுசெய்யும் என்கிறார்கள்.  ஆனால் வீடியோ அதிகபட்சமாக 4 அளவிலியே பதிவுச்செய்கிறது. இதனால் நாம் காட்சியில் சில பகுதிகள் பார்க்க முடியாமல் போகின்றன.




Color:


ஃபிலிம் மிக இயல்பான வண்ணங்களைப் பதிவுச்செய்கிறது. அவை தொடர்ச்சியாகவும் சீராகவும் இருக்கிறது. ஆனால் வீடியோவில் அப்படியில்லை, முழுமையான வண்ணங்கள் பதிவாவதில்லை, அதற்கு காரணம் அதிலிருக்கும் கட்டுப்பாடே ஆகும்.



Tone-Scale Neutrality and Linearity:

ஃபிலிம் சரியான Neutral Grey tone-ஐ வெள்ளையிலிருந்து, கறுப்பு வரை சரியாகத் தருகிறது.




Flesh-to-Neutral:

நம் தோலின் வண்ணத்தையும், சுற்றுப்புறத்தின் வண்ணத்தையும் சரியாக ஃபிலிம் மட்டுமே தருகிறது.



Shadow Details:

ஃபிலிம் ஒளி குறைந்த பகுதியையும் பதிவுசெய்கிறது. ஆனால் வீடியோ அப்படிச் செய்வதில்லை.




ஃபிலிமிற்கும், டிஜிட்டலிற்குமான வித்தியாசத்தையும் பாருங்கள்:






இவையெல்லாம் ஃபிலிமிற்கும், டிஜிட்டலிற்கும் பொதுவான வித்தியாசங்கள்.  இந்த வித்தியாசத்தின் இடைவெளியைக் குறைக்க டிஜிட்டல் தொழில்நுட்பம் முயன்று வருகிறது. ஆனால், இன்னும் முழுமையாகவில்லை. எனினும் டிஜிடல் ஒவ்வொரு நாளும் தன் குறைகளைக் களைந்து வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.


இன்றைய நிலையில் 'Red One', 'D21', 'Viper' , 'Genesis', 'Vari Cam' எனப் பல வகையான டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டன, ஆனாலும் எதுவும் ஃபிலிமின் தரத்திற்கு இணையில்லை என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து. 



Thanks: Kodak

கருத்துகள்

  1. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

    பதிலளிநீக்கு
  2. எனக்கு கொஞ்சம் புரிந்தது. மீண்டும் படித்தால் முழுதும் புரியும். விரிவான தவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தலைவரே.. உங்களுடன் பேச ஆசைப்படுகிறேன். இப்போது ரெட் ஒன் டிஜிட்டலில் 4கே ரெசல்யூசனுக்கு அவுட் எடுக்க முடிகிறதா.? மேலும் பல விஷயங்களை பேச ஆசைப்படுகிறேன். என் எண் 9840332666

    பதிலளிநீக்கு
  4. இரு வித படப்பிடிப்பில் உள்ள வேற்றுமைகளைக் கொடுத்துள்ளீர்கள். நன்கு புரிகிறது. தகவல்களுக்கு நன்றி.

    ஆனாலும் இதில் Depth of Field-யினையும் கொண்டுவருவது சரியா என்றொரு கேள்வி! Depth of Field என்பதை diaphragm & shutter speed இரண்டினால்தானே கொண்டுவருகிறோம். அதில் film / digital வேற்றுமையும் இடம் பெறுமா?

    பதிலளிநீக்கு
  5. தருமி: //ஆனாலும் இதில் Depth of Field-யினையும் கொண்டுவருவது சரியா என்றொரு கேள்வி! Depth of Field என்பதை diaphragm & shutter speed இரண்டினால்தானே கொண்டுவருகிறோம். அதில் film / digital வேற்றுமையும் இடம் பெறுமா?//

    கண்டிப்பாக நண்பரே..'CCD' அல்லது 'CMOS' இன் பரப்பளவைப் பொருத்து இது மாறுபடும். இப்போது வரும் HD கேமராக்களில்(Canon 5D) இந்த பிரச்சனையை சரி செய்திருக்கிறார்கள். 35MM ஃபிலிம் அளவில் இதன் 'CMOS' சென்சர்கள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன