முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

D.I என்றால் என்ன?

D.I என்றால் என்ன?
Digital Intermediate - 'டிஜிட்டல் இண்டர்மிடியேட்' என்பதன் சுருக்கம்தான்  D.I.

வழக்கமாக, திரைப்படத் தயாரிப்பில் படத்தொகுப்பிற்கும் (editing), பிரதியெடுத்தலுக்கும் (Printing) இடையில் நடக்கும் செயலை 'இண்டர்மீடியேட்' என்கிறார்கள். அதாவது இதற்கும் (editing) அதற்கும் (printing) இடையில் அல்லது நடுவில் என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல் 'இண்டர்மீடியேட்'.

சரி, இங்கு அவ்விரண்டுக்கும் நடுவில் என்ன நடக்கிறது..!?

ஒரு படத்தின் படத்தொகுப்பு வேலை முடிந்தவுடன் தேவையானVisual Effects / Optical Works- இருப்பின், அதாவது ஒரு படத்தின் மீது இன்னொரு படத்தை பொருத்துவது (super impose), படத்தை இருட்டிற்குக் கொண்டுச் செல்வது (Fade out), இருட்டிலிருந்து துவங்குவது (Fade In) போன்ற வேலைகள் இருந்தால், முன்பெல்லாம் ஆப்டிக்கல் (optical) முறையில் செய்வார்கள். இந்த வேலைகளைச் செய்வதற்கான சிறப்பு கருவிகள் உண்டு. அதை கையாள்வதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற வல்லுனர்களும் உண்டு. இந்த ஆப்டிக்கல்ஸ் வேலை எப்படி நடைபெறுகிறது என்பதை விளக்க தனியே ஒரு கட்டுரை எழுதவேண்டும். மேலும் அம்முறை இப்போது நடைமுறையில் இல்லை. அவ்விடத்தை கணினிகள் வந்து நிரப்பி விட்டன. ஆகையால் அதைத்தாண்டிச் செல்வோம்.

சிறப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் Visual Effects / Optical Works  காட்சிகளை பிரதி எடுக்க, பல படிநிலைகளைத் தாண்டி வரவேண்டும். கடைசியாக ‘Intermediate Negative' என்று சொல்லப்படும் சிறப்பு நெகட்டிவில் அதை பதிவு செய்வார்கள். அதிலிருந்துதான் பிரதி எடுக்க முடியும். அதிலிருந்து பிரிண்ட் போடுவதற்கு முன்பாக ஒளிப்பதிவாளர் நெகட்டிவில் இருக்கும் ஷாட்டுகளுக்கு வண்ணத்தை ஒழுங்கு படுத்தவேண்டும் (color correction). இதை லேபில் (lab) 'போட்டோ கெமிக்கல்' (photo-chemical process) முறையில் செய்வார்கள். இப்போது இச்செயல்கள் அனைத்தும் டிஜிட்டலாகச் செய்யப்படுகிறது. ஆகவே அப்பணியை 'டிஜிட்டல் இண்டர்மிடியேட்' (Digital Intermediate) என்று அழைக்கிறோம். தேவையான Visual Effects/Optical Worksமற்றும் வண்ண நிர்ணயித்தலை இப்போது கணினியின் துணைகொண்டு செய்துவிடுகிறோம். இந்த Visual Effects’ என்பதற்கு, தற்போது 'Computer Graphics' (CG) என்ற புதிய துறையே உருவாகிவிட்டதை நாம் அறிவோம்.  

கணினியின் துணை கொண்டு வண்ணம் நிர்ணயித்தலை சிறப்பாகவும் மேன்மையாகவும் செய்ய முடிகிறது. ரசாயன முறையில் செய்ததை விடவும் இப்போது அதிக சாத்தியங்கள் கிடைக்கின்றன. கைகளால் ஓவியம் வரைவதற்கும் கணினியின் துணை கொண்டு ஓவியம் வரைவதற்குமுள்ள வித்தியாசத்தைப் போன்றது இது என்பதை நீங்கள் சுலபமாக புரிந்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

D.I ஏன் செய்ய வேண்டும்? அதன் தேவை என்ன?

D.I வருவதற்கு முன்பெல்லாம் படம் எடுக்கவில்லையா? அப்போதும், நல்ல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அழகாக ஒளிப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க இப்போது D.I.-இன் தேவை என்ன?

வழக்கமான 'போட்டோ கெமிக்கல்' முறையில் எந்தச் செயலின் பலனையும் உடனே பார்க்கமுடியாது. அது 'Process' செய்யப்படவேண்டும். பிரதி எடுத்துதான் பார்க்கமுடியும். அதாவது காத்திருக்கவேண்டும். சில சமயங்களில் சிறு மாற்றங்களைக்கூட செய்யமுடியாமல் போகும். ஆனால் D.I. முறையில் நாம் செய்யும் செயலையும், பலனையும் உடனே பார்க்க முடியும். தேவைப்பட்டால் மாற்றங்களை உடனுக்குடன் செய்யமுடியும். நேரம் விரையமாகாமல்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவது, அவ்வேலையை சுலபமாகவும், விரைவாகவும், மேன்மையாகவும் செய்யவே பயன்படுகிறது.

அதே போல்தான் இதுவும் ஒரு புதிய தொழில்நுட்பம். ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், படத்தொகுப்பாளரும் இதைப்பயன்படுத்தி Color correction , Visual effects, CG போன்ற வேலைகளை விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்யமுடிகிறது. எப்படி படத்தொகுப்பை மூவியாலாவிலிருந்து 'Avid'-க்கு மாற்றினோமோ அது போலத்தான் இதுவும்இன்னும் சிறிது காலத்தில் D.I. செய்யாமல் படங்கள் வெளிவரமுடியாது என்ற நிலை வரும்.

D.I.-இன் செயல்முறையை புரிந்துக்கொள்ள, வழக்கமாக ஒரு திரைப்படம் தயாராவது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

சூட்டிங்கில் எடுத்த நெகட்டிவை, லேபில் (Lab) கொடுத்து டெவலப் (Develop) செய்தபிறகு, அதை டெலிசினி (Telecine) செய்வார்கள். டெலிசினி என்பது ஃபிலிமை வீடியோவாக மாற்றுவது. இப்படி டெலிசினி செய்யும் போது நெகட்டிவில் பதிக்கப்பட்டிருக்கும் 'keycode'-ஐயும் பதிவுசெய்து கொள்வார்கள். இந்த keycode என்பது நெகட்டிவின் நீளத்தையும் அதிலிருக்கும் ஒவ்வொரு frame -ஐயும் குறிக்கும் குறிச்சொல்லாகும் (தகவல்கள்/ Datas).

இந்த தகவல்களோடு விடியோவை கணினியில் (Avid or FCP) ஏற்றிக் கொள்வார்கள். அதேபோல, படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட ஒலியையும் கணினியில் ஏற்றிக்கொண்டு, படத்தொகுப்பு செய்வார்கள்படத்தொகுப்பு முடிந்தவுடன், keycode-ஐப் பயன்படுத்தி EDL எடுப்பார்கள். ‘Edit decision list’ என்பதன் சுருக்கம்தான் EDL.

இந்த EDL-இல் படத்தில் நாம் பயன்படுத்திய  ‘காட்சித் துண்டுகள் (Shots) பற்றிய தகவல் இருக்கும். அதைக் கொண்டு நெகட்டிவ் கட்டிங் (Negative Cutting) செய்வார்கள். (மனிதர்கள் கத்திரிக்கோலைக்கொண்டு நெகட்டிவிலிருந்து தேவையான ஷாட்டுகளை  துண்டித்து எடுப்பதற்கான பெயர் இதுஅதாவது நமக்குத் தேவையான shots- மட்டும் தனித்தனியாக மூல நெகட்டிவிலிருந்து பிரித்தெடுத்து ஒன்றாக இணைத்து முழுநீளப் படமாக உருவாக்குவார்கள். பிறகு இந்த நெகட்டிவைத்தான், வண்ணம் ஒழுங்கமைத்து, Visual Effects - சேர்ப்பார்கள். மறுபுறம் ஒலி நெகட்டிவும் (sound negative) தயாராகிவரும். இவை இரண்டையும் பயன்படுத்தி பிரதி எடுப்பார்கள். அந்த பிரதியே நாம் திரையரங்குகளில் பார்க்கிறோம்.         

D.I. செயல்முறை:

இப்போது D.I. முறையில், எடிட்டிங் முடிந்தவுடன் EDL- அப்படியே கணினியில் ஏற்றி விடுகிறார்கள்கணினி, EDL- பயன்படுத்தி நாம் பயன்படுத்தி இருக்கும் shots- மட்டும் 2k அளவில் scan செய்து எடுத்து விடுகிறது. அவை டிஜிட்டலாக சேர்த்து வைக்கப்படுகிறது. நாம் இந்த ஷாட்டுகளில் தேவையான 'Visual Effects, CG' சேர்த்துக் கொண்டு, வண்ணத்தை ஒழுங்கமைத்துக் கொடுத்துவிடவேண்டும். அந்த டிஜிட்டல் files -ஐ நெகட்டிவாக மாற்றிக் கொடுத்து விடுவார்கள். இதை நாம் 'Sound Negative'-வோடு சேர்த்து பிரதி எடுத்துக் கொள்ளலாம்.  

இந்த முறையில் என்ன லாபம்?.
1. மனிதர்கள் 'Negative Cutting' செய்யாததனால், மூல நெகட்டிவில் (Master Negative) எவ்வித பாதிப்பும் வராது.
2. நெகட்டிவில் கோடுகளோ, புள்ளிகளோ விழாது.
3. வண்ணத்தை நம் கற்பனைக்கும், கதைக்கும் தகுந்த விதத்தில் ஒழுங்கமைக்கலாம்.
4. இயக்குனரிடமும், படத்தொகுப்பாளரிடமும் காட்டி, கருத்துகளைப் பெறமுடியும். அதன் மூலம் மாற்றங்களை உடனுக்குடன் செய்யமுடியும். பழைய முறைப்படி பிரதிக்காகக் காத்திருக்க வேண்டாம்.
5. TV, HD, Digital Print, Negative என எந்த வகையில் வேண்டுமானாலும் நம் படத்தை வெளியிடலாம்.

D.I என்பதற்கும் ‘Reverse Telecine’ க்கும் என்ன வித்தியாசம்?
Telecine என்பது ஃபிலிமை விடியோவாக மாற்றுவது என்று பார்த்தோம், Reverse Telecine என்பது விடியோவை ஃபிலிமாக மாற்றுவது.

D.I.-இல், ஒரு 35mm frame -ஐ 2048 x 1556 pixels (2K) (நீளத்தையும், உயரத்தையும் புள்ளிகளால் குறிப்பது) ஆக மாற்றுகிறார்கள். ஆனால், டெலிசினி செய்யும் போது இதை 720 X 576 pixels-ஆகக் குறைத்து வீடியோவாக மாற்றுகிறார்கள். இது தொலைக்காட்சிக்களுக்கு சரியாக இருக்கும். ஏனெனில் தியேட்டரில் பார்ப்பதைவிட தொலைக்காட்சிப்பெட்டி  சிறியது அல்லவா.

இப்போது இந்த டெலிசினி செய்த வீடியோவை 'Reverse Telecine' மூலம் மீண்டும் ஃபிலிமில் ஏற்றினால், தியேட்டரில் பார்க்கும் போது Resolution குறைவாக தெரியும். படம் தெளிவாக இருக்காது. காரணம் அவை தரம் குறைந்தவை, வெள்ளித்திரைக்கு ஏற்றவையல்ல என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடிகிறது அல்லவா.  இந்த முறையை 'Telecine' and 'Reverse Telecine' என்று அழைக்கிறார்கள்.

இதுவே,  D.I.-இல் Scan செய்யும்போது 2048 x 1556 pixels (2K) அளவிலேயே டிஜிட்டலாக மாற்றப்படுகிறது. அதனால் மீண்டும் ஃபிலிமாக மாற்றும் போது எவ்வித குறைபாடும் வருவதில்லை. படமும் தெளிவாக இருக்கும். இம்முறையை 'Scanning' and 'Recording' என்று அழைக்கிறார்கள். அதாவது படச்சுருளிலிருந்து ஸ்கேன் செய்து எடுத்த காட்சித்துண்டுகளை, தேவைக்கேற்ப திருத்தம் செய்த பிறகு மீண்டும் படச்சுருளில் (Negative) பதிவு செய்வதை 'Recording' என்று அழைக்கிறார்கள்.

இப்படி பதிவு செய்யப்பட்ட Negative-தான் இனி படத்திற்கான மூல பிரதியாக பாவிக்கப்படும். இதிலிருந்து பிரதி எடுத்தோ அல்லது டிஜிட்டல் கோப்புகளிலிருந்து நேரடியாக டிஜிட்டல் திரையிடலுக்கோ அனுப்பப்படுகிறது. தற்போதெல்லாம் பெரும்பாலும் டிஜிட்டல் பிரதிகளே (digital files in Hard Disc) அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன