ஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Techniqueஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது, குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக் கொண்டுதான் பெரும்பாலான காட்சிகள் ஒளியமைக்கப்படுகின்றன. இது 'புகைப்படத்துறையிலும்' பின்பற்றக்கூடிய ஒன்றுதான்.

Three-point lighting என்று அழைக்கப்படும் இம்முறையை ஆதாரமாகக் கொண்டுதான் எல்லா வகை ஒளியமைப்புகளும் செய்கிறார்கள். அதனால் அதைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்வது அவசியம்.

Three-point lighting என்பதை மூன்று விளக்குகளைக் கொண்டு அல்லது மூன்று நிலைகளில் ஒளியமைப்பது என பொருள் கொள்ளலாம்.

1. Key Light - ஆதார ஒளி
2. Fill Light - துணை ஒளி
3. Back Light - பின்புற ஒளி


1. Key Light - ஆதார ஒளி: இந்த 'Key Light' என்பது ஒரு 'Subject'-இன் ஒரு பக்கத்தில் இருந்து கொடுக்கப்படும். அதாவது ஒரு நபரின் ஒருபக்கத்திலிருந்து. இடதுபக்கம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு பக்கத்திலிருந்து ஒளி விழும்போது ஒரு பக்கம் ஒளியூட்டப்பட்டும், மறுபக்கத்தில் (வலதுப்பக்கம்) நிழலும் விழும். மேலும் இந்த 'Key Light' ஆனது அந்த 'Subject'-ஐ தெளிவாக வரையறுக்கும். இந்த ஒளியே அப்பொருளை / நபரை படம் பிடிப்பதற்கான ஆதார ஒளியாகும்.


2. Fill Light - துணை ஒளி: இந்த 'Fill Light' என்பது 'Key Lights'-ஆல் உருவாகும் நிழலை குறைப்பதற்கு அல்லது முழுமையாக நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'Key Light'-க்கு மறுபக்கத்தில் 'Fill Light' வைக்கப்படும். இந்த 'Fill Light' ஆனது 'Key Light'-ஐ விட அளவில் குறைவாக இருக்கும். மேலும் இது 'Soft Light'-ஆகவும் இருக்கும்.வ்விரண்டு ஒளிகளைக் கொண்டு ஒரு பொருளை / நபரை(Subject) தெளிவாக ஒளியூட்டி விடலாம். 'subject'-இன் முழு பரிமாணத்தையும் தெளிவாக படம்பிடிக்க முடியும்.


3.Back Light - பின்புற ஒளி: இரண்டு ஒளிகளைக் கொண்டு ஒரு 'Subject' ஒளியூட்டப்பட்ட பிறகு, அந்த 'Subject'-ஐ அதன் பின்புலத்திலிருந்து பிரிப்பதற்கு, இந்த மூன்றாவது 'Back Light' பயன்படுகிறது. அதாவது ஒரு 'Subject'-யின் பின்புறத்திலிருந்து (Back Side) இந்த ஒளி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் இது 'Back Light' என அழைக்கப்படுகிறது. 


இப்படி பின்புறத்திலிருந்து ஒளி கொடுப்பதனால், அந்த 'Subject'-இன் வடிவத்தை அதன் பின்புலத்திலிருந்து பிரித்து தனித்துக் காட்டிவிட முடிகிறது. இதனால் 'Subject', அதன் பின்புலத்தோடு 'ஒன்றிவிடுவதிலிருந்து' (Merge) தவிர்க்க முடிகிறது. இம்முறையை 'High Light' என்றும் சொல்லுகிறார்கள்.

'Key Light' மட்டும்
'Fill Light' மட்டும்
'Back Light' மட்டும்
மூன்றும் சேர்ந்து
குறிப்பு: நான்காவதாக ஒரு லைட் இருக்கிறது, அது பின்புலத்தை (Background) ஒளியூட்டப் பயன்படுகிறது.

ஏன் Three-point lighting?

ஏன் இப்படி, மூன்று நிலைகளிலிருந்து ஒளியமைக்கவேண்டும்? ஏன் இது ஆதார ஒளியமைப்பு முறையாக இருக்கிறது? ஏன் இது காலம் காலமாக பின்பற்றப்படுகிறது?
இந்த கேள்விக்குப் பதில் தேடினால்..


இந்த முறை முதலில் 'புகைப்படத்துறையிலோ' அல்லது 'திரைத்துறையிலோ' உருவானது இல்லை. இது தோன்றியது 'மேடை நாடகத்தில்' என்கிறார்கள்.மேடை நாடகங்களில் நடிகர்கள் தோன்றும்போது அவர்களை பின்புலத்திலிருந்து பிரிந்துக்காட்டவும், ஒரு வித 3D தோற்றம் கொடுக்கவும் இம்முறை முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நடிகர்களுக்கு ஒருபக்கத்திலிருந்து 'Warm Light'-ம் மறுபக்கத்தில் 'Blue Light'-ம் பயன்படுத்தி அவர்களின் இரு பக்கங்களுக்கும்  சில வித்தியாசத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவித முப்பரிமாணத்தன்மையை உருவாக்க முடிந்திருக்கிறது.

பொதுவாக நம்முடைய கண்கள், சூரிய ஒளிக்கு பழக்கப்பட்டதனால் 'Warm Light'-ஐ வெளிச்சமாகவும் 'Blue Light'-'Shadow'-வும் புரிந்துக்கொள்ளும். மேலும் ஒரு பின்பக்க ஒளியைப் பயன்படுத்தி நடிகர்களை அவர்களின் பின்புலத்திலிருந்து பிரித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த முறை பார்வையாளர்களுக்கு ஒருவித 'முப்பரிமாணத் தன்மையில்' பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருக்கிறது. ஆகையால் இந்த முறை புகைப்படத்துறை மற்றும் ஒளிப்பதிவிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.

இரு பரிமாணத்தில் முப்பரிமாணம் (3D in 2D):

ஒரு காகிதமோ அல்லது 'படச்சுருளோ' (Film) இரு பரிமாணத்தன்மை கொண்டது அல்லவா.? நீளம், அகலம் என்ற இரண்டு பரிமாணம் தான். 'Depth' என்று அழைக்கப்படும் மூன்றாவது பரிமாணம் கிடையாது. எனில் அதில் எப்படி 'முப்பரிமாணத்தை' கொண்டுவருவது?

ஏன் முப்பரிமாணத்தைக் கொண்டு வரவேண்டும்? ஏனெனில் நாம் பார்ப்பது எல்லாமே முப்பரிமாணத்தை தன்மைக்கொண்டதுதான். அதுதான் இயல்பு. அதை காகித்தில் வியமாக கொண்டுவரும் போதுதான் அவ்வோவியம் இயல்பாக இருக்கிறது. நம்மை ஈர்க்கிறது. அதேபோல் புகைப்படத்தில் இந்த முப்பரிமாணத்தன்மையைக் கொண்டு வரும்போதுதான் நாம் அதை அதிகமாக ரசிக்க முடியும்.

இப்போது பயன்பாட்டிலிருக்கும் 3D சினிமா தொழில்நுட்பத்தோடு இதை இணைத்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இரண்டும் ஆதாரமாக ஒன்றுதான் என்றாலும், தொழில்நுட்பமாக அது முற்றிலும் வேறு விஷயமாகிறது.

இப்படி வியத்திலும், புகைப்படங்களிலும் முப்பரிமாணத்தன்மையைக் கொண்டுவர 'Composition', 'Perspective' என பல நுணுக்கங்கள் இருந்தாலும் ஒளியைப்பயன்படுத்தி முப்பரிமாணத்தன்மையை கொண்டுவருவது என்பது மிக முக்கியமானது.

நாம் பார்க்கும் முப்பரிமாணத்தன்மைக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது ஒளியால் உருவாகும் 'Shadows' மற்றும் 'High Lights' ஆகும். 

அதாவது ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது அப்பொருளில் இருக்கும் மேடுபள்ளங்களுக்கு ஏற்ப நிழலும், மேடும் ஏற்படும் அல்லவா. அந்த நிழல்பகுதி 'Shadaow' ஆகவும் மேட்டுப்பகுதி 'High Light' எனவும் கொள்கிறார்கள். 'Shadow' எதனால் உருவாகிறது? அங்கே ஏதோ ஒரு மேடு இருப்பதனாலயே நிழல் உருவாகும். ம்மேட்டின் முனையில்(Curve) அதிகமாக ஒளி பிரதிபலிக்கும். இந்த அதிக ஒளிப்பகுதியைத்தான் 'High Light' என்கிறார்கள். இது ஒரு பொதுதன்மை. வேண்டுமானால், எதாவது பொருளை கவனித்துப்பாருங்கள்.

இந்த 'Shadow' மற்றும் 'High Light' தான், அப்பொருளிலிருக்கும் மேடு பள்ளங்களை பிரித்துக்காட்டுவதன் மூலம், அந்த பொருளின் முப்பரிமாணத்தன்மை வெளிப்படக் காரணமாகிறது.

இதை அடிப்படையாக கொண்டே வியத்திலும், புகைப்படத்திலும் 'Light & Shadow' பயன்படுத்ப்படுகிறது.

இதைப் புரிந்துகொள்வது Three-point lighting முறையை புரிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதனாலயே இதை இங்கே குறிப்பிட்டேன். அதே தன்மையில் தான் இந்த Three-point lighting முறையில்..

'Key Light' என்பது ஆதார ஒளியாகவும் அதனால் கொஞ்சம் 'Shadow'வும் உருவாக்கப்படுகிறது. ஒரு பக்கம் ஒளியூட்டினால், நம் முக அமைப்பின் படி மறுபக்கம் நிழல் உருவாகும். அதனால் முகம் 'Flat'(2D)-ஆக இல்லாமல் முப்பரிமாணத்தில் இருப்பது புலனாகிறது. ஆனால் மறுபக்கம் தெரியாது அல்லவா. அந்தப் பக்கத்தைக்காட்ட ஒளி தேவைப்படுகிறது.

இங்கேதான் இந்த 'Fill Light' பயன்படுகிறது. இது மறுபக்கத்தை வெளிப்படுத்துவதோடு அந்த பக்கத்தில் விழும் 'Shadow'-வை குறைக்கிறது. இதனால் ஒரு முகம், அதன் முப்பரிமாணத்தன்மையோடு முழுமையாக வெளிப்படுகிறது.


இந்த முறை எல்லா முப்பரிமாண பிம்பங்களையும் வெளிப்படுத்த பயன்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லாவகை ஒளியமைப்புகளும் செய்யப்படுகின்றன. அது இரவோ பகலோ, காதலோ சோகமோ, அனைத்து சூழ்நிலைகளுக்கும் இந்த விதி பின்பற்றப்படுகிறது. அதனால் இதைச் சரியாகவும், முழுமையாகவும் புரிந்துகொள்வது மிக அவசியமாகும்.

Comments

விளக்கங்கள், எளிதாக புரிந்து கொள்ளும்படி இருக்கு.
சார் ரொம்ப அற்புதமா எழுதிகிட்டு வருகின்றீர்கள்.. விரைவில் இதனை புத்தகமாக போடலாம் சார்.... சினிமாவை பற்றி தொழில் நுட்ப புத்தகம் முதலில் வெளியிட்ட பெருமை உங்களுடையதுததான்..

வாழ்க் நீ எம்மான்
ஜீ... said…
சூப்பர் விஜய்! நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கப் படங்கள் அருமை. எனக்கு இதுவரையில் கமெராவில் back light உபயோகித்து எடுக்கப்பட்ட படங்களை மட்டுமே வேறு படுத்தி அறிய முடிந்திருந்தது...
நன்றி விஜய்!!
Vijay Armstrong said…
நன்றி நண்பர்களே..
சைவகொத்துப்பரோட்டா..
ஜாக்கி சேகர்..
ஜீ..
M S Sathish said…
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு .. மிக்க நன்றி .. தொடர்ந்து எழுதுங்கள் ...
Vijay Armstrong said…
நன்றி..M S Sathish
N. Jaganathan said…
இதுதான் நான் உஙகளிடம் இருந்து எதிர்பார்த்தது.
Vijay Armstrong said…
நன்றி ஜகன் சார்
சிவா said…
அருமையான பதிவு , தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்து வருவதற்கு நன்றி ...
ஜீ... said…
//ஜாக்கி சேகர் said...
சார் ரொம்ப அற்புதமா எழுதிகிட்டு வருகின்றீர்கள்.. விரைவில் இதனை புத்தகமாக போடலாம் சார்.... சினிமாவை பற்றி தொழில் நுட்ப புத்தகம் முதலில் வெளியிட்ட பெருமை உங்களுடையதுததான்..//

ஆமா பாஸ் அதேதான் நானும் நினச்சேன்...பாஸ் எனக்கு ஒரு புத்தகம் பார்சல்! :)
தருமி said…
நல்ல பதிவுக்கு நன்றி

ஒரு ஆசை ... இந்த இரட்டை வேடங்களில் மிகவும் தத்ரூபமாக எடுக்குறீர்களே .. எப்படிங்க? கொஞ்சம் லேசா அதைப்பத்தி சொல்லலாமா?
அருமையான பதிவு.. நிறைய விஷயங்கள் புரிகின்றன... நன்றி
சூப்பர்..ஆனா லைட்டுக்கு எங்கண்ணே போவேன்? :))
தேவதை said…
மிக அருமையான பதிவு ஒளி ஓவியரே... ஆர்வம் மிக்க இளைஞர்களுக்கு நல்ல தீனி..
pons frames said…
வாழ்த்துக்கள் விஜய் ஆம்ஸ்ட்ராங்!! முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையில் ரசிக்கும்படி எழுதியிருந்தீர்கள்.மிக அருமையான பதிவு நன்றி..............
அருமையான தொழில்நுட்ப பதிவு !


It's Not a Poetry
Vijay Armstrong said…
நன்றி முத்துவேல் சிவராமன் சார்
Naresh Babu said…
sir please explain about Depth of field, i mean how to measuring in camera with object........what is that calculation.....
Naresh Babu said…
sir please explain about depth of field, in shooting spot we are take the measurement of camera with object, why we are using that calculation in shooting spot what is the purpose?
mani kandan said…
wonderful explanation. thanks

Popular posts from this blog

கடக்கமுடியாத வலிகளுண்டு

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

GIGALAPSE