முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் ஒளிப்பதிவைப்பற்றிய ஒரு புத்தகம்

ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், தமிழில் ஒளிப்பதிவைப்பற்றிய தகவல்கள் அடங்கி புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். 'அசையும் படம்' என்னும் இந்தப் புத்தகம் ஒளிப்பதிவின் அடிப்படை, சினிமா தோன்றிய வரலாறு மற்றும் ஆதார தொழில்நுட்பம் ஆகியவற்றை விவரிக்கிறது.

எளிமையாக, தெளிவாக எல்லாருக்கும் புரியும்படியான, நிறைய தகவல்கள் கொண்ட புத்தகம் இது. சொல்லப்போனால் ஒளிப்பதிவில் ஆர்வம் இருக்கும் அனைவரின் கையிலும் இருக்கவேண்டிய ஒரு கையேடு இது.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா 6-1-11 அன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. விழாவில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு.பாலுமகேந்திரா, இயக்குனர்கள் திரு.ஜனநாதன், பாண்டிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




இந்தப் புத்தகத்தின் சிறப்பைப் புரிந்துகொள்ள இயக்குனர்களின் வார்த்தைகளை கவனித்தால் போதும்.

"நான் பதினைந்து ஆண்டுகளாக சினிமாவில் போராடி சிரமப்பட்டு கற்றுக்கொண்டதை இந்தப் புத்தகம் மொத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்த புத்தகம் முன்பே வெளிவந்திருந்தால் நான் இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். இந்தப் புத்தகத்தை வெளியே நின்று விற்றுக்கொடுக்க வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்"- இயக்குனர். ஜனநாதன்.

"இந்த புத்தகம் ஒளிப்பதிவுத்துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் உதவி இயக்குனர்களுக்கும், விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" - இயக்குனர்.பாண்டிராஜ்

"இந்தப் புத்தகத்தைப் பார்க்கும் போது எனக்குள் ஒரு ஏக்கம் வருகிறது, இது நான் செய்திருக்க வேண்டிய செயல் அல்லவா. செய்யத் தவறி விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது" - ஒளிப்பதிவாளர், இயக்குனர். பாலுமகேந்திரா


புத்தகம் கிடைக்கும் இடம்:
கீற்று பதிப்பகம்
23, அரங்கநாத நகர்
சிதம்பரம் - 608 001
செல்: 97896 92295
விலை ரூ. 150

சென்னை புத்தகக் கண்காட்சியில்:
விஜயா பதிப்பகம்
கடை எண்:134-135

ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
செல்:9025775455
மின்னஞ்சல்: [email protected]

கருத்துகள்

  1. பகிர்வுக்கு நன்றி சார். மிக அவசியமான ஒரு நூல். திரு.ராஜ்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    இப்போதெல்லாம் நிறைய எழுதுவதில்லையே ஏன்?

    பதிலளிநீக்கு
  2. வாங்கிட வேண்டியதுதான்.. நன்றி சார் அறிமுகத்துக்கு...

    பதிலளிநீக்கு
  3. நன்றி..செ.சரவணக்குமார்..ஜாக்கி சேகர்..

    //செ.சரவணக்குமார் said...இப்போதெல்லாம் நிறைய எழுதுவதில்லையே ஏன்?//- கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் சரவணக்குமார். மேலும் ஊரில் இல்லை. பயணம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழர்களிடம் காணப்படாத அரிய குணம் உங்களிடம் வெளிப்பட்டிருக்கிறது .. சக படைப்பாளியை பாராட்டும் குணம் நம்மிடம் அருகி வருகிறது மிக அற்புதமான புத்தகத்தை வெளிவந்தவுடன் அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

நாம் அந்நியர்கள்

இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.  இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான். 

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...