முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்

இன்றைய நிலவரப்படி காட்சியை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. ஃபிலிம்(Film), டிஜிட்டல்(Digital) என்ற இரண்டு பொதுப் பிரிவுக்குள் அவற்றை அடக்கிவிட முடிந்தாலும் அதற்குள்ளும் நிறைய பிரிவுகள் இருக்கின்றன.

ஃபிலிம் என்று பொதுவாக அழைத்துவிட்டாலும், 65mm, 35mm, 16mm படச்சுருள்களில் எதைப் பயன்படுத்தினோம் என்பதைப் பொருத்து நம் காட்சியின் தரம் இருக்கிறது. ஒரு விதத்தில் இவை ஒவ்வொன்றுமே மற்றவற்றைவிட பாதியளவு தர வித்தியாசம் கொண்டவை. ஒரு பிம்பம் பதிவுசெய்யப்படும் பரப்பளவு சார்ந்து தரம் வித்தியாசப்படும் என்பது நாம் அறிந்ததுதான். அதாவது 65mm ஃபிலிமை விட 35mm ஃபிலிம் என்பது பாதி அளவு சிறியது, அதனால் பிம்பம் பதியப்படும் பரப்பளவு குறைகிறது. அதைச்சார்ந்து 'Image resolution' குறைகிறது. இது பிம்பதின் காட்சித் தரத்தைக் குறைக்கும். இதேதான் 35mm ஃபிலிமுக்கும் 16mm ஃபிலிமுக்குமான வித்தியாசம்.

என்றாலும் 35mm ஃபிலிமின் தரம் நமக்கு போதுமானது என்பதனால் 65mm ஃபிலிமை நாம் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை, இடையில் சில வருடங்கள் பயன்படுத்தியதோடு சரி. (அகண்ட திரையில் பிரம்மாண்ட காட்சிகளைக் காட்டுவதன் மூலம் பார்வையாளனை பிரமிப்பில் ஆழ்த்தி திரையரங்கை நோக்கி இழுத்துவந்துவிட வேண்டும் என்பதனால்). ஆனால் 16mm ஃபிலிமைப் பயன்படுத்துவது என்பது உண்மையில் நம் காட்சித் தரத்தை பாதிக்க கூடியது, அதிலிருந்து பெறப்படும் காட்சித்தரம் (Image resolution) என்பது 35mm ஃபிலிமோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

இந்த குறைபட்ட தரம் சில நேரங்களில், சில காட்சியமைப்புக்கு போதுமானதாக இருந்தாலும் பல காட்சிகளுக்கு, கதை சொல்லலுக்குப் போதுமானதாக இருக்காது என்பதும் உண்மை. உதாரணத்திற்கு குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சியமைப்பு, காதல் போன்ற மென்மையான உணர்ச்சிகளை காட்சியாக வெளிப்படுத்தும்போதும், 'Low resolution'-ஆல் ஏற்படும் 'Grains' பார்வையாளன் காட்சியில் முழுமையாக உட்செல்வதைத் தடுக்கிறது. சிறந்த நடிப்பும், சிறந்த காட்சிப்படுத்துதலும், சிறந்த இசையும் இந்த குறையை நிவர்த்தி செய்துவிடலாம் என்றாலும், இந்த 'Low resolution/ Grains' என்பது 16mm ஃபிலிமிலிருக்கும் தவிர்க்க முடியாத குறையாகும். இதையெல்லாம் மீறி நாம் 16mm-இல் படமெடுப்பது என்பது தவிர்க்க முடியாத 'விட்டுக்கொடுத்தல்'(Compromise) தான்.

அதே போல் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் என்பதும் பல பிரிவுகளைக் கொண்டதுதான். 'அனலாக் விடியோவை'(VHS,Beta) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 'Digi-beta'வில் ஆரம்பித்து 'DV','DVC Pro','XD','HDV','HD' என ஒரு நீண்ட தொடர் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது இது. (இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை விளக்க ஒரு தனிக் கட்டுரையே எழுதவேண்டும். அதைப் பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு வேண்டுமானால் இணையத்தில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்)

திரைப்படத் தயாரிப்பில் செலவைக் குறைக்கவேண்டும் என்ற தேவை வரும்போதெல்லாம் யோசிக்கப்படும் பல மாற்று காரணிகளில் ஃபிலிமுக்காக செலவிடப்படும் பகுதியை குறைக்க வேண்டும் என்பதும் ஒன்று. ஃபிலிமுக்கு பதில் 'டிஜிட்டலை' பயன்படுத்தலாம் என்கிற யோசனை பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. டிஜிட்டல் என்பது வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மேலும் விலை குறைவானது என்பதனாலும், அதை எப்போதும் பரிசீலனை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் 2005/2007 வரைக்கும் கூட டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரிதாக நம்பிக்கை தரும் வகையில் அல்லது போதுமான தரத்தில் முன்னேறி இருக்கவில்லை.

'Star Wars' போன்ற சில படங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம்(DV/24p) பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவையெல்லாம தேவை கருதியும் பரீட்சார்த்த முறையிலுமே பயன்படுத்தப்பட்டது. பின்பு 'HD' தொழில்நுட்பம் திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கமலின் 'மும்மை எக்ஸ்பிரஸ்' DV/24p (Panasonic AG-DVX100 அல்லது AG-DVX102A) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. ஒளிப்பதிவு செய்தது ஒளிப்பதிவாளர் சித்தார்த் அவர்கள். அந்த கேமராவில் நொடிக்கு 24 பிரேம்கள் எடுக்க முடியும் என்பதே அதைப் பயன்படுத்தி அப்போது திரைப்படம் எடுக்க முயன்றார்கள்.

AG-DVX102A
AG-DVX100

இந்தியாவில்/தமிழில் முதல் 'HD' படம் ஒளிப்பதிவாளர் 'பி.சி.ஸ்ரீராம்' இயக்கி, ஒளிப்பதிவு செய்த 'வானம் வசப்படும் (2004)'. அதில் 'Panasonic AJ HDC 27'(720p) பயன்படுத்தப்பட்டது என நினைக்கிறேன். பின்பு இதே கேமரா பயன்படுத்தப்பட்டு 'சேரன்' இயக்கி 'M.S.பிரபு' அவர்கள் ஒளிப்பதிவு செய்த 'தவமாய் தவமிருந்து' திரைப்படம் எடுக்கப்பட்டது. சேரனின் முந்தய படமான 'ஆட்டோகிராப்பில்' இந்த கேமரா சில காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது, ஒளிப்பதிவு செய்தது ஒளிப்பதிவாளர் 'துவாரகநாத்' அவர்கள்.


Panasonic AJ HDC 27

ஆனாலும் அப்போதைய HD தொழில்நுட்பம் திருப்திகரமாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஃபிலிம் தரத்திற்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் அதன் அருகில் வந்துவிடும் தொழில்நுட்பமாக வளர்ந்துவிடக்கூடிய சாத்தியம் கொண்டதாக கருதப்பட்டது.

ஒரு புறம் ஃபிலிமுக்கு மாற்றாக டிஜிட்டல் ஆலோசிக்கப்பட்ட அதே நேரத்தில் 'DI' மற்றும் 'டிஜிட்டல் திரையிடல்' (Digital Projection) போன்ற தொழில்நுட்பங்களும் நடைமுறைக்கு வந்தன. இந்தத் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைப் பயன்படுத்திகொண்டு திரைப்படத்தயாரிப்பில் செலவை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.



இந்த காலகட்டத்தில்தான் 'RED ONE' கேமராவைப் பற்றி பேச்சு அடிபட ஆரம்பித்தது. அதன் தயாரிப்பாளர்கள் சொன்ன அதன் தொழில்நுட்பம் முதலில் நம்ப முடியாததாகவும், சாத்தியம் இல்லாததாகவும் கருதப்பட்டது.



'HD' தொழில்நுட்பம் என்பது '1920 X 1080' 'ஃபிக்சல் ரேஷியோவை'(Pixel Ratio) நோக்கி இருந்தபோது 'RED ONE' கேமரா '4096 X 2304' ஃபிக்சல் ரேஷியோவை(4K Resolution) தரும் என்று சொல்லப்பட்டதும், கேமராவின் அளவும், அதன் விலையும் நம்பமுடியாததாக கருதப்பட்டது.



2005-இல் 'RED ONE'க்கான அறிவிப்பும் வேலையும் துவங்கப்பட்டாலும், 2007-இல் முதல் 'RED ONE' கேமரா தொழில்ரீதியான நடைமுறைக்கு வந்தது. 'RED ONE' கேமரா மற்ற டிஜிட்டல் கேமராக்களைப்போன்று 'HD' தொழில்நுட்பத்தில் இல்லாமல் 'RAW' format தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. புகைப்படத்துறையில் பயன்பாட்டிலிருந்த 'RAW' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதும், 4K ரெசுலுஷனைக் கொடுத்ததும் 'RED ONE'-இன் சிறப்பு அம்சங்கள்.



'RED ONE' அதன் அறிமுகப்படுத்தலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது. 4Kவிலிருந்து 4.5K(4520 x 2540 pixels) மேம்பட்டதும், பதிவு செய்யும் கோடாக்கை மாற்றியும் (REDCODE 42), குறைந்த வெளிச்சத்தில் படம்பிடிக்கும் தகுதியை அதிகபடுத்தியும் (Mysterium-X) தன்னை வளர்த்துக்கொண்டே வருகிறது.

தமிழில் 'ரெட் ஒன்' கேமராவைப் பயன்படுத்திப் பல படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 'உன்னைப்போல் ஒருவன்', 'தமிழ்படம்', 'திருதிரு துருதுரு' மற்றும் 'மன்மதன் அம்பு' போன்ற படங்களில் முழுமையாக 'ரெட் ஒன்' பயன்படுத்தப்பட்டிருக்கிறது.





ஆங்கிலத்தில் பல படங்கள், 'ரெட் ஒன்'-ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் எனக்கு ரொம்ப பிடித்தது, இயக்குனர் 'Steven Soderbergh'-இன் 'சே' படம். இரண்டு பாகமாக எடுக்கப்பட்டிருக்கிறது.



தொழில்நுட்ப விவரங்கள்:

SENSOR                                   14 MEGAPIXEL MYSTERIUM-X™

PIXEL ARRAY                         5120 (h) x 2700 (v)

S/N RATIO                               66db

DYNAMIC RANGE                13+ stops

MAX IMAGE AREA              4480 (h) x 2304 (v)

LENS COVERAGE                 24.2mm (h) x 12.5mm (v) x 27.3 mm (d)

DEPTH OF FIELD                  Equivalent to S35mm (Motion) lens
                                                  Equivalent to 16mm (Motion) lens in 2K RAW

ACQUISITION FORMATS      4.5K RAW (2.4:1)
                                                     4K RAW (16:9, HD, 2:1, and Anamorphic 2:1)
                                                     3K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)
                                                     2K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)

PROJECT FRAME RATES      23.98, 24, 25, 29.97 fps @ 4.5K, 4K
                                                      plus 50, 59.94fps @ 3K, 2K

DELIVERY FORMATS *         4K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
                                                     2K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
                                                     1080p RGB or 4:2:2, 720p 4:2:2 : Quicktime, JPEG
                                                     Avid AAF, MXF. 1080p 4.2.0, 720p 4:2:0 : H.264, .MP4

MONITOR OUTPUTS              HD-SDI and HDMI with Frame Guides and Look Around
                                                     720p RGB or 4:2:2
                                                     SMPTE Timecode, HANC Metadata, 24-bit 48Khz Audio

DIGITAL MEDIA                      REDFLASH (CF) Module : (16GB Media)
                                                      RED SSD™ (64GB, 128GB, 256GB Capacity)

REDCODE™                              12-bit RAW : RC28, 36, 42 Quaity Levels
                                                      1-30 fps 4.5K, 4K
                                                      1-60 fps 3K
                                                      1-120 fps 2K

AUDIO                                         4 channel, uncompressed, 24 bit, 48KHz.

MONITORING OPTIONS   RED LCD 5" Flat Panel Display
                                                 RED PRO LCD 7" Flat Panel Display
                                                 BOMB EVF™ High Definition Viewfinder

REMOTE CONTROL          USB-2, GPI Trigger

WEIGHT                                10lbs. Body

CONSTRUCTION                 Aluminum Alloy

TEMPERATURE RANGES  Operating Range: 0˚C to +40˚C (32˚F to 104˚F)
                                                  Storage Range: -20˚C to +50˚C (-4˚F to 122˚F)

* FROM REDCINE-X


அடுத்த கட்டம்: ரெட் ஒன் கேமரா அடுத்தக்கட்டத்தை நோக்கியும் நகர துவங்கி விட்டது. Canon 5D/7D போன்ற போட்டியாளர்களை சமாளிக்க மேலும் புதிய வகை கேமராக்களை, வசதிகளை அளிக்கிறது. அந்த வகையில் அதன் இரண்டு புதிய கேமராக்களான 'EPIC' மற்றும் 'SCARLET' பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.





கருத்துகள்

  1. மிகவும் குழப்பாமல் தொழில்நுட்பக் கட்டுரைகளை தருவதற்கு மிக்க நன்றி..!!அடிக்கடி எழுதுங்கள்..!! :)

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி நிறய விஷயங்கள் தெரிந்துக்கொண்டென். சிறிய சந்தெகம் Red one, Red MX, Red Epic இவற்றில் என்ன வித்யாசம், புதிதாக வரப்போகும் Red Scarlet பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

    நன்றி..

    பதிலளிநீக்கு
  3. ரெட் ஒன் கேமராவைப்பற்றி ஓரளவு தெரிந்து கொண்டொம். அப்படியே கொஞ்சம் ஐ-மேக்ஸ் பற்றியும் எழுதுங்களேன். . . . .

    பதிலளிநீக்கு
  4. Thanka sir, Very Use Ful Messege...sir minimam wich resolvection to Make Good Quality Film

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன