முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் அந்நியர்கள்




இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது. 


இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான். 

'ருவாண்டா படுகொலைகள்' என்று அழைக்கப்படும் அந்த அவலம் ருவாண்டாவில் நடந்தது. 1994 ஆம் ஆண்டு. அடித்துக்கொண்ட இரண்டு இனம் 'துட்ஸி'(Tutsi) மற்றும் 'உத்து'(Hutu).


ருவாண்டா ஆப்பிரிக்காவில் மத்திய கிழக்கில் இருக்கும் ஒரு நாடு. அதைச் சுற்றி இருக்கும் நாடுகள் 'உகாண்டா', 'புருண்டி', காங்கோ மற்றும் 'தான்சான்யா'. எல்லா நாடுகளைப்போலத்தான் பல இனங்கள் இருந்தாலும் 'துட்ஸி' மற்றும் 'உத்து' இனங்கள் பெருன்பான்மையானவை. 


பதினைந்தாம் நூற்றாண்டில் 'துட்ஸி' இனம் அதிகாரத்திலிருந்திருக்கிறது. 1886-இல் ஜெர்மானியர்களால் பிடிக்கப்பட்டு பின்பு 1919-இல் 'வார்சைலஸ்' ஒப்பந்தத்திற்குப் பிறகு பெல்ஜியம் ஆட்சியின் கீழ் வந்தது. அவர்களின் ஆட்சியின் கீழ் 'துட்ஸி' இனம், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படிப்பு, அரசியல் மற்றும் வணிகத்தில் மேன்மையடைதது. இரண்டு இனத்திற்குமான பகை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது எங்கேயும் காலனி அரசுகளால் கைகொள்ளப்படும் முறைதான். 


1959-களில் 'உத்து' இனத்தலைவர்களால் சமூக எழுச்சிப்போராட்டங்கள் நடத்த இயக்கங்கள் துவங்கப்பட்டு போராடத் துவங்கினர். இது முதல் 'ருவாண்டா உள்நாட்டு யுத்தமாக' மாறி 20,000 'துட்ஸி' மக்கள் கொல்லப்பட்டனர், 2,00,000 'துட்ஸி' மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக எல்லை கடந்துப் போனார்கள். ருவாண்டா 1961-இல் பெல்ஜியத்திடமிருந்து விடுதலை பெற்றது. அதிகாரத்தில் 'உத்து' இனம்.


அகதிகளாக வெளியேறிய 'துட்ஸி' மக்களைக்கொண்டு Rwandan Patriotic Front (RPF) என்ற அரசியல் அமைப்பும், Rwandan Patriotic Army (RPA) என்ற இராணுவ அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு இனத்திற்கும் தொடர்ந்து சண்டைகள் நடந்து கொண்டிருந்தன. 


1993-இல் போராளிகளுக்கும் (RPF) ருவாண்டன் அரசாங்கத்திற்கும் இடையே தான்சானியாவிலிருக்கும் 'அருஷா' நகரில் ஒரு அமைதி ஒப்பந்தம் (Arusha Accords) கையெழுத்தாக இருந்தது. அப்போது ருவாண்டாவின் அதிபராக இருந்த 'Juvenal Habyarimana' அதிகாரத்தை 'RPF'-யுடன் பகிர்ந்துக்கொள்ள முதலில் மறுத்தார். பின்பு அவர் சம்மதித்தப்போது 'RPF' கையெழுத்திட மறுத்தது. மொத்தத்தில் 'அமைதி ஒப்பந்தம்' நிறைவேறாமல் அப்படியே இருந்தது.


இந்த நிலைமையில் ஏப்ரல் 6,1994. 'புருண்டி' அதிபரும் ருவாண்டா அதிபர் 'Juvenal Habyarimana'வும் வந்த விமானம் ருவாண்டா தலைநகர் 'கிகாளி'(Kigali) விமானத்தளத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருவரும் இறக்க, மீண்டும் கலவரம் துவங்கியது. 


நாடு முழுவதும்  'Interahamwe' மற்றும் 'Impuzamugambi' ஆகிய இரண்டு 'உத்து' படைகளால் துண்டாடப்பட்டது. கலவரங்கள், படுகொலைகள் துவங்கப்பட்டன. இதற்கு ஆளும் 'உத்து' அரசாங்கமே உதவி செய்தது. 


அப்போது அங்கே முகாமிட்டிருந்த ஐக்கியநாட்டுப் படைத்தளபதிக்கும் 'ருவாண்டன் விமானப்படை' பிரிவினர்க்கும் வாக்குவாதம் முற்றியதால், நிலைமை தங்கள் கைமீறிப் போவதால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் அதிகாரத்தை அப்போதைய ருவாண்டா பிரதமர் 'Agathe Uwilingiyimana'-விடம் ஒப்படைத்து, அவருக்கு பாதுகாப்பாக பத்து வீரர்களும் கொடுக்கப்பட்டனர். பிரதமர் வானொலியில் அமைதிக்கான வேண்டுகோள் கொடுக்க நினைத்தார். ஆனால் வானொலி நிலையம் கைப்பற்றப்பட்டிருந்தது. அதனால் அவர் தன் பேச்சை ரத்து செய்யவேண்டியதாகிற்று. பின்பு பிற்பகலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்பு படையும் படுகொலை செய்யப்பட்டது.


நாடு முழுவது இருந்த 'துட்ஸி' மக்கள் கொல்லப்பட்டனர். முற்போக்கு 'உத்து' இனத்தவரும் கொல்லப்பட்டனர். மக்கள், அவர்களின் பக்கத்து வீட்டினர்களாலேயே கொல்லப்பட்டனர். அரசாங்கம் கொடுத்த துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் வைத்துக் கொன்றனர். மாதாக்கோவில்களில் அடைக்கலம் அடைந்தவர்களை கோவிலோடு சேர்த்து எரித்தனர். ரோடுகள் முழுவதும் தடைகள் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர்.


இராணுவம் ஊர் ஊராகச் சென்று வானொலியில், தன் பக்கத்து வீட்டுக்காரரைக் கொல்லும்படி 'உத்து' மக்களிடம் கட்டளை இட்டார்கள், மறுத்தவர்கள், தாங்களே தங்களைக் கொல்லத் தூண்டப்பட்டனர். இரண்டு மாதங்கள் இந்த படுகொலைகள் நிகழ்ந்தது. பல நாடுகள், தங்கள் தூதரகங்களை இழுத்து மூடிவிட்டு ஓடிவிட்டன. 



கிகாளியில் 'துட்ஸி' மக்கள் பதுங்கிருந்த பள்ளிக்கூடத்திற்கு (Ecole Technique Officialese school) வந்து இராணுவம், அங்கே காவலுக்கிருந்த பெல்ஜியம் அமைதிப்படையை (UNAMIR) வெளியேச் சொல்லியது. கொல்ல வந்தவர்கள் வெளியே காத்திருக்க, ஏப்ரல் 11,1994-இல் அப்பாவி மக்களை அம்போவென்று விட்டு விட்டு பெல்ஜியம் படை வெளியேர, 'உத்து' இராணுவம் பள்ளிக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. அன்று அவர்கள் 500க்கும் மேற்பட்ட சிறுவர்களோடு சேர்ந்து, இரண்டாயிரம் மக்களைக் கொன்றனர். ஜூலையில் 'துட்ஸி' புரட்சிப்படை (RPF) ஆட்சியைக் கைப்பற்றிய போதுதான், அந்த வெறியாட்டம் அடங்கியது.


ஏப்ரல் 6-லிருந்து ஜூலை மத்திய வரைக்கும் கணக்கு வழக்கில்லாமல் மக்கள் கொல்லப்பட்டனர். நாஜிக்கள் படுகொலைகள் மற்றும் கம்போடியா போல்பார்ட் படுகொலைகள் நிகழ்ந்தபோது அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்தார்கள். ஆனால் இங்கே கணக்கே இல்லை. சிலர் 5,00,000 முதல் 10,00,000 வரை இருக்கும் என குத்துமதிப்பாகச் சொன்னார்கள். ஐக்கிய நாட்டுச் சபை 8,00,000 என்றது.  


கலவரம் துவங்கியபோதே ஐக்கியநாட்டுப்படை கொஞ்சம் கொஞ்சமாகத் தன் ஆட்களை வெளியேற்றியது. பெல்ஜியம் அமைதிப்படை மட்டும் அங்கே இருந்தது, அதுவும் பிரதமரைக் காக்க இருந்தப் பாதுகாப்புப் படை கொல்லப்பட்டபோது தன் அமைதி முயற்சியை பின்வாங்கிகொண்டது. அந்தப் பள்ளிச் சம்பவத்திற்குப் பிறகு முழுமையாக தன் படையை விலக்கிக்கொண்டது.


குறைவான ஐக்கிய நாட்டுப்படையைக் கொண்டு அதன் தளபதி 'Lt-Gen Dallaire' மட்டும் அங்கே இருந்து மற்ற வெளிநாட்டினரைப் பத்திரமாக வெளியேற்றினார். சில பகுதிகளை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 'பாதுகாப்புப் பகுதியாக' அறிவித்து 20,000 'துட்ஸி' மக்களைக் காப்பாற்றினார். 


அமெரிக்கா, ருவாண்டாவின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட மாட்டோம் என்று சொல்லிவிட்டது. படுகொலைகளுக்குப் பிறகும் அது தன் அமைதிப்படையை அனுப்ப மறுத்துவிட்டது. பின்னாளில் அதிபர் 'பில் கிளிங்டன்' ஃபிரண்ட்லைன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்னார் "நாங்கள் 5000 யு.எஸ் துருப்புகளை அனுப்பியிருந்தால் 5,00,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் ".


மே 17,1994-இல் ஐ.நா, ருவாண்டாவில் படுகொலைகள் நடப்பதை உறுதிச்செய்தபோது, 5,00,000 மக்கள் கொல்லப்பட்டிருத்தார்கள் என 'ரெட் கிராஸ்' பதிவு செய்திருக்கிறது. ஐ.நா 5,500 துருப்புகளை ருவாண்டாவிற்கு அனுப்பியது. அதில் பெரும்பான்மையோர்கள் ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்தவர்கள். 


இந்த எண்ணிகைதான் படுகொலைகள் துவங்குவதற்கு முன்பாக பாதுகாப்பிற்காக, ஐ.நா படைத்தளபதி கேட்ட படையின் எண்ணிக்கை. அப்போது தர மறுத்துவிட்டார்கள். அமெரிக்காவிடம் 50 பாதுகாப்பு வாகனங்களை ஐ.நா கேட்டபோது அந்த வாகனங்களை கொண்டுவந்து சேர்ப்பதற்கு போக்குவரத்துச் செலவுக்காக மட்டுமே 6.5 மில்லியக் கேட்டார்களாம். அந்தப் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டேபோனது. இங்கே பல லட்சம் உயிர்கள் காவு வாங்கப்பட்டது. பிணம் தின்னிக் கழுகுகள் தன் குணத்தை மாற்றிக்கொள்ளுமா என்ன?


ஐ.நா படைகள் படுகொலைகளைத் தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்காததால், ஜூன் 22-ஆவது நாள் பாதுகாப்பு அவை, பிரான்ஸின் படைகளை களமிறங்க அனுமதி அளித்தது. பிரான்ஸ் படைகள் பக்கத்து நாடுகளான கோமா (Goma) மற்றும் ஜயீர் (Zaire) நாடுகளில் களம் அமைத்து படுகொலைகளைத் தடுக்க முயன்றன. அவர்கள் வந்திறங்கிய போது பெரும்பான்மையான 'துட்ஸி' மக்கள் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது வெளியேற்றப்பட்டிருந்தனர். RPF படையைக் கொண்டு அரச படையை எதிர்த்து படுகொலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. RPF ஆட்சிக்கு வந்தது.


1997-க்குப்பிறகு அந்த படுகொலைகளுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு, 2001-இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. விசாரணைகள் துவங்கப்பட்டன. ஐ.நா-வும்  சர்வதேச குற்றவியல் மன்றம் அமைத்து விசாரிக்கத்துவங்கியது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களை ஐ.நா-வும், உள்ளூர் கும்பலின் தலைவர்களை ருவாண்டாவும் விசாரித்தன. மரணதண்டனை சார்ந்த தண்டனைகளில் விவாதங்கள் ஏற்பட்டு இன்னும் அந்த வழக்குகள் இழுத்துக்கொண்டு இருக்கின்றன.


பத்து ஆண்டுகள் கடந்து 2004-இல் இந்தப் படுகொலைகள் நடந்த காலத்தை களமாக வைத்து 'ஹோட்டல் ருவாண்டா'(Hotel Rwanda) என்ற படம் வெளிவந்தது. 'Paul Rusesabagina' என்ற 'உத்து' இன மனிதன் தன் சக மனிதர்களை காப்பாற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 'பவுல்' ஒரு வெளிநாட்டு விடுதியை (Hotel des Mille Collines) நிர்வகிக்கும் அதிகாரி. அவன் 'உத்து' இனத்தவன். ஆனால் அவன் மனைவி 'துட்ஸி' இனத்தைச் சார்ந்தவள். இந்தக் கலவரங்கள் துவங்கியபோது அவளையும் அவள் உறவினர்களையும் காப்பாற்ற முயற்சிக்கிறான். மேலும் அந்த விடுதியில் பணிபுரிபவர்களையும், அடைக்கலம் தேடி வந்தவர்களையும் காப்பாற்றுகிறான். இராணுவ அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தும், தன் சேமிப்புப் பணத்தையெல்லாம் கொடுத்தும், 'துட்ஸி' இனத்தவர்களையும் காப்பாற்றுகிறான். அப்படி அவன் காப்பாற்றியது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்.



'Terry George' என்ற அயர்லாந்து இயக்குனரால் இயக்கப்பட்ட இந்தப்படம் சர்வதேச படவிழாக்களில் பல விருதுகள் பரிந்துரைக்கப்பட்டு, விருதுகளையும் பெற்றது. மிக நுட்பமானப் படம். படுகொலைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். மனதைப் பதறவைக்கும் காட்சிகள் நிறைய உண்டு. நெகிழ்வான நேரங்களும், மனிதம் சார்ந்த உணர்வுகளை உயிர்ப்பிக்கும் படமிது. படத்தைப் பாருங்கள். நான் சொல்ல வந்தது படத்தைப் பற்றியல்ல.


காலம் காலமாக மனிதம் கொல்லப்படுகிறது. மனிதர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். உலகம் முழுவதும் மக்கள் இருக்கிறார்கள். அரசாங்கங்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் உலகப் பொது பொருளாதாரம். உலகமே ஒரு கிராமம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.ஆனால் எந்த அரசும் மனித உயிர்கள் பறிக்கப்படும் போதெல்லாம் உதவிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்பதுமில்லை. தடுப்பதுமில்லை. கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கின்றன. இதை நாம் மிகச் சமீபத்தில், நமக்கே ஏற்பட்டபோதும் உணர்ந்தோம். 


ஆனால் தோழர்களே, இது நமக்கு மட்டும் நடப்பதில்லை. வரலாற்றில் இது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். 


நாம் சமூகம் என்ற போர்வையில் கூடி வாழ்கிறோம் என்பது பெயரளவில்தான். மனிதன் துன்பதிலிருக்கும் போது எந்த சகமனிதனும் உதவிக்கு வருவதில்லை. உயிர் போகும் போது மட்டுமல்ல. சிறு பிரச்சனைகளுக்குக்கூட நாம் தனித்தனியாகத்தான் போராட வேண்டியதாக இருக்கிறது. மனிதர்கள் தங்களுக்கு வரும்வரை எதையும் பொருட்படுத்துவதில்லை. கேட்டால் வேறு வழியில்லை, அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்பார்கள்.


அப்புறம் எதற்கு நாம் கூடிவாழத் தலைப்பட்டோம் என்பது கேள்விக்குறிதான். 


ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் நண்பர்களே... நாம் கூடி வாழ்ந்தாலும் நாம் மற்றவர்களுக்கு அந்நியர்கள்தான். நாகரீகம் என்பதற்கும், மனிதநேயம் என்பதற்கும் அர்த்தமென்ன என்பதை சற்றே சிந்திக்கலாம் நண்பர்களே.!







கருத்துகள்

  1. அருமையா எழுதி இருக்கீங்க... ரெண்டு மாசம் முன்னாடிதான் இந்தப்படம் எப்படிப்பட்ட படம்னு கூட தெரியாம சும்மா பார்க்க ஆரம்பிச்சேன்... இப்போ என்னுடைய all time favorite-ல இதுவும் ஒன்னு... பல விஷயங்கள்ல ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்டையே மிஞ்சி இருந்தது... முக்கியமா ஐக்கிய நாடுகளின் முகத்திரையை கிழித்ததில்..

    பதிலளிநீக்கு
  2. சார் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை... பார்த்துவிடும் ஆவலில் உள்ளேன் பகிர்தலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சார்.

    மறக்கவே முடியாத திரைப்படம் ஹோட்டல் ருவாண்டா. ரிலீசான புதிதில் சத்யம் தியேட்டரில் பார்த்தேன். இரண்டு நாட்கள் வரை அதன் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை.

    அந்தக் கொடூரத்தின் அவலங்களைக் கண் முன் நிறுத்திய சினிமா. பதிவு இந்தப் படத்தைப் பற்றியதல்ல என்றாலும் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான்கூட இத்திரைப்படம் பற்றியும் இந்தக் கொடுமையான வரலாற்றுச் சோகம் பற்றியும் பதிவு எழுதி வைத்துள்ளேன்.

    //காலம் காலமாக மனிதம் கொல்லப்படுகிறது. மனிதர்கள் படுகொலைச்செய்யப்படுகிறார்கள். உலகம் முழுவதும் மக்கள் இருக்கிறார்கள். அரசாங்கங்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் உலகப் பொது பொருளாதாரம். உலகமே ஒரு கிராமம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.ஆனால் எந்த அரசும் மனித உயிர்கள் பறிக்கப்படும் போதேல்லாம் உதவிக்கு வருவதில்லை. தட்டி கேட்பதுமில்லை. தடுப்பதுமில்லை. கைகள் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கின்றன. இதை நாம் மிக சமிபத்தில் நமக்கே ஏற்பட்டபோது உணர்ந்தோம். //

    சத்தியமான வார்த்தைகள் சார்.

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் ஊரே பத்தி எரியும் போது புருஷனும் பொண்டாட்டியும் தன் குழந்தைகள்,மச்சான் மச்சினி,அவர்கள் குழந்தைகளை மட்டும் பற்றி கவலை பட்டு,கட்டி அணைத்து முத்தமிடும் இதுபோல படம் நல்ல படமா?மேலே நீங்க எழுதுனதுல இருந்த வீரயம் ,இந்த படத்துல இருக்கா?இது ஒரு ஓவர்ரேட்டட் படைப்பு.

    பதிலளிநீக்கு
  5. அருமையா எழுதி இருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  6. இரண்டு மூன்று முறை இந்தப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இதன் பின்புலத்தை உங்கள் மூலம்தான் அறிகிறேன். சக மனிதரோடு மனிதராக வாழத்தலைப்படுவோம். பகிர்வுக்கு நன்றி. அடுது என்ன படம் ஒளிப்பதிவு செய்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி நண்பர்களே..
    ஜாக்கி சேகர்..
    செ.சரவணக்குமார்..
    Saravana Kumar MSK
    வெறும்பய..
    ragu said..
    N. Jaganathan..

    பதிலளிநீக்கு
  8. அடையாளம் அற்ற நண்பரே..

    உங்கள் கருத்துகளைச் அடையாளத்தோடு வெளிப்படுத்து பழகுங்கள்...
    கருத்து சொல்லவே 'ஆண்மையற்ற' நீங்களெல்லாம் மனிதம் பற்றியோ, படைப்பாற்றல் பற்றியோ பேசத் தகுதியற்றவர்கள்..

    ஆனாலும் உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. உலகத்தில் எத்தனை 'பொட்டப் பசங்க' இருகிங்க என்றாவது தெரிந்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. N. Jaganathan..சார் நன்றி..

    அடுத்தப்படம் விரைவில் அறிவிப்பு வரும். அடுத்த மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களைப்பற்றி கலை இயக்குனர் சந்தானம் அவர்கள் சொன்னார்கள்.

    நேரம் கிடைக்கும் போதுச் சொல்லுங்கள், நேரில் சந்திப்போம்.

    நன்றி..

    பதிலளிநீக்கு
  10. @ Anonymous,
    முதல் விஷயம்: இந்தப்படம் 100% உண்மைக்கதை.. நடந்ததை எடுத்து இருக்கிறார்கள்..

    இரண்டாவது விஷயம்: உங்கள் கருத்திலிருந்து நீங்கள் படத்தை முழுமையாக பார்க்கவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை எனத்தெரிகிறது...

    5 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட இடத்தில், ஒரு தனி மனிதர் தன்னுடைய அந்தஸ்தையும் பணத்தையும் பயன்படுத்தி, வேலையையும் உயிரையும் பணயம் வைத்து குடும்பத்திலுள்ள 6 பேரையும், மேலும் 1200 பேரையும் காப்பாற்றி இருக்கிறார்.. வேனில் அவர் மனைவியையும் குடும்பத்தையும் அனுப்பிவிட்டு, தான் ஹோட்டலிலேயே மற்றவர்களுக்கு பாதுகாப்பாக தங்க முடிவெடுக்கும்போது, குடும்பம் சமூகம் இரண்டுமே அவனுக்கு முக்கியம் என்பது தெளிவாக படமாக்கப்பட்டு இருக்கிறது...

    Paul Rusesabagina-வின் இந்த மனிதநேயத்திற்காக உலகம் முழுக்க பல நாடுகளிலும் அமைதிக்கான விருது அவருக்கு கொடுக்கப்பட்டது...

    பதிலளிநீக்கு
  11. அருமையானப் பதிவு! வாழ்த்துக்கள் ஆம்ஸ்ராங்!
    இதுவரைப் படம் பார்க்காதவர்களுக்கு ...

    http://nammatheater.blogspot.com/2010/05/hotel-rwanda-2004.html

    பதிலளிநீக்கு
  12. நன்றி காயத்ரிதேவி..

    உங்கள் கருத்தை பெயரோடு வெளிப்படுத்தும் தைரியம் உங்களிடம் இருக்கிறது. அதற்குத்தான் இந்த நன்றி.(திட்டினதிர்க்கு என்று நினைத்துவிடப்போகிறார்கள். அப்புறம் எல்லாரிடமிருந்து யார் திட்டுவாங்குவது)

    அதுகூட இல்லாதவர்களைப் பற்றிதான் என் கோபம். அந்த வார்த்தை எதைக்குறிக்கிறது என்பது இங்கு எல்லாருக்கும் தெரியும். அது ஒரு பாலினத்தைக் குறிப்பதல்ல என்பதும் தமிழ் அறிந்தவர்களுக்கு தெரியும். நான் நீங்கள் குறிப்பிடும் தொனியில் பயன்படுத்தவில்லை என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை.

    ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?. பாலினம் சார்ந்து நீங்களே ஏன் உங்களை மட்டமாக கருதுகிறீர்கள். நான் அப்படி கருதுபவன் அல்ல. எல்லோரும் சமம் என்றுதான் நான் கருதுகிறேன்.

    உங்களை புண்படுத்தும் செயல் என்றவுடன், நீங்கள் எவ்வளவு கீழ்தரமாக என்னைத் திட்டுகிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? உங்களுக்கு இருக்கும் அதே உரிமையை, மனிதாபிமான அற்ற கருத்தை தன் பெயர்கூட வெளியிட தயங்கும் ஒருவன் வெளியிடும்போது, அவனைத் திட்ட பயன்படுத்தினால் அது தவறாகிவிடுகிறது.

    என் கோபம் எங்கே என்றால். உங்கள் கருத்து என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்க அடையாளத்தோடுச் சொல்லுங்கள். தன் அடையாளம் மறைத்துக்கொண்டு எதிர்மறை கருத்துச் சொல்லுபவனை, அதுவும் என்னைத் தேடிவந்துச் சொல்லுபவனை, நான் என்னவென்று அழைக்கட்டும் என்பதை நீங்களேச் சொல்லுங்கள்.

    என்னை நீங்கள் திட்ட ஒரு சவுகரியம் இருக்கிறது...! அந்த தைரியமோ அல்லது உங்கள் அறியாமையோ, எதுவாகட்டும் உங்கள கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட என் கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்களை வீனாக கோபப்படுத்தியதிர்க்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பு:

    //நார் நாராக கிழித்துவிடுவேன்// - எதை?

    //துடைப்பம் பிஞ்சிடும்,நான் ஐடிதுறையில் வேலை செய்கிறேன்,ஆனாலும் நான் தான் வீட்டில் டாய்லெட் சுத்தம் செய்வேன்,என்னிடம் நல்ல கருந்துடப்பம் உண்டு,வெளுத்து வாங்கிவிடுவேன்,மாதர் தம்மை இழிவு செய்யும் மடையனை கொளுத்துவாள் இந்த காயத்திரி// - இந்த வரியைச் சொன்னவர் ரொம்ப பாவங்க.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் காயத்ரி தேவி அவர்களுக்கு...

    ஒரு வார்த்தை சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு மிக அழகாக வார்த்தை ஜாலம் புரிந்து இருக்கின்றீர்கள்...

    முகம் தெரியாமல் வந்த கருத்து சொல்பவனை ஆண்மை இல்லாதவன் என்று சொல்ல அந்த வார்த்தை பிரயோகம்... இதை விட மிக கேவலமான வார்த்தை பிரயோகங்கள் இதே பதிவுலகத்தில் வந்து இருக்கின்றது...

    அதை தவறு என்று சொல்லி மன்னிப்பு கூட கேட்டுவிட்டார்...

    அந்த வார்த்தை தவறு என்று உங்களுக்கு பட்டு இருந்தால்... அதை நாகரீகமாக சொல்லி இருக்கலாம்...அந்த வார்த்தையை எழுதியதற்கு இவ்வளவு கோபம்...

    சரி இவ்வளவு கோபம் கொண்டவர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உங்கள் தளத்துக்கு வந்து பார்த்தேன்... நீங்கள் அமேரிக்காவின் புளோரிடாவில் இருப்பது தெரிய வந்தது....

    அமெரிக்காவில் இருப்பதால் இயற்க்கையிலேயே தைரியம் வந்து இருக்கின்றது...

    அண்ணா யூனிவர்சிட்டியில் படித்து விட்டு அமெரிக்காவில் பொட்டி தட்டி இன்னமும் மகாகவி பாரதியை மறக்காமல் இருப்பதற்கு என் நன்றிகள்..

    பிஞ்ச தொடப்பத்தை அப்படியே பத்திரமாக வைத்து இருங்கள்... மகாகவி பாரதி சொன்னது இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலகத்தில் எந்த இடத்தில், எந்த நாட்டில் மாதர் தம்மை இழிவு செய்தாலும் அது பொருந்தும்....


    பிட்ச்,மதர்பக்கர்,பிளடி பிட்ச்,ஸ்லட்,ஓர்,இதெல்லாம் நீங்கள் வாழும் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மூச்சுக்கு 300 தடவை மாதர்களை தினமும் இழிவு செய்யும் அமெரிக்கர்களை...

    அந்த பிஞ்ச துடைப்பத்தால் முடிந்தால் அடியுங்கள்... வேண்டும் என்றால் சுதேசி துடப்பத்தையும் அனுப்பி வைக்கின்றோம்..

    பதிலளிநீக்கு
  14. @ காயத்ரிதேவி,
    அந்த வார்த்தை ஆண்மை இல்லாததைக் குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர, பெண்களை இழிவுபடுத்த அல்ல... அது பயன்படுத்தப்பட்ட இடம், context, எல்லாம் உங்களுக்குப் புரிந்திருந்தும், வார்த்தையை பிடித்துக்கொண்டு விளையாடுகிறீர்களே... :(

    விஜய் பெண்கள் மீது மரியாதை உள்ளவர் என்பது, அவருடைய இந்தப்பதிவை படித்தாலே புரியும்... http://vijayarmstrongcinematographer.blogspot.com/2010/03/55.html

    பெண்களை இழிவுபடுத்துவதை பலர் நிறுத்தி பல வருடமாயாச்சு... பெண்கள் பலர்தான் அக்னிப்பார்வை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்... அந்த வார்த்தை பிரயோகம் தவறு என்றால் சாதாரணமாகவே கூறலாம்... கோபப்படவே தேவையில்லை... பாரதியார் பாட்டு தெரிந்த உங்களுக்கு வள்ளுவர் சொன்ன “இனிய உளவாக இன்னாத கூறல்” பற்றியும் தெரிந்திருக்கும்... உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் மிக மிக தவறு என்கிறேன்...

    உங்களை அந்த வார்த்தை புண்படுத்தியதை விட, நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள் இதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பலரைத் தாக்கியுள்ளன... அவர் செய்தது தவறு என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செய்தது அதைவிட பல பல மடங்கு தவறு... இல்லையா?

    உங்கள் feedback மிகவும் constructive-ஆக இருக்கட்டுமே...

    நானும் அதே அண்ணா யூனிவர்சிடியில்(கிண்டி) அதே 2002-06ல் படித்து, அதே சாஃப்ட்வேர் துறையில் உள்ளவன்தான்... உங்கள் நணபர்களில் பலர் எனக்கும் நண்பர்கள்... யோசித்துப்பாருங்கள்... நம் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை என்றால், நமது feedback/solution இப்படிதான் இருக்குமா? இந்த கோபத்துடன், தேவைக்கு அதிகமான வார்த்தைகளை, சம்பந்தமில்லாத குடும்பத்தினரை நோக்கி வீசுவோமா? அல்லது சரியான முறையில் அளவாகப் பேசி பிரச்சினையைத் தீர்ப்போமா? கோபமில்லாத தருணத்தில், மீண்டும் ஒருமுறை உங்கள் பின்னூட்டத்தை நீங்களே படித்துப்பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  15. நன்றி ஜெய்..

    அந்த பெயரற்றவன் மீண்டும் என்னை திட்டி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தான். இது யாரோ வேலையற்றவனின் வேலையாகத்தான் இருக்கிறது.

    மற்றவனின் பெயரில் பின்னூட்டம் போடக்கூடிய சாத்தியகூறு இருக்கிறது போல. அதைப் பயன்படுத்தி முன்பே கூட 'எழுத்தாளர் சாருநிவேதித்தா' பெயரில் ஒரு பின்னூட்டம் இருந்தது.விசாரித்தால் அது அவரில்லை என்று தெரிந்தது. சந்தேகமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், அப்படி வேறுபெயரில் பின்னூட்டும் போடமுடியுமா?

    பதிலளிநீக்கு
  16. என்ன கொடும சார் இது... புதுசு புதுசா ஃபோர்ஜரி பண்ணுறாய்ங்களே... :)

    பதிலளிநீக்கு
  17. நண்பர்களே..ஒரு செய்தி.

    நம்முடைய 'கமெண்ட் ஆப்ஷனில்' நாம் யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம் என்று தேர்வு செய்திருந்தால், பின்னூட்டம் இடுபவர், யாருடைய Url-ஐயும் கொடுக்க முடிகிறது. அதனால் மற்றவரின் வலைப்பூ விலாசத்தில் பின்னூட்டம் இடுகிறார்கள்.

    கவணமாக இருக்கவும்.

    பதிலளிநீக்கு
  18. காலம் கலிகாலம் ஆயிடுச்சே ஜெய்..

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் உங்கள் உழவன் "திரட்டின்" தொடுப்பைக்கொடுக்கவும்.
    http://ulavan.net/topsite/index.php?a=user_cpl

    பதிலளிநீக்கு
  20. Vijay,

    I appreciate your writings. The last two paragraphs are not in relevance with the purpose of the post as you mentioned below:

    ஆனால் தோழர்களே இது நமக்கு மட்டும் நடப்பதில்லை. வரலாற்றில் இது தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

    You may have to reorganize your post; anyway I got your point. Did you get a chance to watch the movies Blood Diamond, Lord of Wars, and Charlie Wilsons war? After watching any one of them if you read my comments to one of your earlier blog post give below, you will understand (more) what I meant that time:


    ---------------------------------------------
    Mohan said... June 13, 2010 7:48 AM

    Vijay,

    I want to touch another aspect of this issue (and this blog post). These Adivasis should be careful with people like Arundhati roy, in other words they should identify who are their friends. I am not supporting what Adivasis are doing now, but I believe they have problems and the Indian government instead of helping them, just like they do it for others, suck and oppress them.

    Adivasis should think thoroughly to find out what they want and how best they can achieve it. They can discuss and consult with journalists, activists (Arundhati roy, so-called Maoists) and with the Indian Government officials to figure out what is the best solution and the way of achieving it, but they should make a decision. If they listen and follow non-native people such as Arundhati roy and Maoists, the result will be like what happened in Srilanka and African countries like Sierra Leone, Nigeria, Liberia etc.

    I know what I am saying is very difficult for them, they have to go through a lot of obstacles and back stabbings.
    ---------------------------------------
    Mohan

    பதிலளிநீக்கு
  21. நன்றி மோகன்..

    நான் இந்த பதிவுகள் எழுதுவதுவதின் நோக்கம். தமிழில் ஒளிப்பதிவைப்பற்றி தகவல்கள் இணையத்தில் எதுவும் இல்லையே என்ற என் கவலையை சிறிதளவேனும் போக்க என் அளவிலான முயற்சியே. மேலும் நான் கற்றுக்கொள்வதை நண்பர்களுக்கு புரியும் விதத்தில் பகிர்ந்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அவ்வளவே.

    மேலும் திரைப்படங்கள் சார்ந்து பதிவுகள் பலரால் எழுதப்படுகிறது. பொதுவாக எனக்கு வரலாறுகளைப் படிக்க பிடிக்கும். அதன் தொடர்ச்சியாகவே வரலாற்றுப்படங்கள் பார்க்கிறேன். ஒரு தொழில்நுட்பாலனாக படங்களைப் பார்த்தாலும், வரலாற்றுப்படங்களிலிருக்கும் உண்மை என்னை எப்போதும் கவறுகின்றன, யோசிக்க வைக்கின்றன. இதன் அடிப்படையிலேயே என் திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன்.

    அரசியல் பேசுவதோ, அரசியல் சார்ந்த கருத்துகள் முன்வைப்பதோ என் நோக்கம் அல்ல.

    தனிமனிதனாக, சராசரி குடிமகனாக நாம் கவனிக்க வேண்டிய நிலைகளையே 'எடுத்துக்கொண்ட திரைப்படம்' சார்ந்து என் கருத்தாக முன்வைக்கிறேன்.

    'நாம் அந்நியர்கள்' பதிவில் கடைசி பத்திகள் அதைத்தான் குறிக்கின்றன. அதில் நான் சொல்லவரும் கருத்து, 'நாம் என்னதான் கூடிவாழ்ந்தாலும், தனித்தனியாகத்தான் இருக்க நினைக்கிறோம் என்பதுதான்'. யோசித்தால் தனிமனிதனைச்சார்ந்து நம்முடைய சுயநலன்கள் தெரியவருகிறது. அது சின்னதிலிருந்து பெரிது வரை தொடர்கிறது.

    மேலும், இதை எல்லாம் தாண்டி, ஒரு சகமனிதனாக நான் வெளிப்படுத்தும் கருத்துகளை மதித்து, படித்து, ஆதரித்தும், வேறுபட்டும் பின்னூட்டும் இட்டும், என் எழுத்தார்வத்தை பூர்த்தி செய்யும் நண்பர்கள் இருப்பதனாலயே தொடர்ந்து எழுதுகிறேன்.

    இங்கே உங்களுக்கு நான் தனிப்பட்டு நன்றிச் சொல்ல விரும்புகிறேன். என் கருத்துகளை மதித்து அதற்கு பின்னூட்டும் இடுவது என்னை சந்தோசப்படுத்துகிறது நண்பரே.

    பதிலளிநீக்கு
  22. பின்னூட்டம் இடுவதுமில்லாமல், விவாதிக்க முயற்சிப்பதும், கருத்துகள் சொல்லுவதிற்கும் நன்றிகள் மோகன்.

    இந்த பின்னூட்டம் உங்களின் கேள்விக்கான பதிலா என்று தெரியவில்லை. இல்லை என்றால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  23. Vijay,

    Thanks for your response and your writings. I am always feel happy about reading your posts. I did not raise any question. I want to clarify what I tried to say in my earlier comment. First of all, I don't give any importance to the post's Title, so I just started reading your post. Initially, you said two ethnic groups fought each other....then said it happened in our neighboring country...finally ended with saying that it not only happened to us it is happening continuously in the human history. I thought the post is over, but just like in Tamil movies in order to justify the Title, at the climax there will be some dialogue that reminds the movie Title, just like that suddenly you started writing something related but not relevant to the main theme.

    It is purely my opinion. Please don't take it as my criticism. I am also just like you or even below you. In addition, I don't have any political aspirations and I am a common middle class man.

    One more thing: if possible watch the movie Hidalgo and read வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் Page 350 conversation between Peeya Thevar and Thasilthar. In the movie they will show a scene about Wounded Knee Massacre, it is similar to what is happening to the Adivasis now and what happened to Peeya Thevar.

    Thanks again,
    Mohan

    பதிலளிநீக்கு
  24. நன்றி மோகன்...
    உங்களின் கருத்து புரிகிறது. நீங்கள் சொல்லுவது சரிதான்.

    பாடம் பார்த்ததில்லை, பார்த்துவிடுகிறேன். புத்தகம் படித்திருக்கிறேன், மீண்டும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. you must watch "some times in april" directed by raoul peck" this move is also talks about the problem between hutu & tusi s,

    பதிலளிநீக்கு
  26. நன்றி janaa sir

    இந்தப்படம் நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. i watched this movie before two month on that time i didnt aware of racisim between tutsi and hutu, after read ur review i came to knw about them. nice review sir

    பதிலளிநீக்கு
  28. ஒரு படத்தை வெறும் பொழுது போக்காக பார்க்காமல் உணர்வுப்பூர்வமாக பார்த்து அதன் வரலாற்று பின்னணியோடு எழுதப்பட்ட விமர்சனம் நிறைவு செய்த வரிகள் வாசிக்கையில் மனம் கனத்தது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...