முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'Gravity' திரைப்படம் ஒரு பார்வை:


'Gravity' படத்தை எத்தனை முறை பார்த்தாலும், படத்தின் முடிவில் அது ஏற்படுத்தும் பரவச மனநிலையிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளிவரவே முடிவதில்லை. அத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதுவெழுப்பும் மனக் கிளர்ச்சியை வார்த்தைகளால் இங்கே விவரித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். இசையை அனுபவிக்கும் போது ஏற்படுமே.. அதுபோன்றொரு மன ஓட்டத்தை இப்படம் தொடர்ந்து ஏற்படுத்துகிறது. சிந்தனைத் தொடர்ச்சி ஒன்று ஏற்பட்டு வளர்ந்துகொண்டே போகிறது. வாழ்க்கை, அறிவியல், தத்துவம், சித்தாந்தம், இயற்கை, ஆத்திகம், நாத்திகம், இன்பம், துன்பம் என அது பயணிக்கும் பாதைகள் சொல்லில் அடங்கா.

பூமியிலிருந்து 372 மைல் தூரத்தில் தனித்து விடப்படும் கதாப்பாத்திரங்களோடு நாமும் கைவிடப்பட்டதான ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. அண்ட வெளியில் பரவிக்கிடக்கும் ஆழ்ந்த அமைதியே மனமெங்கும் எதிரொலிக்கிறது. பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார்கள் என்பதை திரையரங்கில் விரவிக்கிடக்கும் அமைதி உணர்த்துகிறது. மற்ற திரைப்படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வேறானதொரு தளத்தில் இயங்குவதை படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே புரிந்துக்கொள்ள முடிகிறது. படத்தின் மீதிருந்த பிரமிப்பு அகலாமல், அப்படத்தின் தயாரிப்புப் பணிகளைப்பற்றி தெரிந்துக்கொள்ள முயன்றேன். அது உண்டாக்கும் பிரமிப்பு படத்தை விட அதிகமானதாக இருக்கிறது.

வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. நீண்ட ஷாட்டுகள், அண்டவெளியில் விரவிக்கிடக்கும் அமைதியை முன்னிறுத்தும் இசைக்கோர்ப்பு, இயற்கையோடு இயைந்த ஒளியமைப்பு என பல காரணிகளால் இப்படம் முற்றிலும் வேறானதொரு அனுபவத்தை கொடுக்கிறது.

இப்படம் வெறும் 200 ஷாட்டுகளால் பின்னப்பட்டிருக்கிறது. பொதுவாக படங்களில் ஏறக்குறைய 2000 ஷாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அண்டவெளியில் ஒலி இருப்பதில்லை என்பதால் இசையை மட்டுமே பயன்படுத்திருக்கிறார்கள். 'Sound Effects' என்று சொல்லப்படும் சூழல் ஓசைகளைப் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். அடுத்த முறை, படத்தைப்பார்க்கும் போது அதையும் கவனிக்க வேண்டும். மூன்று தடவைகள் படத்தைப்பார்த்தும் அது என் கவனித்திற்கு வரவே இல்லை. வழக்கமான முறைப்படி, எழுதப்பட்ட கதை, திரைக்கதை, வசனத்தைக் கொண்டு படம் பிடிக்கபட்டு, பின்பு மற்ற பிற்தயாரிப்புப் பணிகளால் முழுமையடையும் ஒரு திரைப்படத்தைப்போல இத்திரைப்படம் தயாரிக்கப்படவில்லை. இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.


இப்படத்தின் ‘Workflow’ பற்றிய ஒரு பார்வை:

1. Orbit Path: படத்தில் கதாப்பாத்திரங்கள் அண்டவெளியில் பயணிக்கும் பாதைகள் இவை. இதன் மூலம் கதாப்பாத்திரங்களின் பின்புலத்தில் தெரியும் காட்சிகள் முடிவு செய்யப்படும். முதலில் இது CG தொழில்நுட்பாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டன.

2. Previs: இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் அனிமேஷன் தொழில்நுட்பாளர்களுடன் இணைந்து, குறைந்த தரத்தில் (Low Res Images) உருவாக்கிய படத்தின் அனிமேட்டட் காட்சிகள். ‘Virtual Camera’ நகர்வோடு இருக்கும் இக்காட்சிகளே படத்தின் அடிப்படை பிரதியாக செயல்பட்டன.

3. Prelight: ஒளிப்பதிவாளர் CG தொழில்நுட்பாளர்களோடு இணைந்து படத்தில் வரும் ‘Virtual Sequence’-களுக்கு ஒளியமைப்பைச் செய்கிறார். இதன் மூலம் படத்தில் இடம்பெறும் அனிமேட்டட் காட்சிகளின் ஒளியமைப்பு முடிவு செய்யப்படுகிறது. இக்காட்சிகளும், படம் பிடிக்கப்படும் நடிகர்களின் பிம்பங்களும் ஒன்றிணைக்கப்படும் போது, ஒளியமைப்பு ஒத்துப்போக வேண்டுமல்லவா! இதன் அடிப்படையிலேயே ஒளிப்பதிவாளர் நடிகர்களை படம் பிடிக்கும்போது ஒளியமைப்பு செய்வார்.

4. Pre-DI: வடிவமைக்கப்பட்ட காட்சிகளின் வண்ணத்தை ஒழுங்கமைத்தல். DI முறையில் காட்சிகளின் வண்ணத்தை ஒழுங்கமைப்பதன் மூலம் திரைப்படத்தின் ‘Final Look’ எப்படி இருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டது.


5. Techvis: 'Previs'மற்றும் 'Prelight' தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கேமரா நகர்வைத் தீர்மானிப்பது. இதன் மூலம் கதாப்பாத்திரங்களின் பார்வைக் கோணத்தில் காட்சிகளை முடிவுசெய்து அதன் அடிப்படையில் ஒளியமைப்பு முறையை தேர்ந்தெடுப்பது. அதாவது, அக்காட்சிகளில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களின் மீது விழும் ஒளியின் மூலத்தை முடிவு செய்வது. இப்படம் முழுவதும் ஒளியானது மூன்று மூலங்களிலிருந்து வருவதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சூரியன், இரண்டாவது சூரிய ஒளி பூமியின் மீது பட்டுப் பிரதிபலித்து வரும் ஒளி.. அதாவது பூமியின் கடல் மீது இருக்கும் போது பிரதிபலிக்கும் ஒளியானது நீலமாகவும், பாலைவனத்தின் மீதிருக்கும் போது பிரதிபலிக்கும் ஒளி மஞ்சளாகவும் இருக்கும். மூன்றாவது நிலவில் பட்டு பிரதிபலிக்கும் ஒளி.

6. Live-Action Production with LED Box: அடுத்து, அனிமேட்டட் செய்யப்பட்ட கதைக் களத்தோடு கதாப்பாத்திரங்களை இணைக்க, நடிகர்களை படம் பிடிக்கும் செயல். அப்படிப் படம் பிடிக்கப்படும் கதாப்பாதிரங்களின் மீது விழும் ஒளியானது அவர்களின் பின்புலத்தின் ஒளியோடு ஒத்திருக்க வேண்டும் என்று முன்பே பார்த்தோம் அல்லவா? அப்படி ஒத்திருக்க என்ன செய்ய வேண்டும்? பின்புலக் காட்சியில் இருக்கும் ஒளியானது இவர்கள் மீது விழ வேண்டும். ஆனால் இங்கே காட்சிகள் உண்மையானது அல்ல. கணினியில் உருவாக்கப்பட்டவை. எனில், எப்படி அக்காட்சிகளின் ஒளியை இவர்கள் மீது விழ செய்வது? இங்கேதான் ஒரு புதுவகையான தொழில் நுணுக்கம் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதாவது நடிக்கும் நடிகர்களைச் சுற்றி LED Panels-ஐக் கொண்டு ஒரு அறை (20' cube) உருவாக்கப்பட்டு, நான்கு புறமும் சூழப்பட்ட அந்த LED Panel-களில் காட்சியில் இடம்பெறும் பின்புலக்காட்சிகளை ஒளிபரப்பு செய்வது. தொலைக்காட்சித் திரைகளிலிருந்து வெளி வரும் ஒளியை நினைவுகொள்ளுங்கள், அதேப்போலத்தான். காட்சிகளிலிருந்து வெளிப்படும் ஒளியானது நடிகர்களின் மீது படும். இதன் மூலம் ஒளியானது ஒத்திருப்பதைச் சாத்தியமாக்க முடிந்தது. இக்காட்சியை ‘Motion-Control Camera’-வைக் கொண்டு படமாக்கினார்கள். இந்த கேமராவிற்கான நகர்வுப் பாதையை முன்பே ‘Techvis’ மூலமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

7. Live-Action Production with Puppeteering Rig: சிறப்புக் கருவிகள் கொண்டு நடிகர்களின் நகர்வு ‘Zero Gravity’ தன்மையில் அமைக்கப்பட்டு படம் பிடிக்கப்படுகிறது.

8.Live-Action Production/Traditional Shoot: பின்பு ‘Space-Capsule’-இன் உட்புறப் படப்பிடிப்பும், ஏனைய லைவ் ஆக்‌ஷன் படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது.


9. Conform and Rendering:  CG-இல் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களின் இயக்கம், அங்க அசைவு போன்றவற்றையும், காட்சியில் இடம்பெறும் மற்ற விண்கலங்களின் இயக்கம் போன்றவற்றையும் அனிமேட்டர்கள் இறுதி செய்கிறார்கள். மேலும் திரைப்படத்திற்கு தேவையான அதிக அளவு தரத்தில் (high-quality) அனிமேஷன் செய்யப்படுகின்றன. படத்தில் இடம்பெறும் அண்ட வெளிக்காட்சிகள் மற்றும் பூமி பந்தின் காட்சிகள் ‘NASA’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில்/ பயன்படுத்தி/ சரி பார்த்து, நேர்த்தி செய்யப்படுகின்றன.

10. Integrating Live Action and CG: முழுமையடைந்த அனிமேஷன் காட்சிகளையும், நடிகர்களைக் கொண்டு படம் பிடித்த காட்சிகளையும் ஒன்றிணைக்கிறார்கள். இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் அனிமேட்டர்களும் இணைந்து நடிகர்களின் அசைவுகளுக்கு ஏற்ற விதத்தில் CG ஷாட்டுகளின் இயக்கத்தைச் சீர் செய்கிறார்கள். அதாவது நடிகர்களின் இயக்கமும் கணினியில் வடிமைக்கப்பட்ட ஏனைய துணை பாத்திரங்கள், பின்புலம் மற்றும் கருவிகளின் இயக்கமும் ஒத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். மற்றொருபுறம் ஒளிப்பதிவாளர் கணினி வல்லுநர்களோடு இணைந்து காட்சிகளுக்குத் தேவையான ஒளியமைப்பை டிஜிட்டலாக ஒழுங்கமைக்கிறார். இறுதியாக திரைப்படத்திற்கு தேவையான காட்சிகள், அதாவது கணினியில் வடிவமைக்கப்பட்ட காட்சிகளும், படம்பிடிக்கப்பட்ட காட்சிகளும் இணைந்த காட்சிகள் கிடைக்கின்றன. இதை, இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் சரி பார்த்து உறுதி செய்கிறார்கள்.

11. DI Ingest: கணினியில் வடிவமைக்கப்பட்ட ஏனைய துணைக் காட்சித்துண்டுகளுக்கு தனியாக வண்ண சீரமைத்தல் நடக்கிறது.


12. DI Grade: திரைப்படத்திற்கான காட்சிக் கோர்வைகள் கிடைத்த பின் அவற்றுக்கு 2D தரத்தில் வண்ண ஒழுங்கமைத்தல் (DI) நடக்கிறது. இறுதியாக 2-D DCP, Kodak Vision 2383 release prints and an HD master -ஆகப் பதிவு செய்யப்படுகிறது.

13. Stereoscopic Conversion: இருபரிமாணக் காட்சிகள் முப்பரிமாணக்காட்சிகளாக மாற்றப்படுகின்றன.

14. 3-D Grade: முப்பரிமாணக்காட்சிகளாக மாற்றப்பட்ட காட்சித்துண்டுகள், மீண்டும் முப்பரிமாணத் திரையிடலுக்காக வண்ணம் ஒழுங்கமைத்தல் செய்யப்படுகிறது. 3D திரையிடல் (4.5 foot-lambert) மற்றும் Imax 3-D (7 foot-lambert)-ஆன பிரதிகள் தனித்தனியாக ஒழுங்கமைக்கபட்டு தயார் செய்யப்படுகின்றன.File formats: படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகளின் தரம் பற்றிய தகவல்கள்:

- Live-action production: ArriRaw 2880x1620 deBayered to Log C v3

- Framestore CG output: 2060x876 10-bit Log C DPX

- Framestore external mattes output:16-bit RBGa TIFF

- 2-D graded files: 2048x858 10-bit Log Cஇயக்குனர் Alfonso Cuarón மற்றும் ஒளிப்பதிவாளர் Emmanuel Lubezki

இப்படியாக, நாம் திரையரங்கில் பார்க்கும் இறுதி வடிவ பிரதி தயார் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது நம்முடைய பிரமிப்பு இரட்டிப்பாகிறது. மேலும், வருங்காலத் திரைப்படத் தயாரிப்பு முறைகள் அடையப் போகும் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதைத் தவற, நாம் இங்கே செய்யக்கூடியது ஏதுமில்லை. வேண்டுமானால், ஒன்று செய்யலாம்.. அது மிக சுலபமானதும் கூட..‘ஆ.. என்று வாயப்பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம்’. அவ்வளவுதான்!
*

Gravity: IMAX Behind the Frame:


Gravity Official Main Trailer (2013) * Thanks to American Cinematographer Magazine

கருத்துகள்

 1. ஒரு அர்புதமான திரைப்படைத்தை பார்க்க எனை ஆற்றுப்படுதியமைக்கு நன்றி"வாழ்க்கை, அறிவியல், தத்துவம், சித்தாந்தம், இயற்கை, ஆத்திகம், நாத்திகம், இன்பம், துன்பம் என அது பயணிக்கும் பாதைகள் சொல்லில் அடங்கா".என்ற வரிகலை வாசித்து விட்டு படம் பார்த்த பொழுது படம் முழுவதும் உன்கள் கட்டுரையின் நினைவு வந்து கொண்டிருந்தது.உங்கள் கருத்தொடு நானும் கைகொற்துக்கொள்கிறென்.தொழில்னுட்ப வளற்சி,புலமை என்ற னிலைல் மட்டுமின்றி கதை அம்ஸத்திலும் நாம் அவர்களுக்குப் பின்னால் பலநூறு ஆன்டுகல் பின்தன்கி இருக்கிறொம். இப்படதில் படம் முழுவதும் வியாபித்திருப்பது ஒறெ ஒறு பெணின் ஆலுமை மட்டுமெ. இதுவெல்லம் இன்கு சாத்தியமா? நம்மிடம் இருப்பதெல்லம் வெரும் பாஸாங்குகள்தான்.
  சினிம பாஸாங்கு, கலை பாஸாங்கு,இலக்கிய பாஸாங்கு,அரசியல் பாஸாங்கு, இவை அணைத்திர்க்கும் அடிப்படையான பண்பாட்டுப் பாஸாங்கு.
  நம்மிடமும் காசு இருக்கு அதனால Camera வாங்கிட்டொம் Computer வாங்கிட்டொம் வேரென்ன (இந்னாட்டில் பிறந்ததற்காக நானும் ஆஆ.. னு வாய பொளந்துக்னு படம் பார்தென்)

  பதிலளிநீக்கு
 2. ஒரு அர்புதமான திரைப்படைத்தை பார்க்க எனை ஆற்றுப்படுதியமைக்கு நன்றி"வாழ்க்கை, அறிவியல், தத்துவம், சித்தாந்தம், இயற்கை, ஆத்திகம், நாத்திகம், இன்பம், துன்பம் என அது பயணிக்கும் பாதைகள் சொல்லில் அடங்கா".என்ற வரிகலை வாசித்து விட்டு படம் பார்த்த பொழுது படம் முழுவதும் உன்கள் கட்டுரையின் நினைவு வந்து கொண்டிருந்தது.உங்கள் கருத்தொடு நானும் கைகொற்துக்கொள்கிறென்.தொழில்னுட்ப வளற்சி,புலமை என்ற னிலைல் மட்டுமின்றி கதை அம்ஸத்திலும் நாம் அவர்களுக்குப் பின்னால் பலநூறு ஆன்டுகல் பின்தன்கி இருக்கிறொம். இப்படதில் படம் முழுவதும் வியாபித்திருப்பது ஒறெ ஒறு பெணின் ஆலுமை மட்டுமெ. இதுவெல்லம் இன்கு சாத்தியமா? நம்மிடம் இருப்பதெல்லம் வெரும் பாஸாங்குகள்தான்.
  சினிம பாஸாங்கு, கலை பாஸாங்கு,இலக்கிய பாஸாங்கு,அரசியல் பாஸாங்கு, இவை அணைத்திர்க்கும் அடிப்படையான பண்பாட்டுப் பாஸாங்கு.
  நம்மிடமும் காசு இருக்கு அதனால Camera வாங்கிட்டொம் Computer வாங்கிட்டொம் வேரென்ன (இந்னாட்டில் பிறந்ததற்காக நானும் ஆஆ.. னு வாய பொளந்துக்னு படம் பார்தென்)

  பதிலளிநீக்கு
 3. தாங்கள் ஆஸ்கர் ஜூரி மெம்பர்ராக இருக்க வேண்டியவர்

  இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு