கடலோரக் கவிதைகள்: இயக்குநர் பாரதிராஜாவோடு ஓர் உரையாடல்

Image
நேற்று, BRIIC மாணவர்களுடன், பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படத்தை அவரோடு சேர்ந்து, அகண்டத்திரையில் பார்த்தோம். 
எளிமையான காதல் கதை.  காதல் கதைகளுக்கே உரிய பரவசமும், துயரமும் நிரம்பியக்கதை. 1986-இல் வெளியானத்திரைப்படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்,  நம்மைப் பாதிக்கிறது. படம் துவங்கியதிலிருந்து இறுதி வரை கட்டிப்போடுகிறது. எனில், அதன் செய்நேர்த்தியையும், கலைத்தன்மையையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் திரைப்படத்தின் மீது ஒரு இயக்குநருக்கு இருக்க வேண்டிய ஆளூமையை இத்திரைப்படம் நன்கு உணர்த்தியது. 
திரைப்பட இயக்கம் என்பது என்ன..? ஒரு கதையை, அதன் சுவாரசியம் குறையாமல், உணர்வுப்பூர்வமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பது தானே..!? 
அதை மிகச் சிறப்பாக பாரதிராஜா செய்திருக்கிறார் என்பதும், அவர் ஏன் தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பதையும் இத்திரைப்படம் பார்க்கப் புரிந்துக்கொள்ள முடியும். படம் பார்த்தவர்கள் பலருக்கும் அது புரிந்திருக்கும். பார்க்காத நண்பர்களையும், ஏற்கனவே பார்த்த நண்பர்களையும் இத்திரைப்படத்தை (மீண்டும்) பார்க்க பரிந்துரைக்கிறேன். 


படம் முடிந்த பின்.. இயக்குநர…

'ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை' பெங்களூரு (Cinematography Workshop - Bengaluru)

'ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை' பெங்களூரு. (Cinematography Workshop - Bengaluru) 

கடந்த முறை நடந்த பயிற்சி பட்டறைக்கு 'திரு.பிரசன்னா' அவர்கள் பெங்களூருவிலிருந்து வந்து கலந்துகொண்டார். வரும் 26/27 தேதிகளில் நடக்கவிருக்கும் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை' (Cinematography Workshop) அவரின் விருப்பத்தினாலும்/ஏற்பாட்டாலும் தான் நடக்கிறது

சென்னை பயிற்சி பட்டறையை தவற விட்ட நண்பர்கள் இப்பயிற்சி பட்டறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வரும் நண்பர்கள் இரவு தங்கவும் வசதியிருப்பதாக சொன்னார். அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். விருப்பம் தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் குறையும்/மாறும் என்று நினைக்கிறேன்

Contact: 
Prasanna kumar, 
+91 97405 98888, prasannavirggo@gmail.com

நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்


Comments

Popular posts from this blog

கடக்கமுடியாத வலிகளுண்டு

காமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்