என் வலைத்தளம்: அறிமுகம்

பல புதிய நண்பர்கள், என்னைப்பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்துவைத்திருக்கவில்லை. பல நேரங்களில், நான் பணியாற்றியப்படங்கள் இவை என்று சொல்லும்போது.. “ஓ.. அது நீங்கள் ஒளிப்பதிவு செய்தப்படமா..!’ நன்றாக இருந்தது சார், ஆனால், அது நீங்கள் என்று தெரியாது என்கிறார்கள்”. இது சகஜம் தான். முகநூலில் அல்லது பணியிடங்களில் அறிமுகமாகும் புதிய நண்பர்களுக்கு நம்முடைய முந்தைய பணிகளைப்பற்றி தெரியாதுதான். நமக்கும் அப்படிதான். அவர்களைப்பற்றி முழுமையாக தெரிவதில்லை. தேவைப்படும் ஒவ்வொரு தடவையும் நம்மைப்பற்றி, நாமே பேசுவது ஒருவகையில் கூச்சத்தையும் அயர்ச்சையும் தருகிறது.

இதற்குதான், வலைத்தளம் பயன்படுகிறது. நம்மைப்பற்றியும், நம்முடைய பணிகளைப்பற்றியும் தகவல்களை பதிந்து வைத்துவிட்டால், தேவைப்படுவோர் அறிந்துக்கொள்ள ஏதுவாகும்.
இதோ, என் வலைத்தளம் இது. ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஒரு பார்வை இடலாம்.உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.


பின்குறிப்பு:
என்னைக்கேட்டால், ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு வலைத்தளத்தை வைத்திருப்பது நன்மைத்தரும் என்று நினைக்கிறேன். வளர்ந்து வரும் நவீன காலத்தில், வலைத்தளம் என்பது உங்களின் விலாசமாக கருத்தப்படும். என்னுடைய தளத்தை நானே வடிவமைத்தேன். தேவைப்படும் நண்பர்களுக்கு வடிவமைத்தும் தரலாம் என்று நினைக்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள். கட்டணம் உண்டு.. :)

http://www.vijayarmstrong.com


Comments

Gokul Krishnan said…
நன்று என்பதை விட மேல்....
உங்கள் கருத்து வரவேற்கப்படவேண்டிய ஒன்று.. தமிழர்கள் தவறிய விஷயங்களில் ஒன்று வரலாற்றை பதிவு செய்யாமல் விட்டதும்தான்.. வாழ்த்துக்கள் உங்கள் வலைதளத்துக்கு

Popular posts from this blog

கடக்கமுடியாத வலிகளுண்டு

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

GIGALAPSE