முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழில் ஒரு காமிக்ஸ் தளம்:

http://www.mbcomicstudio.com இரண்டு நாட்களுக்கு முன்பாக, நானும் நண்பர் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கும்போது, காமிக்ஸ் பற்றி பேச்சு வந்தது. அண்மையில் வெளியான முத்து காமிக்ஸின் ‘என் பெயர் டைகர் (Mr.Bluberry)’ பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தோம் எனலாம். அதன் களம், கதை, ஓவியம் பற்றிய பிரமிப்பு எங்களைத் பலமாகவே தொற்றிக்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழில் ஏன் யாரும் காமிக்ஸ் தயாரிக்க, வரைய முயற்சிப்பதில்லை, அப்படியான தகுதியோ, முயற்சியோ இங்கே இல்லவே இல்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டோம். தமிழில் ஆங்காங்கே, ஓரிரு முயற்சிகள் நடந்துவந்திருக்கின்றனதான் எனினும், எங்கள் ஆதங்கத்தில் தவறொன்றுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள்தானே? தமிழில் கால காலத்திற்கும் நிலைத்து நிற்கும், தகுதியான பல அற்புதமான கதைகள் இருக்கின்றவே, அவற்றை எல்லாம் காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றினால் எப்படி இருக்கும்.? குறிப்பாக ‘பொன்னியன் செல்வன்’ நாவலை, காமிக்ஸ் தொடராக மாற்றினால், அது தமிழ் சமுகத்திற்கு எத்தனைப் பெரிய கொடையாக இருக்கும். இதைச் செய்ய இங்கே ஆட்கள் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் ஆட்களைப் பயன்படுத்தியாவ

English: The Five C's of Cinematography: Motion Picture Filming Techniques

There are many great books on filmmaking, today I’d like to mention one particular book that keeps getting my attention and admiration: The Five C’s of Cinematography: Motion Picture Filming Techniques by Joseph V. Mascelli. According to American Cinematographer the Five C’s is one of the three most important books on cinematic technique ever published. That should count for something! So, what are the 5 C’s? Camera Angles: Camera angle refers to the angle at which a camera is positioned when filming. High-angle shots look down on a subject. Low-angle shots aim up at a subject to make the subject appear big and dominant in the screen. Wide shots are used to capture a subject's surroundings and often are used when establishing a scene. The various angles are chosen to help explore a film's narrative development. Continuity: Continuity is the consistency of a film's static and dynamic elements. A film must flow naturally to make sense to a viewer and shots are

The Five C's of Cinematography: Motion Picture Filming Techniques

2009 -இலிருந்து ‘ஒளிப்பதிவு குறித்து’ என்னுடைய வலைப்பூவில் எழுதி வருகிறேன். பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிவிட்டேன். ஒளிப்பதிவுத்துறையில் இருக்கும் பல தொழில்நுட்பங்களை, விதிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். பரவலாக எல்லாக்கட்டுரைகளுமே மிகுந்த வரவேற்பைப் பெற்றவைதான். ஆயினும், குறிப்பிட்ட ஒரு தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தனித்துவமான வரவேற்பையும், விருப்பத்தையும் பெற்றன. என் எழுத்தையும், என் வலைப்பூவையும் பற்றிப் பேசும் பலர், அக்கட்டுரைகளைக் குறிப்பிடாமல் இருப்பதே இல்லை. ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையின் போதும் பலர் இதைப்பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். இதற்கென தனியாக பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஒளிப்பதிவு தொழில்நுட்பப் புத்தகமான ‘THE FIVE C'S OF CINEMATOGRAPHY’ பற்றிய கட்டுரைகள்தான் அவை. JOSEPH V. MASCELLI எழுதிய இப்புத்தகம், மிக முக்கியமானது. திரையாக்கம், திரைப்பட ஒளிப்பதிவு குறித்து முக்கியமான ஐந்து தலைப்புகளில் இப்புத்தகம் விரிகிறது. Camera Angles, Continuity, Cutting, Close-ups & Composition எனும் இத்தலைப்புகளில் விவரிக்கப்படும் விதிகள் ஒவ்வொன்றும் தி

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால