2009 -இலிருந்து ‘ஒளிப்பதிவு குறித்து’ என்னுடைய வலைப்பூவில் எழுதி வருகிறேன். பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிவிட்டேன். ஒளிப்பதிவுத்துறையில் இருக்கும் பல தொழில்நுட்பங்களை, விதிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். பரவலாக எல்லாக்கட்டுரைகளுமே மிகுந்த வரவேற்பைப் பெற்றவைதான். ஆயினும், குறிப்பிட்ட ஒரு தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தனித்துவமான வரவேற்பையும், விருப்பத்தையும் பெற்றன. என் எழுத்தையும், என் வலைப்பூவையும் பற்றிப் பேசும் பலர், அக்கட்டுரைகளைக் குறிப்பிடாமல் இருப்பதே இல்லை. ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையின் போதும் பலர் இதைப்பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். இதற்கென தனியாக பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஒளிப்பதிவு தொழில்நுட்பப் புத்தகமான ‘THE FIVE C'S OF CINEMATOGRAPHY’ பற்றிய கட்டுரைகள்தான் அவை.
JOSEPH V. MASCELLI எழுதிய இப்புத்தகம், மிக முக்கியமானது. திரையாக்கம், திரைப்பட ஒளிப்பதிவு குறித்து முக்கியமான ஐந்து தலைப்புகளில் இப்புத்தகம் விரிகிறது. Camera Angles, Continuity, Cutting, Close-ups & Composition எனும் இத்தலைப்புகளில் விவரிக்கப்படும் விதிகள் ஒவ்வொன்றும் திரையாக்கத்தை இலகுவாக்க உதவுபவை.
எத்துறையாகினும், அனுபவ வாயிலாகக் கண்டுணர்ந்த பாடங்களே, விதிகளாக / வழிகாட்டியாக பின்பற்றப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வகையில், முந்தைய தலைமுறைத் திரைமேதைகளின் திரைப்படங்களிலிருந்து கற்ற அனுபவப் பாடங்களின் வாயிலாக, திரைப்பட ஆக்கத்தில், எழுத்திலிருக்கும் கதையை திரைவடிவமாக மாற்றும்போது பின்பற்ற வேண்டிய, கவனிக்க வேண்டிய விதிகளை, வழிமுறைகளை இப்புத்தகத்தில் Joseph V. Mascelli விவரித்துள்ளார்.
ஒரு கதையை, பார்வையாளனுக்கு அதன் உணர்வு கெடாமல் கடத்துவதுதான் திரைப்பட ஆக்கத்தில் ஒவ்வொரு இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் சந்திக்கும் பெரிய சவால். ஒரு திரைப்படமென்பது பல துணுக்கு ‘சுடுவுகளால்’(Shots) ஆனது. ஒவ்வொரு சுடுவையும் இணைத்து, ஒரு பூமாலையைப் கோர்ப்பது போன்று ஒரு திரைப்படத்தை கோர்க்க வேண்டியதிருக்கிறது. இரண்டரை மணி நேரம் ஓடும் ஒவ்வொரு திரைப்படத்திலும் சராசரியாக 2000 சுடுவுகள் வரை இருக்கும். அதற்கு ஆயிரக்கணக்கான சுடுவுகளை (20000 to 1,00,000) படம் பிடிக்க வேண்டியதிருக்கிறது. எடுக்கப்பட்ட அச்சுடுவுகளைப் பயன்படுத்தி ஒரு முழுநீள திரைக்கதையை, அதன் தன்மை கெடாமல், உணர்வு கெடாமல், பார்வையாளன் இலகுவாக புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் ஒன்றிணைத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனில், அதை செய்வது எப்படி? மேலும், அதைச் சிறப்பாக செய்வது எப்படி.?
அதற்குத்தான், இப்புத்தகம் வழிகாட்டுகிறது.
ஒரு கதை நிகழும் தளத்தை, அதன் கதாப்பாத்திரங்களை, அவர்களிடையேயான உரையாடலை, சிறப்பாகவும், சரியாகவும், அதே நேரம் இலகுவாக புரிந்துக்கொள்ளும் வகையிலும் பார்வையாளனுக்கு கடத்தத் தேவையான கேமரா கோணம் (Camera Angles), கேமராவை வைக்க வேண்டிய இடம், காட்சிப்படுத்த வேண்டிய பார்வைக்கோணம் ஆகியவற்றில் துவங்கி, துண்டு துண்டாக எடுக்கப்படும் ஒவ்வொரு ‘சுடுவையும்’(Shots) எங்கே பிரிப்பது, அவற்றை எப்படி காட்சிப்படுத்துவது, பின்பு அவற்றை எப்படி இணைப்பது என்பவற்றையும், அவற்றிற்கிடையே இருக்கும் தொடர்ச்சியையும் (Cutting & Continuity) அதில் கவனிக்க வேண்டியவைகள் என பல நுணுக்கங்களையும் விவரிக்கிறார். மேலும், ஒவ்வொரு ‘சுடுவையும்’ எப்படி கம்போஸ் செய்வது, அதில் பின்பற்ற / கவனிக்க வேண்டிய நுணுக்கங்கள் யாவை என்பனவற்றையும் விவரிக்கிறார். அதேப்போல, ஒரு காட்சிக்கு மிக முக்கியமான ‘குளோசப்’(Close-ups) சுடுவுகளை எப்படி அமைப்பது, அதில் கவனிக்க வேண்டியவைகள், அதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்களை Close-ups என்னும் தலைப்பில் விவரிக்கிறார்.
இப்புத்தகத்தில் விவரிக்கப்படும் ஒவ்வொரு தலைப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகள். திரைப்பட ஆக்கத்தில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தவற விடக்கூடாத புத்தகம். விளக்கங்களுக்கு ஏற்ற படங்களையும் இணைத்திருப்பதனால், ஆங்கிலத்தில் இருப்பினும் படிக்க இலகுவான புத்தகம் தான். திரைத்துறை சார்ந்த அத்துனை நண்பர்களுக்கும் இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

* FREE Delivery. Cash on Delivery eligible.( நம்மிடம் வந்த பிறகு பணம் கொடுக்கலாம். ஆன் லைனில் வாங்க, கிரடிட் கார்டோ, டெபிட் கார்டோ இல்லாதவர்கள், இச்சேவையை பயன்படுத்தலாம்)
I WOULD LIKE TO KNOW MORE ABOUT 5 C'S OF CINEMATOGRAPHY IN TAMIL OR ENGLISH.
பதிலளிநீக்குIF YOU HAVE ANY DOCUMENT PLEASE SEND IT TO MY EMAIL ID
[email protected]