முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! | 05


 

இந்த இக்கட்டான நேரத்தில்

நாளை யார் இருப்போம்இருக்க மாட்டோம்..!? தெரியவில்லை


பூமி என்னமோ, பல நூற்றாண்டுகளாக உருண்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தாம், இடையில் 60, 70 வருடங்கள் வந்து விட்டுப்போகிறோம். கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்த, வாழும் இந்த பூமியில்நம்மை அறிந்தவர்கள், நாம் அறிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்


பொறுமையாக கணக்கெடுத்துப்பார்த்தால், 300, 400 பேர்கூட தாண்டமாட்டார்கள். பள்ளியில் 100 பேர், கல்லூரிகாலத்தில் 100 பேர், பணியில் 100, 120 பேர், உறவினர் 50,60 பேர்அவ்வளவுதானே..!? 


அதில் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் 50 பேர் இருக்குமா? இதில் மாதத்தில் ஒருமுறையேனும் பேசும் நபர்கள்? 10 அல்லது 20. 


நம்முடைய நல்லது, கெட்டதில் பங்கெடுப்பவர்கள் எனப்பார்த்தால், அதிகபட்சம் 50 பேர் தாண்டினாலே, நாம் அதிஷ்டசாலிகள் தான்


அவ்வளவுதாம்பா நாம் இந்த பூமியில் சம்பாதித்த உறவுகள். மீதமெல்லாம்நாம் வாழ்ந்த காலத்தில் உடன் பயணித்தவர்கள்


இதில் யாரிடமாவது பகைக்கொள்ள முடியுமா? வன்மம் கொண்டிருக்க வேண்டுமா? பொறாமைப்பட தோணுமாஉறவு, நட்பு, பணியில் முரண்பாடு வரலாம்எதிர்கருத்து இருக்கலாம், எதிரியாக இருக்க முடியுமா? அவசியமா? அது எத்தனை அபத்தம்…!?


எனில், நாம் அறிந்த, நம்மை அறிந்த நபர்களோடு நம்முடைய உறவு எப்படி இருக்க வேண்டும்..!? 


அன்பும், நட்பும் கூடவே நன்றியும் சேர்ந்து இருக்க வேண்டும் அல்லவா..!? 


நன்றி எதற்கு


நம்மோடு பிறந்ததற்கும், நம்மை உறவாக, நட்பாக ஏற்றுக்கொண்டதற்கும், நாம் வாழும் காலத்தில் வந்து இணைந்ததற்கும்


பல நூற்றாண்டுகளாக நீண்டு கிடக்கும் மனித வரலாற்றோடு பொருத்திப்பாருங்கள், நான் சொல்லுவது புரியும்


எத்தனை தனித்துவமான உறவு இது


நன்றி நண்பர்களேநன்றி உறவுகளே…! 


😍🙏


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

நாம் அந்நியர்கள்

இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.  இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான்.