முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும்… கால இயந்திரமும்…!சில நாட்களுக்கு முன்புடிவிட்டரில்’, கால இயந்திரம்(Time Machine)கிடைத்தால், நீங்கள் எந்த காலத்திற்கு (முன்) செல்ல விரும்புவீர்கள் என்பது போன்ற ஒரு உரையாடல் ஓடிக்கொண்டிருந்தது

எனக்கு அதை படித்தவுடன்


ராஜாராஜன் தஞ்சை பெரியக்கோவிலை கட்டியபோது, காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, அன்னைகிளி திரைப்படம் வெளியானபோது, பதினாறு வயதினிலே வெளியான போதுஎன பல்வேறு சந்தர்ப்பங்கள் தோன்றியது. ஆனாலும், இதிலெல்லாம் ஒரு அந்நியத்தனம் இருப்பதாகவே பட்டது. பிறகு அதைக்குறித்தான சிந்தனை இல்லா சூழலில், அம்மாவோடு பேசிக்கொண்டிருந்த போதுஒன்று தோன்றியது. நான் செல்ல விரும்பும் காலம் எது வென்று தெரிந்துவிட்டது


ஆம்நான் அங்கேதான் செல்ல விரும்புகிறேன். மீண்டும் அந்நாட்களில் வாழ விரும்புகிறேன்


இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு பின்னே செல்ல பிரியப்படுகிறேன். இடம்எங்கள் ஊர்தான்


காரணம், என் சிறுவயதில் நான் சந்தித்த பல்வேறு முதியவர்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். என் தந்தையின் வயதை ஒத்த, அவருக்கும் மூத்தவர்கள் பலரை என் சிறுவயதில் சந்தித்திருக்கிறேன். அவர்கள் யாரும் இப்போது இல்லை. ஆனால் அவர்களைப்பற்றிய நினைவுகள் மீதமிருக்கிறது


கிராமத்தில், இந்த பெரியவர்கள் நமக்குள் உண்டாக்கும் தாக்கம் பெரிதென உணர்கிறேன். அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்காது. ஆனால் ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதிலும் முன் நிற்பார்கள். கருத்து சொல்லுவார்கள், சண்டையிடுவார்கள், கோபித்துக்கொள்வார்கள், ஊரை வழி நடத்துவார்கள். அது ஒரு குடும்பத்து பிரச்சனையானாலும் சரி, ஊர் பிரச்சனையானாலும் சரி, அதில் அவர்களின் தலையீடு இருக்கும். குடும்பமும் ஊரும் அதனை அனுமதிக்கும். அவர்களோடு முரண்பட்டாலும் அவர்களை மதிக்கும். அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்கும். அத்தகைய மனிதர்கள் இப்போது இருக்கிறார்களா என தெரியவில்லை. நமக்கேன் என்று எல்லோரும் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு செல்கிறார்கள். நடுநிலையாக நின்று பேசும் மனிதர்கள் அரிதாக விட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு சார்பு நிலையை பார்க்கிறேன்


எங்கள் கிராமத்தில், மணியக்காரர் மாமாக்கள், சின்னவர், பெரியவர், நடுளுவர் என்றும், போஸ்ட்மேன் தாத்தா, பூபதியார் தாத்தாக்கள், ஏட்டுத்திரி தாத்தா, முனுசாமி தாத்தா, எதிர்வீட்டு தாத்தா, உறவுக்கார மாமாக்கள், வாத்தியார் மாமா, என்று என் சிறுவயதில் அறிமுகமானவர்கள் பலரும் இன்னும் என் நினைவில் இருக்கிறார்கள். அவர்களோடானா என் அனுபவங்கள் பலதும், இப்போது நினைத்தாலும் பரவசம் தருகின்றன


ஊர்ப்பெரியவர்கள் என்ற போதும், சிறுவர்களோடானா அவர்களுடைய பழக்கம் வேறு மாதிரியானது. வேறு முகம் கொண்டது. சிறுவர்களுக்கு அவர்களைப்பற்றிய அபிப்பிராயம் வேறுமாதிரியாக இருக்கும்


போஸ்ட்மேன் தாத்தா, அவர் சைக்கிளை தொட்டால் திட்டுவார். அடிக்க வருவார். அதனாலையே சிறுவர்கள் நாங்கள் அவரையும், அவர் சைக்கிளையும் சீண்டுகொண்டே இருப்போம். அது ஒரு விளையாட்டு


இன்னொரு தாத்தா, அவர் கிணற்றில் குளிக்க சென்றால், திட்டுவார். உள்ளே ஆட்டம்போடும் பிள்ளைகளை கல்லால் அடித்துக்கொண்டே துரத்துவார். கிணற்றை சுற்றி சுற்றி ஓடிவந்து அவருக்கு ஆட்டம் காட்டுவோம்


இன்னொரு மாமா, ஊரில் நிகழும் நிகழ்ச்சிகளில் முன் நின்று கருத்து சொல்லுவார், அதட்டல் போடுவார்சில சமயங்களில் எதிர்கருத்துகளால், எதிர்பேச்சால் மொக்கை வாங்குவார். அது அவருக்கு பொருட்டே அல்ல என்பது போல, அடுத்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்வார். இதனைப்பார்க்கும் சிறுவர்கள் எங்களுக்கு ஒரே தமாசாக இருக்கும். இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்


பிழைப்பு தேடி 20…25 வருடங்கள் ஊருக்கு வெளியே இருந்துவிட்டு, ஊர் திரும்பினால், அவர்கள் யாரும் இப்போது ஊரில் இல்லை. அந்த முகங்களைப்பார்க்காதது கொஞ்சம் ஏமாற்றமாக, ஏக்கமாக கூட இருக்கிறது


வைரமுத்து எழுதியஇந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்போல, இவர்கள் எறிந்த கல்லைப்பற்றி பேச கொஞ்சமாவது இருக்கிறது


கால இயந்திரத்தைப் பயன்படுத்தி, அவர்களைத்தான் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். அவர்களுடைய கைகளைப்பற்றிக்கொண்டு ஊர் சுற்றி வர விரும்புகிறேன்


நீங்கள்எங்கே செல்ல விரும்புகிறீர்கள்நண்பர்களே…!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால