முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்றி: குறும்படம் எடுப்பது எப்படி? - பயிற்சிப்பட்டறை - ஏற்காடு - 24, 25, 26 செப்டம்பர் 2021


மூன்று
நாட்கள் நடந்த பயிற்சிப்பட்டறை சிறப்பாக நிறைவுற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தார்கள். பலத்துறைகளில் பணிபுரிபவர்கள் என்ற போதும், எல்லோருக்கும் திரைப்படம், குறும்படம் குறித்து ஆர்வம் இருந்தது. மிகுந்த சிரத்தையோடு கற்றுக்கொண்டார்கள்.


முதல் நாள்கதை, திரைக்கதை, காட்சிகள், ஷாட்டுகளை பிரிப்பது பற்றிய விளக்கங்கள் மற்றும் ஒளி, ஒளியமைப்புக்குறித்த வகுப்பாக துவங்கியது பயிற்சிப்பட்டறை. பிறகு மாலையில் துவங்கி இரவு 9 மணிவரை காட்சிகளை படம்பிடித்தோம். இரவும் படத்தொகுப்பு செய்யப்பட்டது.


இரண்டாம் நாள் காலை, முந்தைய நாள் எடுத்த காட்சிகளை படத்தொகுப்பு செய்ததைப் பார்த்துவிட்டு, அன்றைய பொழுது முழுவதும் படபிடிப்பு நாளா மாற்றினோம். அன்று இரவு, அதுவரை எடுத்த காட்சிகளை அனைவரும் அமர்ந்து படத்தொகுப்பு செய்துப்பார்த்தோம். இரவு 11 மணி வரை சென்றபோதும், அத்துணை பேரும் ஆர்வமாக கலந்துக்கொண்டதை கண்டு, மனம் நிறைந்தது.


மூன்றாம் நாள்விடியற்காலையிலேயே (6am) படப்பிடிப்பை துவங்கிவிட்டோம். பிறகுதான் காலை உணவே உண்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், கலந்துக்கொண்டவர்களின் ஆர்வத்தையும், ஒத்துழைப்பையும். அன்றைய பொழுது முழுவதையும் படம் பிடிப்பதற்கே பயன்படுத்தினோம். இடையில் மதிய உணவிற்கு பிறகு கொஞ்சம் நேரம், Lumix Cameras, Godox Lights பற்றிய சிறிய அறிமுகத்தை ஏற்படுத்திக்க்கொண்டோம்


கூட்டாகச் சேர்ந்து ஒருகுறும்படத்தைஎடுத்திருக்கிறோம். பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டவர்களே நடித்தும் இருக்கிறார்கள். விரைவில் அக்குறும்படம் வெளியாகும்


கலந்துக்கொண்ட அத்துணை நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும்…!



SHORT FILM WORKSHOP

3 Days @Yercaud on 24, 25, 26, Sep 2021


Three-days workshop is completed, Participants arrived from different parts of Tamil Nadu. While there are workers in multiple sectors, everyone was interested in the film and short film. They Learned with great attention.


The first day ... we started with the story, screenplay, scenes, the explanations of the separation of the shots and light, lighting class. Then we started Shooting Scenes in the evening, and continued till the night. 


On the second morning, we have seen the scenes taken by the previous day. Then we started shooting whole day. On the night, we have edited the scenes that have taken up.


Third day ... we started shooting in the dawn. Whole day we shot the scenes. Little time after lunch, We had a small introduction to Lumix Cameras and godox lights.


We have taken a ‘Short Film’ jointly. Soon the work is released.


Grateful love and Thanks to All Attendees !



Camera: Lumix S1H  / S5

Lens: Lumix Lens

Lights: Godox Continuous Light (Video Lights) 


Godox Lights Used:

Godox LED500 & 1000 Video Lights with Battery

Godox LEDP260C 

Godox SZ150R 

Godox Silent LED Video Light UL150 with QR-P 

Godox TUBE LIGHT TL60

Godox RGB LED Light Stick LC500R

Godox LED500 C 

Godox M1 RGB Light

Godox R1 RGB Light with units of AK-R1 

Godox LC500R


Photos Link:

http://imageworkshops.in/Short_Film_Workshop_Yercard_English.html


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன