முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கசடற - குறும்பட வெளியீட்டு விழா - அழைப்பிதழ்

 கசடற
 - குறும்பட வெளியீட்டு விழா

ஜூலை 22 - ஆம் தேதி 2023

சனிக்கிழமை மாலை - 5.30 மணிக்கு

டிஸ்கவரி புக் பேலஸ் - பிரபஞ்சன் அரங்கம்

கே.கே.நகர் - சென்னைசிறப்பு விருந்தினர்கள்:


பி.சி.ஶ்ரீராம்

ஒளிப்பதிவாளர் / இயக்குநர்


ராஜூவ் மேனன்

ஒளிப்பதிவாளர் / இயக்குநர்


பாஸ்கர் சக்தி

எழுத்தாளர் / இயக்குநர்


இளவரசு

ஒளிப்பதிவாளர் / நடிகர்


செழியன்

ஒளிப்பதிவாளர் / இயக்குநர்


கோபி நயினார்

இயக்குநர் 


ரவிசுப்பிரமணியன்

எழுத்தாளர் / இயக்குநர்


இளங்கோ கிருஷ்ணன்

கவிஞர் / பாடலாசிரியர்


ஜா.தீபா

எழுத்தாளர்இரண்டாண்டுகளுக்கு முன்புகுறும்படம் எடுப்பது எப்படி என்றத் தலைப்பில் ஒரு பயிற்சிப்பட்டறையைநடத்தினோம்அப்போது எடுக்கப்பட்ட எங்களுடைய குறும்படம் ‘கசடற’. அதனை சில விருதுகளுக்கு அனுப்பிவைத்தோம்சிறப்பான அங்கிகாரத்தை பெற்று வந்ததுஅக்குறும்படத்தை அண்மையில் நண்பர்களுக்கும்நான் மதிக்கும் ஆளுமைகளுக்கும் அனுப்பி வைத்தேன்அவர்களுடைய நன்மதிப்பையும்ஆதரவையும் பெற்றுஇவ்வார இறுதியில் அப்படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்நண்பர்கள்குறும்பட இயக்குநர்கள்திரைப்பட ஆர்வலர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.


இவ்விழாவில்ஒரு குறும்படம் எடுப்பதன் நோக்கம்அதன் பின்னே இருக்கும் உழைப்புஅதன் கலைத்தன்மைகுறித்துதமிழின் மிகச்சிறந்த ஆளுமைகள் பலரும் உரையாற்றவும்நம்மோடு உரையாடவும் இருக்கிறார்கள்


நண்பர்களை அனைவரையும் இவ்விழாவில் கலந்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குசென்னைகேகே நகரில் அமைந்திருக்கும் டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்போம்


நன்றி..!

விஜய் ஆம்ஸ்ட்ராங்DATE: 22ND JULY - 2023

DAY: SAT.DAY

TIME: 5.30 PM


VENUE:

Discovery Book Palace pvt ltd.

1055-B, Munusamy salai, KK Nagar West, Chennai-78 

https://maps.app.goo.gl/g9tX9kbGgzooeT338


Teaser:

https://youtu.be/V7QTtspf1gI


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு