முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோற்றவனின் கதை இது:



நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காகவும்தான்” 


நான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னைபாக்ஸிங்மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.


இது குத்துச்சண்டை வீரர்முகமது அலியின்வார்த்தைகள்


1966 ஆம் ஆண்டு. வட அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி, முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார். அப்போது அவர் 'ஹெவி வெயிட்' பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருந்தார்.


நான் ஏன் போகவேண்டும், எனக்கு எவ்வித சச்சரவும் வியட்நாமியரிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”.


"இல்லை, நான் போகப்போவதில்லை. 10,000 மைல் தாண்டிபோய், மக்களைக் கொன்று, அவர்களின் உடைமைகளைக் கொளுத்தி, வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தொடர்வதற்கு உதவப்போவதில்லை"


இவை, அலியின் புகழ்ப் பெற்ற வியட்நாம் போருக்கான எதிர்ப்பு வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார். ஏனெனில் அது, அவர் இனத்தைப் போன்ற இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை உணர்ந்திருந்ததனால்.


இந்த எதிர்ப்பை அவர், இராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது காட்டினார். அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின், குத்துச்சண்டைக்கான உரிமத்தை ரத்துசெய்தது. மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது.  


தன் சுதந்திரத்திற்காக, அங்கீகாரத்திற்காக, போராடிப் பெற்ற பட்டத்தையும் தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார். ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனது. அலி மக்களோடு பேசினார். மக்கள் அவரோடு இணைந்து, போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். 1971-இல் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.


அவர் இழந்தப் பட்டத்தை மீண்டும் பெற, அக்டோபர் 30,1974-இல் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' எதிர்த்து ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பேசிய வார்த்தைகள் தாம், கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


அந்தப்போட்டியில் அவர் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' வென்று இரண்டாவது முறையாக உலகச்சாம்பியன் பட்டத்தை பெற்றார். ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அப்போட்டி "The Rumble In The Jungle" என்று அழைக்கப்படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் 'ஜார்ஜ் ஃபோர்மேன்' அப்போதைய நடப்புச் சாம்பியன். அவரை வெல்வது மிகக்கடினம் என கருத்துக் கணிப்புகள் சொல்லின


அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம். எதிராளியை குத்துகளாலேயே மண்டியிடவைக்கக் கூடியவர். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர்களாலேயே நம்பப்பட்டது


அச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுக்தியை இப்போட்டியில் பயன்படுத்தினார். சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துகொண்டு அடிகளைத் தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார்


ஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் முழுமையாக சோர்வடைந்திருந்தார். இதைக் கண்ட அலி, உற்சாகமானார். அவர் காத்திருந்தது இதற்காகத்தான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டது இதற்குத்தான். எட்டாவது சுற்று துவங்கிய போதே, அலி தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார்


இதன்மூலம் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த யுத்தி "The Rope-A-Dope" என்று அழைக்கபடுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு 'When We Were Kings' (மன்னர்களாக நாம் இருந்தபோது) என்ற பெயரில் திரையிடப்பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் (1996) விருதையும் பெற்றது.


ஆச்சா


இக்கதையில் நாயகன் யார்? ‘முகமது அலிதான்.. இல்லையா!?


ஆம்.. அவர் நாயகன் என்றால், அவரிடம் தோற்றஜார்ஜ் ஃபோர்மேன்யார்


வில்லன் என்றுதானே நினைப்போம். நானும் அப்படித்தான் இத்தனை நாள் வரை நினைத்திருந்தேன். அலியின் கதையில் அவருடைய எதிரிகள் அத்தனைப்பேரும் நமக்கு வில்லன்கள்தாம். இல்லையா?


இல்லை


ஜார்ஜ் ஃபோர்மேன்வில்லன் இல்லை. அவரும் நாயகன் தான்.


வரலாற்றில் ஜெயித்தவர்களை நாயகர்களாகவும், தோற்றவர்களை வில்லன்களாகனும் சித்தரித்து, போதிக்கப்பட்டிருக்கிறோம். அந்தப்பழக்கம் நம்மை அறியாமலேயே நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.


ஜார்ஜ் ஃபோர்மேன்கதையை அறிந்தால், இந்த நாயகனைப்பற்றியும் அறிந்துக்கொள்ளலாம்


மிக மோசமான வறுமையில் உழன்று, அதிலிருந்து தப்பிக்க குத்துச்சண்டை வீரனாகும்ஜார்ஜ் ஃபோர்மேன்’, 1968 ஒலிப்பிக்கில் தங்க பதக்கமும், 1973-இல் 'ஹெவி வெயிட்' பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். 1974-இல்முகமது அலியோடுமோதித் தோற்றும் போனார்


அந்தப்போட்டி, உலகப்புகழ் பெற்றது, முகமது அலியின் மறு எழுச்சி என்று உலகம் கொண்டாடியது. அதேநேரம்ஜார்ஜ் ஃபோர்மேனுக்குபெரும் துயரத்தை கொண்டு வந்து சேர்த்த போட்டியாகவும் அது மாறியது. அலியிடம் தோற்றுப்போனதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அலி தந்திரமாக தன்னை தோற்கடித்து விட்டதை அவரால் மறக்கவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் பெரும் அவமானமாக அதனைக் கருதினார். துவண்டுப்போனார். அலியை மீண்டும் தம்மோடு மோதும் படி பல முறை கேட்டார். ஆனால் அலி அதற்கு வாய்ப்பே தரவில்லை. அதன் பின் 1977-இல்ஜிம்மி யெங்யிடம் தோற்று, குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துக்கொள்வதிலிருந்து ஓய்வு பெற்றார்


அதற்கு அவரிடம் இரண்டு காரணங்கள் இருந்ததன. ஒன்று, தோல்விகள் அவரை துவண்டு போகச்செய்தது. மற்றொன்று அவருடையஆன்மீகப்பார்வை’.


தம்முடைய நேசத்திற்குறிய சகோதரியின் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் தான் முடியும், பிராத்தனை மட்டுமே அதைச் செய்யும் என்று அவர் அம்மா சொன்னதைக் கேட்டு, ‘இயோசுவிடம்மன்றாடுகிறார். தம்முடைய உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, தம் சகோதரியின் குழந்தையை காப்பாற்றும்படி இறைஞ்சுகிறார். அது நிறைவேறுகிறது. குழந்தை நலத்துடன் பிறக்கிறது. தம்முடைய பிராத்தனையை இயோசு நிறைவேற்றிவிட்டார் என்று கருதுகிறார். இறைவன் மீது நம்பிக்கை பிறக்கிறது.


போலவே… ‘ஜிம்மி யெங்யிடம் தோற்ற போட்டியின் போது, பலமாக அடிப்பட்டிருந்தார். போட்டிக்குப்பிறகான ஓய்வரையில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்திற்கு மூச்சி பேச்சி இல்லாமல் கிடந்தார். மரணித்து விட்டார் என்று எல்லோரும் பதறினார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மயக்கத்தில் கிடந்தவர் சட்டென்று விழித்தெழுந்தார். எழுந்தவர்இயோசு என்னோடு பேசினார், என்னை மரணத்திலிருந்து இயேசு மீட்டெடுத்தார்என்றார்


"I don't care if this is death – I still believe there is a God! என்றார்


இனி தாம் இறைப்பணி செய்யப்போகிறேன் என்றார். என் வாழ்வின் பொருளை புரிந்துக்கொண்டேன் என்றார். போட்டிகளுக்கு ஓய்வு அறிவித்துவிட்டுபாஸ்டராகமாறுகிறார்.


கூடவே, கறுப்பின இளைஞர்களின் எதிர்காலம் முன்னிட்டு, ஸ்போர்ட்ஸ் கிளப் ஒன்றை ஏற்படுத்தித்தருகிறார். அதற்கு ஒருநாள் சிக்கல் வருகிறது. அவருடைய பணம் முழுவதையும்ஸ்டாக்மார்கெட்டில் இழந்துவிடுகிறார் அவருடைய பேங்கர் நண்பர். அதனால், அந்த ஸ்போர்ட்ஸ் கிளபை வங்கி எடுத்துக்கொள்ளும் நிலை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருடைய சேமிப்பு முழுவதும் போயிற்று, துவண்டு போகிறார்ஜார்ஜ் ஃபோர்மேன்’. தன்னால் ஆன எல்லா முயற்சிகளை எடுத்துப்பார்க்கிறார். தம்முடைய உடமைகளை விற்கிறார். விளம்பரப்படங்களில் நடிக்கிறார், என்றாலும் போதுமான பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. தம்முடைய ஸ்போர்ட்ஸ் கிளப்பை காப்பாற்ற முடியாமல் போகிவிடுமே என்று கலங்கி நிற்கிறார்.


அப்போது அவருக்கு முன்னே இருந்தது ஒரே ஒரு வழிதான். அது அவர் மீண்டும்குத்துச்சண்டைப் போட்டிகளில்கலந்துக்கொள்வது. போட்டிகளிலிருந்து விலகி பத்து ஆண்டுகள் ஆகியிருந்தன. வயது 38 ஆகி இருந்தது. உருவம் மாறியிருந்தார். எடை கூடித் தொப்பை எல்லாம் போட்டிருந்தார். இந்த நிலையில் போட்டிகளில் கலந்துக்கொள்வதா? அதுவும் குத்துச்சண்டை போட்டியில்…!


பலர் தடுத்தும் கேளாமல் போட்டிகளில் கலந்துக்கொள்ள தன்னை தயார் படுத்திக்கொண்டார். போட்டிகளில் கலந்துக்கொண்டார். உலகம் அதிசயத்தது. தாம் ஒரு போராளி என்று நிருபித்தார்


1994-இல் இரண்டாம் முறை 'ஹெவி வெயிட்' பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனைப் புரிந்தார். ‘முகமது அலியிடம்தாம் இழந்தப் பட்டத்தை மீண்டும் வென்றெடுத்தார்.


இந்த வெற்றியின் மூலம் அவர் மூன்று சாதனைகளை செய்துக்காட்டினார்.


45 வயதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற ஒருவர் அவர் மட்டும்தான்.


அவருடைய முதல் சாம்பியன் வெற்றிக்கும், இரண்டாவது சாம்பியன் பட்டத்திற்கு இடைப்பட்ட காலம் 20 வருடங்கள்.


அவரோடு மோதிய எதிராளிக்கு(Michael Moorer) அவரை விட 19 வயது குறைவு. இத்தனை வயது வித்தியாசத்தில் மோதியவர் அவர் மட்டுமே


"Big George" என்று செல்லமாக அழைப்படும், அவருடைய வாழ்வை ‘Big George Foreman’ எனும் தலைப்பில் திரைப்படமாக்கி இருக்கிறார்கள். Netflix-இல் இருக்கிறது. தவறாமல் பாருங்கள்



வரலாறு என்பது நாயகர்களால் ஆனது என்பதும், அவரவர் கதையில் அவரவர் நாயகர்கள்தாம் என்பதையும் உணர முடியும். வென்றெடுக்க முடியாத வாழ்வு என்று ஒன்று இல்லை என்பதைஜார்ஜ் ஃபோர்மேனின்வாழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.


தோற்றவன் கதையை திருப்பிப்போட முடியும்...!


#BigGeorgeForeman #movies #biography #biopic #vijayarmstrong #Ali #muhammadali #georgeforeman

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு