ஒரு திரைப்படத்தை ஃபிலிமில் (Film) எடுக்கலாமா, 'டிஜிட்டலில்'(Digital) எடுக்கலாமா என்றெல்லாம் இன்று ஆலோசிக்கப்படுகிறது. டிஜிட்டல் என்பது புதிய தொழில்நுட்பம்தான், அது வளர்ச்சியைக் குறிக்கிறது என்பதும், துறையை மேம்படுத்தும் என்பதும் உண்மைத்தான். டிஜிட்டல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போவதும், வருங்காலம் முழுதும் டிஜிட்டலாக மாறிவிடும் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ன? அதன் வளர்ச்சிப்பாதை என்ன? இன்று நமக்குக் கிடைக்கும் தொழில்நுட்பம் எத்தகையது? என்பததைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்குமான ஆதார வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!