முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

S16mm Vs 35mm

இப்போது திரைப்படத் தயாரிப்பில் செலவைக் குறைக்க முயற்சிக்கும் பல வழிகளில் ஒன்று சினிமாவை டிஜிடலில் (Digita) எடுப்பதாகும். சற்று முன்னதாக "super 16" என்றொரு ஃபிலிம் தொழில்நுட்பத்தில் எடுப்பதும் ஒரு வழியாக இருந்தது. இந்தக்கட்டுரையில் super 16mm (s16)க்கும், நாம் வழக்கமாக பயன்படுத்தும் 35mmக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துக்கொள்வோம்.



Super 16mm vs 35mm


நாம் வழக்கமாக 35mm கேமராவைப் பயன்படுத்துகிறோம்.  அதாவது 35mm (மில்லி மீட்டர்) பரப்பளவைக் கொண்ட ஃபிலிமை (film) பயன்படுத்துவதினால் இந்த பெயர். 35mm ஃபிலிமைப் பயன்படுத்தி படம் எடுக்கப் பயன்படும் கேமராக்களை 35mm கேமரா என்கிறோம்.

35mm ஃபிலிம் இது.

S16mm என்பது, 35mm ஃபிலிமில் பாதி அளவு பரப்பளவு கொண்டது. S16mm ஃபிலிமைப் பயன்படுத்தி படமெடுக்க தனியாக S16mm கேமராக்கள் உண்டு.

16mm ஃபிலிம் இது.
400ft ஃபிலிம் ரோல்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. 35மிமீ ஃபிலிமில் இரண்டுப் பக்கமும் வரிசையாக துளைகள் அமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பிற்கள். அந்த துளைகளுக்கு "பர்ஃபரேஷன்(Perforation)" என்று பெயர். 
இந்த "பர்ஃபரேஷன் (Perferation)"கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும்.  இந்த துளைகள், கேமராவில் லென்சுக்கு பின்புறம் பிம்பம் பதியுமிடத்தில் ஃபிலிமை நிலையாக நிறுத்த பயன்படுகிறது. ஒரு பிம்பம், இந்த துளைக்களின்(Perforation) வரிசையில் நான்கு துளைகளுக்கு இடைப்பட பரப்பளவில் பதிக்கப்பட்டுகிறது. 
அதாவது ஒரு frame க்கு 4 Perferation தேவைப்படுகிறது. 


இதுவே 16mm ஃபிலிமில் ஒரு பக்கமட்டுமே இந்த துளைகளிருக்கும். அதே போல் ஒரு பிம்பமானது இரண்டு துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பதியப்படுகிறது.  ஏனெனில் 35mm ஃபிலிமில் பதியும் அதே பிம்பத்தை "aspet ratio" மாற்றாமல் சிறிய 16mm ஃபிலிமில் பதியும் போது சிறிய இடம் போதுமானது. அப்படியானால் 400ft நீள 35mm ஃபிலிமை விட, 400ft நீளம் கொண்ட 16mm ஃபிலிமில் அதிகமாக பிம்பத்தை (frames) பதிக்கமுடியும் என்பது தெரிகிறது.


அதாவது 400ft 35mm  ஃபிலிமைப் பயன்படுத்தி 4.26 நிமிடம் படமெடுக்கலாம். 400ft 16mm ஃபிலிமைப் பயன்படுத்தி 11 நிமிடம் படமெடுக்கலாம்.


1 foot of 16mm is 40 frames.

100' of 16mm is 2.78 minutes, or 2 minutes and 45 seconds
400' of 16mm is 11.11 minutes, or 11 minutes and 6 seconds
1 foot of 35mm is 16 frames. 
100' of 35mm is 1,600 frames. 1,600 frames/24 fps = 66.6 seconds.
400' of 35mm is 4.4 minutes



அதனால் ஒரு படத்திற்குத் தேவையான மொத்த ஃபிலிம் ரோலில் 35mm ஃபிலிமைவிட 16mm ஃபிலிமில் பாதிப் பயன்படுத்தினால் போதும். செலவு பாதியாகிறது.  அதுமட்டுமல்லாமல் 35mm 400ft ஃபிலிம் விலையில் பாதிதான் 16mm ன் 400ft ரோல். அதனால் மீண்டும் செலவு பாதியாகிறது.
மொத்தத்தில் நான்கில் ஒரு பங்கு செலவுதான் ஃபிலிம் ரோலில் ஆகிறது.  


35mm ஃபிலிமில் எடுக்கும் படத்தை அப்படியே பயன்படுத்தி பிரிண்ட் போடலாம். 16mm ஃபிலிமை பெரிதாக்கி 35mm ஃபிலிமில் பிரிண்ட் போடவேண்டும். அதற்கு D.I என்கிற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஆகும் செலவிற்கு ஃபிலிம் ரோல் வாங்கும் போது மீதம் பிடித்த பணத்தை பயன்படுத்தலாம். 


அப்படியானால், 35mm ஃபிலிமைப் பயன்படுத்திப் படமெடுப்பதிற்கும், 16mm ஃபிலிமை பயன்படுத்தி D.I மூலம் பிரிண்ட் போடுவதிற்கும் அதே செலவுதான் ஆகிறது என்றால் 16mm ல் படமெடுப்பதால் என்ன நன்மை?


நன்மைகள்:


1. D.I க்கு ஆகும் செலவைக் கடைசியாக "Post Production" சமயத்தில் செய்தால் போதும்.


2. ஒருவேளை நினைத்ததைவிட அதிகமாக ஃபிலிமை பயன்படுத்த வேண்டியது வந்தால், 35mm  ஃபிலிமை விட 16mm ஃபிலிமின் விலைகுறைவு என்பதினால் செலவைக் கட்டுக்குள் வைக்கமுடியும். புது நடிகர்கள் நடிக்கும்போதோ, புது இயக்குனர் படமெடுக்கும்போதோ சிலவேளைகளில் அதிக "Take"கள் போகவேண்டியதாகிருக்கும்.


3. 35mm ஃபிலிமைப் பயன்படுத்தி D.I செய்வதைவிட, இந்த முறையில் செலவு குறைவு.  அதாவது 35mmல் ஃபிலிமெடுக்கும் அதே செலவில் D.I  செய்யமுடியும். ஃபிலிமிக்கும் D.I க்குமென தனித்தனியாக செலவு செய்யவேண்டியது இல்லை.


* ஏன் D.I. செய்யவேண்டும்? D.I. என்றால் என்ன? அதை வேறு கட்டுரையில் காண்க.

பாதகம்:
இப்படி செலவைக் குறைக்க நாம் 16mmமை  பயன்படுத்துவதில் சில குறைகளும் உண்டு. 



1.35mm விட 16mm அளவில் சிறியது என்பதினால் "Resolution" குறைகிறது, அதனால் படத்தின்(Image) தரம் குறையும் வாய்ப்பு உண்டு.


2. "Grains" எனப்படும் புள்ளிகள் ஏற்படும்.


3. குறைந்த வெளிச்சத்தில் கவனமாகப் படமெடுக்கவேண்டும். சில சமயங்களில் முடியாது.


4. ஒளிப்பதிவாளர்கள் மிகுந்தக் கவனத்துடன் செயல்படவேண்டும், "Exposure", "Lighting" போன்றவற்றை மிகச் சரியாக செய்யவேண்டும். ஏனெனில் தவறுக்கு இடமேயில்லை. இதனால் வேலை செய்யும் நேரம் அதிகமாகலாம், சில சமயங்களில் நினைத்தப்படி "Low Lighting" செய்யமுடியாமல் போகலாம்.  


நல்லதும் கெட்டதும் சேர்ந்தே இருக்கிறது. செலவைப்பார்த்தால் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும், தரத்தைப்பார்த்தால் செலவைக் கணக்கில் எடுக்க கூடாது. நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? செலவா? தரமா?

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,