முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

super 16mm

super 16mm :

Super 16mm என்பதிற்கும் 16mm க்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றா? என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முதலில் இரண்டு விசயங்களைப் பார்க்க வேண்டும்.

Film Size: ஃபிலிமின் அளவு
திரைப்படத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒளிச்சுருள்கள் (Film Role) நான்கு வகையான அளவுகளில் கிடைக்கின்றன.

65mm,35mm,16mm,8mm




65mm ஃபிலிமைப் பயன்படுத்தி 70mm படங்கள் எடுக்கிறார்கள். 35mm பிலிமைப் பயன்படுத்தி சினிமாஸ்கோப், 35mm மற்றும் Super 35mm படங்கள் எடுக்கிறார்கள். 16mm பிலிம் முன்பெல்லாம் ஆவணப்படங்கள் எடுப்பதிற்குப் பயன்படுத்தப்பட்டது, இப்போது அதே படச்சுருளைப்பயன்படுத்தி Super 16mm முறையில் திரைப்படமெடுக்க முடிகிறது, அதைப்பற்றி விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 8mm பிலிம் தனிப்பட்ட முறையில் நம் வீட்டு விசேஷங்களைப் படமெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Aspect Ratio: 'ஆஸ்பெட் ரேஷியோ'

ஃபிலிமில் நாம் பதிவுச்செய்யும் பிம்பத்தின்(Image) உயரம் மற்றும் அகலத்தின் விகிதத்தைக் குறிப்பது. உதாரணமாக 1:1.33 என்பது உயரத்தை விட அகலம் 1.33 மடங்கு பெரியது. இப்படி பல Aspect Ratio உண்டு.




சரி 16mm மற்றும் Super 16mm(S16) க்கும் ஒரே பிலிம் உபயோகிக்கப்படுகிறது என்றால், 16mm லிருந்து S16mm எங்கு வேறுபடுகிறது?

1920 களில் 16mm அறிமுகப்படுத்தப்பட்டது. 16mm பிலிமில் இரண்டு பக்க Perforation உடைய சுருள்களும் உண்டு, ஒரு பக்கம் மட்டும் Perforation உடைய சுருளும் உண்டு.  ஒரு பக்கமட்டும் Perforation உடைய பிலிமில் இன்னொரு பக்க Perforation வருமிடத்தில் அதற்குப்பதிலாக, அந்த இடத்தை ஒலியைப் பதிவு செய்வதிற்காக பயன்படுத்தினார்கள், அதாவது இதில், பிம்பம் பதிவதற்கும், ஒலிப் பதிவதற்கும் இடமிருக்கும். பிம்பமானது தொலைக்காட்சிக்கான Aspect Ratio வான 1:1.33 வில் பதிக்கப்பட்டது, அதன் அருகில் ஒலியும் பதிக்கப்பட்டது. 

1970களில் S16mm முறையை அறிமுகப்படுத்தினார்கள், அதாவது ஒலிப் பதிவிற்காக ஒதுக்கிய இடத்தில் ஒலிக்குப் பதிலாக பிம்பத்தையே பதிவுசெய்வது, இதன் மூலம் அதிகபடியான பரப்பளவில் பிம்பத்தை ஃபிலிமில் பதிக்க முடியும். இது பிலிமில் 20% இடத்தை அதிகரித்தது.   1:1.66 Aspect Ratio வில் பதிக்க முடியும்.




அதாவது, S16mm  என்பது 16mm பிலிமையே பயன்படுத்தி ஒலிக்கான இடத்தையும் பிம்பத்திற்கே பயன்படுத்தி அதிக அளவு பரப்பளவில் பிம்பம் பதிக்கப்படுகிறது என்பதும், அப்படிச்செய்வதினால் படத்தின் Resolution அதிகரிக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

1:1.66 Aspect Ratio என்பது அப்போதைய 35mm மில் திரையிடப்பட்ட படங்களின் Aspect Ratio வான 1:1.85 க்கு அருகிலிருப்பதினால், பெரிதாக பிம்பதின் தரம் குறையவில்லை(image loss).  S16 ஃபிலிமை 35mm மில் பெரிதாக்கி 1:1.85 Aspect Ratio வில் பதிக்கும்போது பிம்பத்தின் மேலும்  கீழும் துண்டிக்க வேண்டியது இருக்கும்.


1:1.33 Aspect Ratio விலிருந்து 35mm க்கு மாற்றும் போதில்விட, 1:1.66 Aspect Ratio விலிருந்து பெரிதாக்கும் போது குறைவான அளவுதான் பிம்பத்தின் மேலும் கீழும் துண்டிக்க வேண்டியதாக இருக்கிறது.  அதனால் பிம்பத்தின் தரம்(Image Resolution) அதிகரிக்கிறது, நாம் composs செய்த frameமும் கிடைக்கிறது. Grains-ம் குறைகிறது. 


16mm விட S16mm 40% அதிக தரத்தைத் தருகிறது.

நாம் இப்போது வெளியிடும் திரைப்படங்கள் 1: 2.35 Aspect Ratio விலிருக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி S16mm பிம்பத்தை மாற்றிப் பயன்படுத்துகிறோம்.

Thanks: Kodak

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...