'மாத்தியோசி' வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள். சுட்டெரிக்கும் வெய்யிலையும் புழுதியையும் வறட்சியையும் வறுமையின் குறியீடாக பயன்படுத்தினோம். இந்த நான்கு நண்பர்களின் சூழ்நிலைகள் எப்போதும் கொளுத்தும் வெய்யிலில் இருப்பதாக அமைத்துக்கொண்டோம். கிராமத்தில் வரும் வில்லன்கள் எல்லாரும் நிழலில் (இருண்ட மனம் கொண்டவர்கள்) இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். படத்தின் முதல் பகுதி முழுவதும் கரடுமுரடான நிலப்பகுதியில் நிகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு 'பிம்பங்களை' ஒளிப்பதிவு செய்தோம். ஒளியமைப்புக்கு இயற்கை ஒளிகளைப் பயன்படுத்தினோம். பெரும்பாலும் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை 'High Light'-ஆகப் பயன்படுத்தினோம். பல இடங்களில் 'Fill Light' பயன்படுத்தப்படவில்லை. அழகியலுக்கு முன்னுரிமை தராமல் ஒருவித 'Rough Imag...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!