இரண்டு காதலும் நம்மை பரவசப்படுத்துகின்றன. அதே நேரம் கொஞ்சம் எதார்த்தத்தை மீறி.. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை. எனக்கும் படம் முழுமையாக பிடித்திருக்கிறது, எவ்வித குறைகளும் இல்லாமல். இரண்டு அழகான காதலுக்கு நேரும் இம்முடிவு சிறிது உறுத்தினாலும், வாழ்க்கையின் குரூர முகத்தை அது பிரதிபலிக்கிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.
பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை. நம்மை அது தீண்டாத வரை கவலையற்றுதான் கடந்து செல்கிறோம், அது பிடுங்கி எறிந்த உயிர்களையும் சிதைத்த வாழ்க்கையும் பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று.
அது நமக்கானது அல்ல என்று கடந்து வந்த விபத்தை, இப்படம் நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு விபத்தின் கோரமுகம், இப்படித்தான் இருக்கும் என்பதை நம் நெஞ்சில் அறைந்து சொல்கிறது.
இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓட்டுனர்கள். இனி வரும் ஒவ்வொரு பேருந்துப் பயணத்திலும் இப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
வேகமாக ஓட்டும் ஓட்டுனரை, மெதுவாக ஓட்டுங்கள் என்று ஒரு பயணியேனும் சொல்லுவாரானால் அது இப்படத்திற்கு கிடைத்த வெற்றி. இப்படத்தைப் பார்த்த எவரும் அதைச் செய்வர்.
இயக்குனர் சரவணன் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.
//பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று தெரியவில்லை//
பதிலளிநீக்குநல்ல படம்!
இதுவரை விபத்துக்களை வெறும் செய்தியாகவே பார்த்து, கடந்து போன எங்களை படத்தோடு பயணிக்க வைத்து, அதன் தாக்கத்தை மிக நெருக்கமாக உணர வைத்திருக்கிறது படம்!
எல்லா ஜோடிகளிலும் ஒருவர் இறந்தேயாக வேண்டும் என்று முடிவே பண்ணி இருந்ததுதான் சற்று உறுத்தல்! மற்றபடி எனக்கு மிகப் பிடித்திருந்தது படம்!