முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தங்க மீன்கள் - பாசவலைக்குள்..

வாத்தியாரின் பிள்ளை மக்கு என்பதாய், படிப்பில் நாட்டமில்லாது வளர்ந்த தகப்பனுக்கும், அவனைப் போலவே படிப்பில் விருப்பமில்லா மகளுக்குமிடையே நிகழும் பாசக் கதையிது. நம் கல்வி முறை, பிள்ளைகளின் குழந்தைப் பிராயத்தை எப்படி நாசமாக்குகின்றன என்பதை பேசும் கதை(?!) என்பதாக, அல்லது சராசரி I.Q-விற்கும் குறைவான அறிவு கொண்ட தகப்பன், மகளுக்குமிடையேயான கதை என்பதாக எடுத்துக் கொள்ளவும் சாத்தியம் கொண்ட கதை. தகப்பன் மகள் இருவருமே பிரதான கதாப்பாத்திரங்கள். அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைக்குத் தகுந்த துணைப்பாத்திரங்கள். தாத்தா, அப்பத்தா, அம்மா, அத்தை, தந்தையின் நண்பன், தோழி, வாத்திச்சி, பள்ளி மேலாளர் என நேர்த்தியான பாத்திரப்படைப்புகள். அன்பை, பாசத்தை நெகழ்வாய் பேசும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ராம் கொடுத்திருக்கிறார். கையாலாகாதவனாக மதிப்பிடப்படும் ஒரு தகப்பனின் பாசப்போராட்டத்தை, அவனது இயலாமையை, அப்படியான தகப்பன்களின் சார்பாக ஒரு கதையை இயக்குனர் ராம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பெரும்பான்மையோர்களுக்கு இது அவர்களின் வாழ்க்கை சம்பவங்களின் சாரத்தை நினைவூட்டலாம். பலருக்கு அப்படி இல்லாமலும் போகலாம். அவர்கள் இ...

‘ALEXA XT’ கேமரா ஒரு அறிமுகம்:

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு படத்திற்காக, கதாநாயகியைத் தேர்வு செய்யும் வேலையிலிருந்தோம். கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்களை தருவித்துத் தரக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் (co-ordinators)பலர் இங்கே உண்டு. அதிலொருவர் எங்கள் அலுவலகம் வந்திருந்தார். எங்கள் கதாப்பாத்திரத்தின் தேவையைச் சொல்லி, அதற்கு ஏற்ற நாயகியை தருவித்துத் தரச்சொன்னோம். அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?! “படத்தை ஃபிலிமுல சூட் பண்றிங்கிளா, ரெட்ல சூட் பண்றிங்களா..?” எங்களுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தாலும், அக்கேள்வி இங்கே கேட்கப்படுவதன் அவசியம் புரியவில்லை. “ஏன்..?” என்று கேட்டேன். அதற்கு அவர்.. “ரெட் ஃபிலுமுன்னா ஆர்டிஸ்டு நடிக்க மாட்டாங்க சார்.. ஃபிலிமில் சூட் செய்தாத்தான் நடிக்க வருவாங்க..” என்றார். எனக்கு அதிலிருக்கும் தர்க்கம் புரியவேயில்லை. “அட, இது என்னப்பா புது கதையா இருக்கே..!” என்றேன். “ஆமாம் சார்.. ரெட்டில் எடுத்தா படம் ஓடாது சார்.. அதனால நடிக்க மாட்டாங்க. அதுவுமில்லாம ரெட்டில் எடுத்தால் அது சின்னப்படம் என்று நினைக்கிறாங்க சார்” என்றார். “ஏம்பா.. பில்லா 2, தாண்டவம் போன்ற பெரிய படங்கள் ரெட்டில் எடுத்தவை...

ஆசீர்வதிக்கப்பட்ட கணம்

எங்கள் இயக்குனர் திரு.அந்தோணி சார்லஸின் குட்டி தேவதை ‘நிலா தெரசா’-க்கு நேற்று ‘BAPTISM’ நடந்தது. அப்போது நான் எடுத்த சில படங்கள் இங்கே. குழந்தைகளை படமெடுக்கும்போது உண்டாகும் அற்புத மனநிலையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு தியானம் போல, இசையில் லயித்து நம்மை இழப்பது போல ஒரு கணம் அது. பொதுவாகவே புகைப்படம் எடுக்கும்போதும் ஒளிப்பதிவின் போதும்.. ஒரு அற்புத சூழலுக்கு நான் தள்ளப்படுவது வழக்கம். அந்தக் கணத்தில் வாழ்வது என்று சொல்லுவார்களே.. அதைப்போல ஒரு நிலையில் நான் இருப்பதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன். அதிலும் குழந்தைகளை படமெடுக்கும் போது.. அக்கணம் ஆசிர்வதிக்கப்பட்ட கணமாகிறது.