முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘ALEXA XT’ கேமரா ஒரு அறிமுகம்:


கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு படத்திற்காக, கதாநாயகியைத் தேர்வு செய்யும் வேலையிலிருந்தோம். கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்களை தருவித்துத் தரக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் (co-ordinators)பலர் இங்கே உண்டு. அதிலொருவர் எங்கள் அலுவலகம் வந்திருந்தார். எங்கள் கதாப்பாத்திரத்தின் தேவையைச் சொல்லி, அதற்கு ஏற்ற நாயகியை தருவித்துத் தரச்சொன்னோம். அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?! “படத்தை ஃபிலிமுல சூட் பண்றிங்கிளா, ரெட்ல சூட் பண்றிங்களா..?” எங்களுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தாலும், அக்கேள்வி இங்கே கேட்கப்படுவதன் அவசியம் புரியவில்லை. “ஏன்..?” என்று கேட்டேன். அதற்கு அவர்.. “ரெட் ஃபிலுமுன்னா ஆர்டிஸ்டு நடிக்க மாட்டாங்க சார்.. ஃபிலிமில் சூட் செய்தாத்தான் நடிக்க வருவாங்க..” என்றார்.

எனக்கு அதிலிருக்கும் தர்க்கம் புரியவேயில்லை. “அட, இது என்னப்பா புது கதையா இருக்கே..!” என்றேன். “ஆமாம் சார்.. ரெட்டில் எடுத்தா படம் ஓடாது சார்.. அதனால நடிக்க மாட்டாங்க. அதுவுமில்லாம ரெட்டில் எடுத்தால் அது சின்னப்படம் என்று நினைக்கிறாங்க சார்” என்றார். “ஏம்பா.. பில்லா 2, தாண்டவம் போன்ற பெரிய படங்கள் ரெட்டில் எடுத்தவைதானேப்பா” என்றேன். “அதான் சார் அந்தப் படங்கள் ஓடல.. இவ்வளவு செலவு செஞ்சி படமெடுக்கறவங்க ஃபிலிமுலேயே எடுத்திருக்கிலாம் இல்லையா? இப்ப பாருங்க என்னாச்சின்னு..?!” என்று ஆதங்கப்பட்டார். ’அடப்பாவிங்களா.. என்னமா சிந்திக்கிறாங்க’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

விஷயம் என்னான்னா... டிஜிட்டலில் படமெடுத்தால் அது ஓடாது என்ற ஒரு கருத்து இங்கே தமிழ் சினிமாவில் பரவிக்கிடக்கிறது (கிடந்தது). துப்பாக்கி(அலெக்சா), சூது கவ்வும்(ரெட்), பீட்ஸா(ரெட்), நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் (5D)போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்தான் தமிழ் திரைப்படவுலகம் டிஜிட்டலின் மேலிருக்கும் அவநம்பிக்கையை கைவிடத்துவங்கிருக்கிறது. இதேப்போலானதொரு அவநம்பிக்கையை ‘கருப்பு வெள்ளை’ ஃபிலிமிருந்து ‘கலருக்கு’ மாறியபோதும், ‘35mm’ பிரதியிலிருந்து 'Cinemascope'-க்கு மாறியபோதும் இத்தமிழ்திரையுலகம் கொண்டிருந்ததாம். மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் அதை அவநம்பிக்கையோடு எதிர் கொள்வதைத்தான் வழக்கமாக கொண்டிருக்கிறது நம் தமிழ் திரையுலகம். இதே கதைதான் படத்தொகுப்புத்துறையில் ‘AVID' அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். Super 16mm, DI போன்றவற்றிற்கும் இதே நிலைமைதான்.

சரி, அது கிடக்கட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம். இந்திய/தமிழ் திரைப்படத்துறையில் ‘ALEXA, RED, CANON 5D, Blackmagic Cinema Camera’ என பலவகையான டிஜிட்டல் கேமராக்கள் புழக்கத்திலிருந்தாலும், இதில் ஆதிக்கம் செலுத்துவது ‘ARRI’ நிறுவனத்தின் ‘Alexa’ கேமராவும், ‘RED’ நிறுவனத்தின் ‘RedMX’ மற்றும் ‘Red Epic’ கேமராக்கள்தான். இதில் ‘ARRI’ நிறுவனம் தன் ‘Alexa’ வகை கேமராக்களின் வரிசையில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியிருக்கிறது. பல புதிய கேமராக்களை அறிமுகப்படுத்திருக்கிறது. அவற்றைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இங்கே.

‘ARRI’ தன்னுடைய ‘ALEXA’ கேமராவை 2010-இல் அறிமுகப்படுத்தியது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான ‘ALEXA PLUS’-ஐ 2011 / 2012-இல் அறிமுகப்படுத்தியது. இக்கேமராக்கள்  ‘SxS Module’-ஐப் பயன்படுத்தி ‘SxS PRO card’-இல் பிம்பங்களை பதிவுசெய்கிறது. இவ்வகை கேமராக்களை ‘ALEXA Classic Cameras’ என்று அந்நிறுவனம் தற்போது அழைக்கிறது. காரணம் ‘ALEXA XT Cameras’ என்னும் புதியவகை கேமராக்களை அந்நிறுவனம் 2013-இல் அறிமுகப்படுத்திருப்பதே ஆகும்.

'ALEXA Classic Cameras' பிரிவில் ALEXA, ALEXA Plus, ALEXA Plus 4:3, ALEXA M, ALEXA Studio, ALEXA HD மற்றும் ALEXA HD Plus ஆகிய கேமராக்கள் உள்ளன. ஏழு வகையான கேமராக்கள்.


தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ALEXA XT Cameras’ பிரிவில்  ALEXA XT, ALEXA XT M, ALEXA XT Plus and ALEXA XT Studio ஆகிய கேமராக்கள் உள்ளன. நான்கு வகையான கேமராக்கள்.

‘ALEXA XT’ என்பதை ‘Xtended Technology’ என்பதன் சுருக்கம் என்று ARRI சொல்லுகிறது. இக்கேமராக்களின் சிறப்புத் தகுதிகளாக ‘XR Module (Xtended Recording), Internal ND Filtration, 4:3 Super 35 Sensor, Built-in CDL server மற்றும் LDS PL mount என வரையறுக்கப்பட்டிருக்கிறது.


Codex

‘XR Module’

‘XR Module’(Xtended Recording) என்பது ‘ARRI RAW Footage’-ஐ நேரடியாக கேமராவிலேயே பதிவு செய்ய ஏதுவாகும் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. முன்பு ‘ALEXA PLUS’ கேமராக்களில் ‘ARRI RAW Footage’ பதிவு செய்ய ‘Codex Recorder'-ஐப் பயன்படுத்த வேண்டியதிருந்தது. தற்போது  ‘Codex Recorder’ சிறிதாக்கப்பட்டு ‘Hard Disc'வடிவில் கேமராவிலேயே இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தரமான RAW Footage-ஐ பெறுவது சுலபமாகிறது. மேலும் கேமராவின் எடை அதிகரிப்பதை இது தடுக்கிறது.



‘Internal ND Filtration’ என்பது, கேமராவிற்கும் லென்சிற்கும் இடையே ND ஃபில்டர்களை பொருத்துவதைக் குறிக்கிறது. லென்ஸ் மவுண்டில் ND ஃபில்டர்களை பொருத்த முடியும். இவை லென்சின் பின்புறம், சென்சருக்கு முன்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக ஃபில்டர்களை லென்சின் முன்புறம்தான் பொருத்துவார்கள். அப்படிப் பொருத்தப்படும் ஃபில்டர்களிலிருந்து பிரதிபலிக்கும் தேவையற்ற ஒளியைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியம். தற்போது லென்சிற்கு உட்புறம் பொருத்துவதால் இந்த தேவையற்ற பிரதிபலிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கு தெரியும் இதன் தேவை என்ன என்பதைப்பற்றி. ஆகையால், இது ஒரு முக்கியமான தகுதி மேம்பாடு என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

‘4:3 Super 35 sensor’ என்பதை விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக HD கேமராக்களைப்போல 16:9 வகை சென்சாராக இல்லாமல், ஒரு முழுமையான 35mm ஃபிலிமைப்போல 4:3 சென்சாராக வைத்திருப்பது பிம்பத்தின் தரத்தை அதிகரிக்க பயன்படும். மேலும் சில பயன்களும் உண்டு.

‘Color Decision List’ என்பதின் சுருக்கம் இந்த CDL. இதைப்பற்றி தகவல்களை வேறொரு கட்டுரையில் காண்போம். அல்லது இங்கே சென்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

‘LDS PL mount’ என்பது ‘Lens Data System’ அமைப்பு கொண்ட மவுண்டைக்குறிப்பது. லென்சிலிருந்து தகவல்களை கேமராவுக்கு அனுப்பும் தகுதி கொண்ட லென்சுகளை குறிக்கிறது. லென்சில் வைக்கப்படும் எக்ஸ்போஸர் என்ன? ஃபோகஸ் என்ன, எந்த Focal Length lens பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களை கேமராவிற்கு அனுப்பி சேமிக்கவல்லது.

Alexa XT

Alexa XT M

Alexa XT Plus

Alexa XT Studio

‘XR Module’(Xtended Recording) மாற்றி விட்டு  ‘SxS Module’ வகையைக்கூட பயன்படுத்தும் வகையில்  ‘ALEXA XT’ கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சில மேம்பாடுகளை ‘ALEXA XT’ கேமராக்கள் கொண்டுள்ளன.

 ‘SxS Module’ மற்றும் ‘XR Module’


 டிஜிட்டல் கேமராக்களில், RED நிறுவனத்தின் EPIC வகை கேமராக்களுக்கு இந்த ‘ALEXA XT’ கேமராக்கள் சரியான சவாலாக இருக்கும் என்று படுகிறது. இரண்டு நிறுவனங்களும் அவற்றிற்கே உரிய பயனீட்டாளர்களை வைத்திருந்தாலும்.. Epic கேமராவின் 5K Footage-களுக்கு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ‘ALEXA’-வைப் பயன்படுத்தும் போது ‘Codex’-ஐ பயன்படுத்த வேண்டுமே என்பது சிறு இடையூராக இருந்தது வந்தது இதுவரை. காரணம் Codex இணைப்பதால் அதிகரிக்கும் கேமராவின் எடை. தற்போது அந்தப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ARRI நிறுவனம். இனி Epic vs Alexa போட்டியில் alexa முந்துவதில் எவ்வித இடையூறும் இருக்கப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இங்கே தமிழ்நாட்டில்/இந்தியாவில் 5K footage எல்லாம் தேவைக்கு அதிகமானது. இந்தியாவில் எல்லா திரையரங்கும் 2K-வில் தான் இயங்குகிறது. மேலும் 5K Footage எல்லாம் 'VFX' வேலை அதிகமுள்ள படங்களுக்குத்தான் தேவைப்படும். ஆகையால்  இன்னும் சில வருடங்களுக்கு நமக்கு 2K-வே போதுமானது. Epic-கின் 5K இன் மூலம் அதிகபடியாகும் 'Hard Disc'-களின் எண்ணிக்கை ஒரு குறையாகவே இங்கே பார்க்கப்படுகிறது.

RED நிறுவனம் துவங்கும்போதே டிஜிட்டல் கேமராக்களில்தான் தன் பயணத்தை துவங்கியது. ARRI அப்படி இல்லை. 'Film Cameras' வகைகளின் ஜாம்பாவான்களில் ஒன்றான இந்நிறுவனம் தன்னுடைய பதினொரு டிஜிட்டல் கேமராக்களை அறிமுகப்படுத்திருப்பதன் மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எதிர்கால சாத்தியத்தை உறுதிபடுத்துகிறது என்பதை நாம் இங்கே கவனிக்க தவறிவிடக்கூடாது.

காலம் அதன்போக்கில் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மாற்றம் நிகழ்வதை நாம் உணர்வதற்குள்ளாக பெரும் மாற்றங்களை கடந்து வந்துவிடுகிறோம். வாழ்வின் சுவாரசியங்களில் / விநோதங்களில் ஒன்று இது. தனிப்பட்ட வாழ்தலில் எப்படியோ..! தொழிலில் இம்மாற்றங்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டியதும்.. அதில் தேர்ச்சியடைவதும்.. தொழில்நுட்பதின் வளர்ச்சியோடு நம் பாதையை அமைத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாததாகிறது. இல்லையேல் நம் பயணம் தடைபட்டுவிடும். வெற்றி என்பது தொடர்ந்து நடைபோடுவதன் மூலமாக கிட்டுவது.. கற்பனை செய்வதன் மூலமாக மட்டுமில்லை.

ALEXA Cameras Overview:


ALEXA Classic Upgrade: XR Module:

ALEXA Classic Upgrade: Internal Filter Module IFM-1:


பின் குறிப்பு:

என்னுடைய முந்தையப்படமான ‘ஒண்டிப்புலி’-ஐ Alexa Plus கேமராவில் எடுத்தோம். அதைப்பற்றி முன்பே என் தளத்தில் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் லிங்க் இங்கே:

'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:

'Arri Alexa' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்:

'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்_Part-2:




RED கேமராக்களின் லிங்க் இங்கே:

'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்:

'Red One 'EPIC' - ஒரு அறிமுகம்:

‘Scarlet-X’ - சவால் விடும் புது எதிரி:

  

கருத்துகள்

  1. அடேங்கப்பா! காமராவைப்
    பற்றி இவ்வளவு விபரங்களைத் தருகிறீர்களா?

    எப்படி இவ்வளவு
    நாள் தங்களைத் தவற விட்டேன்.மன்னிக்கவும்.

    வாழ்க வளமுடன்

    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,