முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:

வருங்காலங்களில் 'Digital' தொழில்நுட்பம் ஆட்சி செலுத்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது திரைப்படத் தயாரிப்பிலும் பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேபோகிறது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நம்மை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம்.  நம்மை 'update' செய்துக்கொள்வது என்பது இன்றைய சூழலில் மிக ஆதாரமான செயலாகிறது.


புதிய தொழில்நுட்பங்களையும் புதிய கருவிகளையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன். அதன் வரிசையில் 'ARRI' நிறுவனத்திலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'ALEXA' என்கிற 'HD' தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவைப்பற்றிய கட்டுரை இது.






'ALEXA'  எடை குறைந்த, அளவில் சிறிய, செலவு குறைந்த 'டிஜிட்டல்' கேமரா. 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தை அடுத்தத் தளத்திற்கு அழைத்துச்செல்லும். சுலபமான 'Workflows'. 35 mm தரத்திற்கு இணையான படம் (Image). திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரப்படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகள் என எதையும் குறைந்த செலவில் இந்தக் கேமராவைக்கொண்டு எடுக்கலாம் என்பதே இந்தக் காமிராவைப்பற்றி 'ARRI' நிறுவனத்தின் அறிமுகம்.


  
இந்த கேமரா 'ARRI' தொழில்நுட்பத்தை மட்டுமல்லாமல் இந்தத்துறையில் இருக்கும் மற்ற பிரபல நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. உதாரணமாக 'Apple' நிறுவனத்தின் 'Apple QuickTime' தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.


இந்த கேமரா பிம்பங்களை 'SxS memory card'-ல் சேமிக்கிறது. இந்த 'cards'-க்கான இடம் கேமராவிலேயே இருக்கிறது. (Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded images onto on-board SxS memory cards)


'ALEXA' கேமராவின் தரம் '35mm ஃபிலிமின்' தரத்தோடு ஒத்திருக்கும் என சொல்லுகிறார்கள். காரணம் இந்த கேமரா வழக்கமாக 35mm கேமராக்களில் பயன்படுத்தப்படும் லென்சுகளைப் பயன்படுத்த 'PL Mount'-ஐ கொண்டுள்ளது. அந்த லென்சுகளைப் பயன்படுத்தும் போது ஒரு ஒளிப்பதிவாளன் காட்சியின் 'Focus'-ஐ கட்டுப்படுத்துவதன் மூலம் தனக்கு தேவையான 'Depth of Field'-ஐ உருவாக்கமுடியும். இதனால் பார்வையாளனை திரைப்பட பாணி கதை சொல்லலில் ஒன்றிணைக்க முடிகிறது.


'Digital' பிம்பத்தின் தரத்தை உயர்த்த இந்த கேமரா '35mm' ஃபிலிமின் அளவில் உள்ள 'CMOS' சென்சரை(sensor) உபயோகப்படுத்துகிறது.  இதன் மூலம் 35mm' ஃபிலிமில் கொண்டுவரமுடிகிற அதே 'Depth of Field'-ஐப் பெறலாம்.


(பிம்பம் பதியப்படும் ஊடகத்தின் அளவைப் (size) பொறுத்து பிம்பத்தின் 'Depth of Field' மாறும்.(உ.ம்)  ஒரே 'Focal Lenght' லென்ஸைக்கொண்டு படம் எடுத்தாலும் '35mm' ஃபிலிமிலும் '16mm' ஃபிலிமிலும் 'Depth of Field' மாறும். அது தனி தலைப்பு. அதை வேறு கட்டுரையில் பார்க்கலாம்)




இங்கே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது மற்ற 'டிஜிட்டல் கேமராக்கள்' பயன்படுத்தாத இந்த 35mm அளவு 'CMOS' சென்சாரினால் பிம்பமானது, 35mm ஃபிலிமின் தரத்திலிருக்கும் என்று அவர்கள் சொல்வதைத்தான்.


இந்த கேமரா '800 EI' சென்சிட்டிவ்(sensitive) உடையது, அதாவது '800 ISO' திறன் கொண்ட 'ஃபிலிமை' பயன்படுத்துவதற்கு சமம்.


 13.5 'Stop' வித்தியாசத்தில் பிம்பத்தை பதிவு செய்யக்கூடிய 'latitude' கொண்டது.


இயல்பான வண்ண மறு உருவாக்கத்தைத் தருகிறது, வண்ணங்களிலிருக்கும் வித்தியாசத்தை சிறப்பாகப் பதிவு செய்கிறது இதனால் 'compositing' போது சுலபமாக வேலைசெய்யமுடிகிறது.


குறைந்த வெளிச்சத்திலும் 'Very low noise'-யே கொடுக்கிறது.


குறைந்த எடை, சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வடிவம் போன்றவை 'ALEXA' கேமராவை 'Handheld shots'-க்கு பயன்படுத்தும்போது எளிதாக இருக்கிறது. அதனுடைய அமைப்புகள் அனைத்தும் சுலபமாக கற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. நீங்கள் கேமராவில் extra கருவிகள் (உ.ம்: சிறிய விளக்கு, follow focus) பொருத்தினால் அதற்கு தேவையான மின்சாரத்தை பெற கேமராவிலேயே இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.


முக்கியமான அம்சம், நமக்கு தேவையான வண்ண மாறுபாட்டில்(color management) காட்சிகளை சேமிக்கமுடியும். அல்லது இயல்பாக காட்சிகளைச் சேமித்துக்கொள்ளும் அதே நேரத்தில், வண்ணமாறுபாட்டோடும் காட்சியைச் சேமிக்கமுடியும். அதாவது இரண்டு வித வண்ணத்தில் காட்சிகளை சேமிக்கமுடியும். இது பின்னால் 'Post Prodution'-னின் போது வண்ண நிர்ணயித்தலில் பயன்படும்.



எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த கேமரா ஓடும் என்கிறார்கள். அது இமயமலையோ, விண்வெளி ஓடமோ எங்கே வேண்டுமானாலும் இயங்கும். ( RED-ONE போன்ற கேமராக்கள் விரைவில் வெப்பம் அடைந்து நின்று விடுகின்றன, வெப்பம் தணியும் வரை காத்திருக்க வேண்டியதாகிறது)


மற்ற எந்த டிஜிட்டல் கேமராவும் செய்யாத வகையில் இந்த கேமரா 'Post Prodution'-இல் உதவுகிறது. உதாரணமாக 'Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded' பிம்பங்களை பதிவுசெய்வதன் மூலம் நாம் இங்கே பயன்படுத்திக்கொண்டிருக்கும் 'editing' கருவிகளையே பயன்படுத்தலாம். 'Apple’s Final Cut Pro editing software'-ஐ பயன்படுத்தி எடிட்டிங் செய்யலாம். இதனால் புதிய கருவிகள் வாங்க வேண்டிய செலவுகள் தவிர்க்கப்படுகிறது.


'Apple ProRes 4444' கோடக்கை(Codec) பயன்படுத்தி 15 நிமிடமும், 'Apple ProRes 422 (HQ)' கோடக்கை பயன்படுத்தினால் 20 நிமிடமும் 32GB Card-ல் பதிவுசெய்ய முடியும். இந்த Card-ஐ அப்படியே நேரடியாக 'Apple’s MacBook Pro' போன்ற மடிக்கணினியில் பயன்படுத்த முடியும். உலகமுழுவதும் பயன்பாட்டிலிருக்கும் 'HD' பிம்பங்களை பதிவுசெய்வதனால் 'Direct to Edit' (DTE) தொழில்நுட்பத்தில் நம்மால் நேரடியாக எடிட் செய்ய முடிகிறது. அதாவது படபிடிப்பு தளத்திலேயே நம்முடைய காட்சிகளைப் பார்க்கவும், எடிட் செய்யவும் முடியும். இதனால் உங்களின் தவறுகளை உடனுக்குடன் சரி செய்துகொள்ள முடியும்.


'Uncompressed HD or ARRIRAW' கோடக்கை பயன்படுத்தி பிம்பத்தை பதிவு செய்தால் 'off-line/on-line workflow' முறையில் வேலை செய்ய வேண்டும்.  'full resolution' பிம்பங்களை 'Editing System'-தில் ஏற்றி வேலை செய்ய அதிகத் திறன்வாய்ந்த கணினி தேவைப்படும். நேரமும் அதிகரிக்கும். அதனால் செலவும் கூடும் என்பதனால் அதைத் தவிர்க்க off-line/on-line workflow-வை கொண்டுவந்தார்கள். அதாவது 'low resolution' பிம்பங்களை கொண்டு எடிட் செய்வது பின்பு அந்த பிம்பங்களில் பதியப்பட்டிருக்கும் தகவல்களைக் (datas: Timecode) கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'full resolution' பிம்பங்களாக எடுத்துக்கொள்வது. இதனால் தேவையற்ற நேர விரையம், கணினியில் அதிக சேமிப்பு இடம் தேவைப்படுதல் போன்றற்றைத் தவிர்க்க முடியும்.



இந்த கேமரா அதற்கான 'off-line/on-line பிம்பங்களை தனித்தனியாக கேமராவிலேயே பதிவு செய்து தந்துவிடுகிறது. இதனால் எடிட்டிங்கின் போது இரண்டு விதமாக பிம்பங்களை பிரிக்க வேண்டிய தேவையில்லாமல் போகிறது. நேரமும் செலவும் சேமிக்கப்படுகிறது.


(off-line என்பது குறைந்த resolution கொண்ட பிம்பங்கள், அதாவது நாம் படம்பிடித்த 'high resolution' பிம்பங்களை 'compress' செய்து கொள்வார்கள், இதனால் கணினியில் இடம் அதிகம் தேவைப்படாது மற்றும் குறைந்த RAM போன்றவை இருந்தாலும் இலகுவாக வேலைச் செய்ய முடியும்.

எடிட் செய்து முடித்த பிறகு, 'Time-code' or EDL -ஐ கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'High Resolution'-ல் ஏற்றிக்கொள்ள முடியும். இந்த முறையை 'Online' என்கிறார்கள்.)




இந்த கேமரா 16:9 'ஆஸ்பெக்ட் ரேசியோவில்' (Aspect Ratio) '2880 x 1620 pixal' என்ற கணக்கில் பிம்பத்தை சேமிக்கிறது. அதாவது 2K Resolution. இது ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட போதுமான தரம்.


கேமராவின் வேகம் நொடிக்கு குறைந்தது 0.75 frame-ஆகவும், அதிக பட்சிமாக நொடிக்கு 60 frame-ஆகவும் இருக்கிறது(0.75 – 60 fps)


இதன் shutter : Electronic shutter, 5.0° to 359.0° கோணங்களில் மாற்றியமைக்க முடியும். (shutter-இன் கோணங்களை மாற்றியமைப்பதன் மூலம் சில சுவாரசிமான பிம்பங்களை உருவாக்க முடியும். இதுவும் தனி கட்டுரைக்கான களம்)






மற்ற 'ARRI' டிஜிட்டல் கேமராக்களில் இருப்பதைப்போலில்லாமல் இதில் 'ARRI Electronic Viewfinder EVF-1' இணைக்கப்பட்டுள்ளது. மற்ற D20, D21 டிஜிட்டல் கேமராக்களில் 'Optical Viewfinder' உள்ளது. இதில் இந்த வசதி குறை என நான் நினைக்கிறேன். 'Optical Viewfinder' தான் காட்சியின் தரத்தை கட்டுப்படுத்துவதில் அதிகம் பயன்படும் என்பது என் நடைமுறை அனுபவம். இந்த கேமராவைப் பயன்படுத்திப் பார்த்தால் தான் இதைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ள முடியும்.


இப்போதெல்லாம் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாளே அதனுடைய அடுத்த 'version' கருவிகள் வந்து விடுகின்றன. அப்படியிருக்க புதிய கருவிகளின் மீது பணம் போட தயக்கம்காட்ட வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் 'mobile phone' வாங்கினீர்கள் என்றால் அடுத்த வாரமே அதைவிட தரம் மிகுந்த, விலை குறைந்த போன்கள் வந்துவிடுவதை அறிவீர்கள். அதேபோல் தான் தொழில்நுட்ப கருவிகளிலும் நிகழ்கிறது. இதைச் சமாளிக்க இந்த கேமராவின் பாகங்கள் மாற்றி அமைக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய கருவி பாகங்கள் வரும்போது அதை மட்டும் வாங்கி மாற்றி அமைத்துக்கொள்ளலாம். முழு கேமராவையும் வாங்க வேண்டியது இல்லை.



இந்த கேமராவில் 
1. 'பிம்பங்களை சேமிக்கும் பகுதி'(Storage Interface Module)
2. 'மின்னனு இயந்திரப்பகுதி'(Electronics Interface Module) மற்றும்
3. 'லென்ஸ் இணைப்பு பகுதி'(Exchangeable Lens Mount (ELM)) போன்றவற்றை தொடர் வளர்ச்சிக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.


முடிவாக இந்த கேமரா இப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இதனுடைய துணைக்கருவிகள அனைத்தும் ஏற்கனவே உலகமுழுவதும் பயன்பாட்டில் இருப்பவைதான். அதனால் இந்த கேமராவை பயன்படுத்துவது எளிதாகிறது. உலகின் எந்த மூலையிலும் இந்த கேமராவை பயன்படுத்தலாம் என்பது 'ARRI' நிறுவனத்தின் உறுதிமொழி. இதை நாம் நம்பலாம் ஏனெனில் 'ARRI' நிறுவனம் நம்பத் தகுந்த தரமான கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பது உலகமுழுவதும் நம்பப்படுகிற ஒன்று.





கருத்துகள்

  1. நண்பர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு,
    நிறைய புதியத் தகவல்கள். மிகவும் நன்றி. ஒரு சந்தேகம். படப்பிடிப்பின் போது, கேமராவை தேர்ந்தெடுப்பது படத்தின் இயக்குனரா அல்லது ஒளிப்பதிவாளரா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே..

    கதை அமைப்பு, படத்தின் தன்மை மற்றும் தயாரிப்பாளரின் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு படத்திற்கு தேவையான கேமரா ஒளிப்பதிவாளரால் தீர்மானிக்கப்பட்டு இயக்குனரின் சம்மதம் வாங்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான தகவல்கள். தொடர வாழ்த்துக்கள்.

    //இந்த கேமரா அதற்கான 'off-line/on-line பிம்பங்களை தனித்தனியாக கேமராவிலேயே பதிவுச்செய்து தந்துவிடுகிறது.//

    off-line/on-line பிம்பங்கள் என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பர்களே..

    off-line என்பது குறைந்த resolution கொண்ட பிம்பங்கள், அதாவது நாம் படம்பிடித்த 'high resolution' பிம்பங்களை 'compress' செய்துக்கொள்வார்கள், இதனால் கணினியில் இடம் அதிகம் தேவைப்படாது மற்றும் குறைந்த RAM போன்றவை இருந்தாலும் இலகுவாக வேலைச் செய்ய முடியும்.

    எடிட் செய்து முடித்த பிறகு, 'Time-code' or EDL -ஐ கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'High Resolution'-ல் ஏற்றிக்கொள்ள முடியும். இந்த முறையை 'Online' என்கிறார்கள்.
    -------------------------
    விலை dollar-களில் உள்ளது. எல்லா துணை உபகரணங்களும் சேர்த்து 1 கோடிக்கு அருகில் வரும்....

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா2 மே, 2010 அன்று 6:27 AM

    //நீங்கள் ஏன் ஓட்டுப்போடக்கூடாது..!?//

    போட்டுட்டேன்.

    நானும் தொழில்நுட்ப ஆர்வலன்தான். உங்கள் கட்டுரை பயனுள்ளதாக, எளிமையாக உள்ளது. கட்டுரைக்கு ஏற்ற படங்களை சேர்க்க விசேஷ முயற்சி எடுக்கிறீர்களா? சில எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பரே..தவறுகள் வராமல் இருக்க முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. hiiiiiiiii armstrong tat was a gud post dng great job plse cont tis n also small opinion sir,am totally aware of tis cinematography section.
    but very much interested about tis u can teach tis from basics know inspite of u rprecious time,teach us from the basics through tis blog sir
    with the image details.sorry if anything said wrong

    பதிலளிநீக்கு
  8. விசுவல் கம்யுனிகேசன் படிக்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு அருமையான தகவல்களை தருகிறீர்கள். நன்றி தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  9. first of all i d like to thank you for giving those infomations, great job i ve read your few posts ,i shows that your technical knowledge & social impact, ya every one must ve a thirst ... i d like to know whether it is avaiable in chennai ... i d be greatful to u you give some other useful links...

    பதிலளிநீக்கு
  10. AWE SOME WRITING.......THANKS A LOG AND அருமையான தமிழ் சொற்கள்... இதை தமிழில் கொண்டு வந்ததற்காக தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...