முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசீர்வதிக்கப்பட்ட கணம்

எங்கள் இயக்குனர் திரு.அந்தோணி சார்லஸின் குட்டி தேவதை ‘நிலா தெரசா’-க்கு நேற்று ‘BAPTISM’ நடந்தது. அப்போது நான் எடுத்த சில படங்கள் இங்கே. குழந்தைகளை படமெடுக்கும்போது உண்டாகும் அற்புத மனநிலையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு தியானம் போல, இசையில் லயித்து நம்மை இழப்பது போல ஒரு கணம் அது. பொதுவாகவே புகைப்படம் எடுக்கும்போதும் ஒளிப்பதிவின் போதும்.. ஒரு அற்புத சூழலுக்கு நான் தள்ளப்படுவது வழக்கம். அந்தக் கணத்தில் வாழ்வது என்று சொல்லுவார்களே.. அதைப்போல ஒரு நிலையில் நான் இருப்பதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன். அதிலும் குழந்தைகளை படமெடுக்கும் போது.. அக்கணம் ஆசிர்வதிக்கப்பட்ட கணமாகிறது.











கருத்துகள்

  1. புகைப்படங்கள் மிகவும் அருமை. அவற்றின் தொழில்நுட்ப மேலதிக விவரங்கள் (technical details) அறிய ஆவலுடன் இருக்கிறோம். தயவு செய்து அவற்றைத் தர இயலுமா ?

    பதிலளிநீக்கு
  2. அனைத்து புகைபடங்கலும் அருமை, மற்றும் உமது கட்டுரைகள் அனைத்தும் வளர்ந்து வரும் உதவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது..... ஒரு வேண்டுகோல் Depth of Field பற்றியும் மற்றும் அது எப்படி Calculate செய்வது என்றும் கட்டுரை ஒன்று விலக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்......நன்றி.....

    பதிலளிநீக்கு
  3. அனைத்து புகைபடங்கலும் அருமை, மற்றும் உமது கட்டுரைகள் அனைத்தும் வளர்ந்து வரும் உதவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது..... ஒரு வேண்டுகோல் Depth of Field பற்றியும் மற்றும் அது எப்படி Calculate செய்வது என்றும் கட்டுரை ஒன்று விலக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்......நன்றி.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...