எங்கள் இயக்குனர் திரு.அந்தோணி சார்லஸின் குட்டி தேவதை ‘நிலா தெரசா’-க்கு நேற்று ‘BAPTISM’ நடந்தது. அப்போது நான் எடுத்த சில படங்கள் இங்கே. குழந்தைகளை படமெடுக்கும்போது உண்டாகும் அற்புத மனநிலையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு தியானம் போல, இசையில் லயித்து நம்மை இழப்பது போல ஒரு கணம் அது. பொதுவாகவே புகைப்படம் எடுக்கும்போதும் ஒளிப்பதிவின் போதும்.. ஒரு அற்புத சூழலுக்கு நான் தள்ளப்படுவது வழக்கம். அந்தக் கணத்தில் வாழ்வது என்று சொல்லுவார்களே.. அதைப்போல ஒரு நிலையில் நான் இருப்பதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன். அதிலும் குழந்தைகளை படமெடுக்கும் போது.. அக்கணம் ஆசிர்வதிக்கப்பட்ட கணமாகிறது.
இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...
supper
பதிலளிநீக்குபுகைப்படங்கள் மிகவும் அருமை. அவற்றின் தொழில்நுட்ப மேலதிக விவரங்கள் (technical details) அறிய ஆவலுடன் இருக்கிறோம். தயவு செய்து அவற்றைத் தர இயலுமா ?
பதிலளிநீக்குAwesome Awesome Awesome ...!
பதிலளிநீக்குஅனைத்து புகைபடங்கலும் அருமை, மற்றும் உமது கட்டுரைகள் அனைத்தும் வளர்ந்து வரும் உதவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது..... ஒரு வேண்டுகோல் Depth of Field பற்றியும் மற்றும் அது எப்படி Calculate செய்வது என்றும் கட்டுரை ஒன்று விலக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்......நன்றி.....
பதிலளிநீக்குஅனைத்து புகைபடங்கலும் அருமை, மற்றும் உமது கட்டுரைகள் அனைத்தும் வளர்ந்து வரும் உதவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது..... ஒரு வேண்டுகோல் Depth of Field பற்றியும் மற்றும் அது எப்படி Calculate செய்வது என்றும் கட்டுரை ஒன்று விலக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்......நன்றி.....
பதிலளிநீக்கு