http://www.mbcomicstudio.com இரண்டு நாட்களுக்கு முன்பாக, நானும் நண்பர் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கும்போது, காமிக்ஸ் பற்றி பேச்சு வந்தது. அண்மையில் வெளியான முத்து காமிக்ஸின் ‘என் பெயர் டைகர் (Mr.Bluberry)’ பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தோம் எனலாம். அதன் களம், கதை, ஓவியம் பற்றிய பிரமிப்பு எங்களைத் பலமாகவே தொற்றிக்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழில் ஏன் யாரும் காமிக்ஸ் தயாரிக்க, வரைய முயற்சிப்பதில்லை, அப்படியான தகுதியோ, முயற்சியோ இங்கே இல்லவே இல்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டோம். தமிழில் ஆங்காங்கே, ஓரிரு முயற்சிகள் நடந்துவந்திருக்கின்றனதான் எனினும், எங்கள் ஆதங்கத்தில் தவறொன்றுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள்தானே? தமிழில் கால காலத்திற்கும் நிலைத்து நிற்கும், தகுதியான பல அற்புதமான கதைகள் இருக்கின்றவே, அவற்றை எல்லாம் காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றினால் எப்படி இருக்கும்.? குறிப்பாக ‘பொன்னியன் செல்வன்’ நாவலை, காமிக்ஸ் தொடராக மாற்றினால், அது தமிழ் சமுகத்திற்கு எத்தனைப் பெரிய கொடையாக இருக்கும். இதைச் செய்ய இங்கே ஆட்கள் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் ஆட்களைப் பயன்படுத்தியாவ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!