முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

CINEMATIC LIGHTING WORKSHOP Dec 21st 2019 For Photography & Cinematography

CINEMATIC LIGHTING WORKSHOP Dec 21st 2019 For Photography & Cinematography 21.12.19 - Saturday - Chennai  9.30AM - 5.30PM WHAT WILL BE COVERED ON THE DAY? : Introduction to the Workshop; understanding lights and accessories. Know what particular lighting equipment to be used to do so. Essential lighting techniques: Learn how to illuminate a subject/scene by using external light sources. How do we know when a picture is exposed correctly? Understanding the greyscale. Lighting Level. What lighting level should we start with? Subjective lighting:  Let go of some of the rules of traditional lighting. Learn simple 3 point lighting. Know the difference between Hard Sources and Soft Sources of light. What are the differences and how do we use them. Colour Temperature.  Understanding Kelvin.  Using color. What are the problems of using gels. Learning to control and manipulate light with Limited setups:  how we can repr

Lumix S1 & S1R Test Footages

ஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது .? ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்தும்போது , அக்கேமராவிற்கென பல்வேறு சிறப்பு அம்சங்களை குறிப்பிடுகின்றன . அவற்றை முறையாக பரிச்சித்து பார்த்து புரிந்துக்கொள்வது அவசியமாகும் .  லிட்டருக்கு இத்தனை கிலோடு மீட்டர் கொடுக்கும் என்று ஒவ்வொரு இருசக்கர / நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் நிறுவனங்கள் கொடுக்கும் வாக்குறுதியைப்போன்றதுதான் இதுவும் . அதாவது , முறையான , தரமான , சோதனைச் சாலையில் ஓடும் போது , அவர்கள் குறிப்பிடும் அளவில் மைலேஜ் கொடுக்கும் , பொது பயன்பாட்டிலிருக்கும் சாலையில் அவர்கள் கொடுக்கும் மைலேஜை எவ்வாகனமும் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிவோம் . அதேப்போலத்தான் இங்கேயும் … கேமரா நிறுவனங்கள் சொல்லும் , அத்தனை சிறப்பு அம்சமும் , எத்தனை சதவிதம் நடைமுறைக்கு ஒத்து வரும் என்பதை நாம்தாம் பரிச்சித்து அறிந்துக்கொள்ள வேண்டும் .  பொதுவாக , கேமராவை சோதிக்கும்போது .. அதன் அதிக பட்ச தாங்கும் திறனை சோதித்துப்பார்ப்பது என் வழக்க

Lumix S1H is the First Netflix Approved Mirrorless Camera:

டிஜிட்டல் போட்டோகிராஃபியில், முக்கியமான மாற்றங்கள் பல,  கடந்த சில வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கிறது. - முதல் மாற்றம், SLR, DSLR வரிசையில் இப்போது Mirrorless Cameras. 'Epson' நிறுவனம் 2004 இல் Mirrorless Camera-வைக் கண்டுபிடித்த போதும், 2008-இல் பேனாசோனிக் தன்னுடைய Lumix G1 மூலம் சந்தைக்கு கொண்டுவந்தது. இன்று வரை தொடர்ந்து Mirrorless கேமராக்களை சந்தைப்படுத்துகிறது. அண்மையில் தான் Canon மற்றும் Nikon நிறுவனங்கள் தங்களுடைய Mirrorless Camera கேமராக்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. Mirrorless Cameras தான் எதிர்காலம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். - இரண்டாவது .. கேமராக்களின் Sensor Size யுத்தம். ஒரு கேமராவிற்கு, 'சென்சார்' தான் அதன் உயிர்நாடி என்பதை நாம் அறிவோம். சிறிய சென்சார்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சென்சார்களை நோக்கி கேமரா நிறுவனங்கள் நகர்கின்றன. 1/3.2"(4.54mm x 3.42mm)) இருந்து Full Frame(36mm x 24mm) என்று சொல்லப்படும் பெரிய சென்சார் வரை மாற்றம் கண்டிருக்கிறது. இன்றைய தேதியில் Full Frame Sensor கேமராக்கள் தான் மார்கெட்டை தக்க வைத்துக்கொண்டிரு

LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

ஒரு கல்லில் இரண்டு மாங்கா .. கேள்விப்பட்டிருக்கிறீர்களா ..!? அது இதுதான் . அடுத்த மாதம் ( ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம் தேதிகளில் , கோத்தகிரியில் நாம் ஒரு பயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம் .  இப்பயிற்சிப்பட்டறை இரண்டு விதங்களில் பயன் தரும் . 1. ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது . அதற்கான ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள் யாவை . சிறிய செலவில் , கிடைக்கின்ற பொருளில் , சூழலில் , ஒளியில் , நேர்த்தியான ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது என்ற நுட்பத்தை செயல்முறை விளக்கமாக செய்து பார்த்து கற்றுக்கொள்ளப் போகிறோம் . மூன்று நாட்களுக்கு படபிடிப்பை , கோத்தகிரி பகுதிகளில் நடத்த இருக்கிறோம் . ஒரு சிறிய குழுவாக இதனை செய்திடப் போகிறோம் .  2. கோத்தகிரி போன்ற ஒரு மலைப்பிரதேசத்தின் அழகை ரசித்திடப்போகிறோம் . மொதுவாக மலை வாசத்தளங்களுக்கு நாம் சுற்றுலாப்போகும் போது , வழக்கமான ஜன நெருக்கடியான (Tourist Spots) பகுதிகளுக்குத்தான் சென்று வருவோம் . ஆனால் .. இந்த மூன்று நாட்களும் ஜன நெருக்

கடலோரக் கவிதைகள்: இயக்குநர் பாரதிராஜாவோடு ஓர் உரையாடல்

நேற்று, BRIIC மாணவர்களுடன், பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படத்தை அவரோடு சேர்ந்து, அகண்டத்திரையில் பார்த்தோம்.  எளிமையான காதல் கதை.  காதல் கதைகளுக்கே உரிய பரவசமும், துயரமும் நிரம்பியக்கதை. 1986-இல் வெளியானத்திரைப்படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்,  நம்மைப் பாதிக்கிறது. படம் துவங்கியதிலிருந்து இறுதி வரை கட்டிப்போடுகிறது. எனில், அதன் செய்நேர்த்தியையும், கலைத்தன்மையையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் திரைப்படத்தின் மீது ஒரு இயக்குநருக்கு இருக்க வேண்டிய ஆளூமையை இத்திரைப்படம் நன்கு உணர்த்தியது.  திரைப்பட இயக்கம் என்பது என்ன..? ஒரு கதையை, அதன் சுவாரசியம் குறையாமல், உணர்வுப்பூர்வமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பது தானே..!?  அதை மிகச் சிறப்பாக பாரதிராஜா செய்திருக்கிறார் என்பதும், அவர் ஏன் தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பதையும் இத்திரைப்படம் பார்க்கப் புரிந்துக்கொள்ள முடியும். படம் பார்த்தவர்கள் பலருக்கும் அது புரிந்திருக்கும். பார்க்காத நண்பர்களையும், ஏற்கனவே பார்த்த நண்பர்களையும் இத்திரைப்படத்தை (மீண்டும்) பார்க்க பரிந்துரைக்கிறேன்.  பட