எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை (From Editing to Print)- ஆதார தொழில்நுட்பங்கள்
திரைப்படத்தை உருவாக்க உதவும் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று படத்தொகுப்பு (எடிட்டிங்). படத்தொகுப்பின் நுணுக்கங்கள், விதிகள் என பல உண்டு என்றாலும் நான் இங்கே விவரிக்கப்போவது படத்தொகுப்பு எப்படிச் செய்யவேண்டும் என்கிற பாடத்தை அல்ல.
படத்தொகுப்பு செய்ய பயன்படுத்தப்படும் ஆதார தொழில்நுட்ப முறைகளைப்பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருள்கள் 'லேபில்' 'டெவலப்' செய்யப்பட்ட பிறகு, எப்படி திரைப்படமாக படத்தொகுப்பு செய்யப்படுகிறது என்பதைப்பற்றிய சிறிய விளக்கமே இந்தக் கட்டுரை.
1. ரஷ் & நெகடிவ் கட்டிங் முறை:
இந்த முறையில், ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருளானது 'லேபில்' டெவலப் செய்யப்பட்ட பிறகு, அதிலிருக்கும் தவறான ஷாட்டுகளை (Not Good shots-NG shots) நீக்கிவிட்டு பிரிண்ட் போடப்படும். இதை 'ரஷ்' (Rush) என்கிறார்கள். அதாவது படச்சுருளில் என்ன பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதை 'சரிபார்க்கும் பிரதி' எனலாம். இந்த 'ரஷ் பிரிண்டைக்' கொண்டு எடிட் செய்கிறார்கள். தனித்தனியாக இருக்கும் ஷாட்டுகளை தேவைக்கேற்ப ஒன்றிணைத்து ஒரு முழுமையான படத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு 'மூவியாலா' மற்றும் 'ஸ்டின்பெக்'( Moviola, Steenbeck) என்ற கருவிகள் பயன்பட்டது. பின்பு இதை முன்மாதிரியாக கொண்டு படத்தின் ஆதார 'நெகட்டிவ்' (Original Negative)-வைக் கத்தரித்து ஒன்றிணைத்து, ஒரு திரைப்படத்தைப் ப்ரிண்ட் போடத் தேவையான 'பிச்சர் நெகட்டிவை'(Picture Negative) உருவாக்குகிறார்கள். பிறகு இதனோடு 'சவுண்டு நெகட்டிவ்' (Sound Negative)-வையும் சேர்த்து பிரிண்ட் போட்டு தியேட்டர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை 'லீனியர்' (linear editing) முறை என்கிறார்கள். இந்த முறை 1990க்கு முன்பு பயன்படுத்தப்பட்டது.
2. டெலிசினி & நெகடிவ் கட்டிங் முறை:
1987-இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1993-இல் பரவலாக பொதுப்பயன்பாட்டிற்கு 'ஆவிட்'(Avid) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. கணினியில் இயங்கும் இந்த கருவியைக்கொண்டு எடிட்டிங் செய்யமுடிந்தது, நாம் பதிவுசெய்த படச்சுருளை 'வீடியோவாக' மாற்றி கணினியில் ஏற்றி எடிட் செய்யும் முறை இது. இந்த முறையை 'நான்-லீனியர்' (Non-linear editing) எடிட்டிங் என்கிறார்கள்.
இந்த முறையில், நாம் பதிவுசெய்த படச்சுருளை 'லேபில்' டெவலப் செய்தபிறகு, ரஷ் பிரிண்டு போடுவதில்லை. அதற்குப் பதிலாக அந்த நெகட்டிவை 'டெலிசினி' என்ற கருவி/தொழில்நுட்பம் கொண்டு வீடியோவாக மாற்றுகிறார்கள். அதாவது நெகடிவாக இருக்கும் படத்தை நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் வீடியோ பிம்பங்களாக மாற்றுகிறார்கள். இந்த வீடியோ பிம்பங்கள் கணினியில் ஏற்றப்பட்டு 'ஆவிட்' எனும் மென்பொருளைப் பயன்படுத்தி எடிட் செய்யப்படுகிறது. (இப்போது 'FCP' மற்றும் பல மென்பொருள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன)
இந்த முறையில் எடிட் செய்ய 'டெலிசினி' செய்யும் போது, நெகட்டிவில் இருக்கும் ஒவ்வொரு பிம்பத்திற்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டிருக்கும், இந்த அடையாள எண்களும் வீடியோவாக மாற்றப்படும் பிம்பத்தோடு கணினியில் ஏற்றப்படும். பின்பு படத்தொகுப்பு முடிந்த பிறகு, இந்த அடையாள எண்களைக்கொண்டு 'EDL' (edit decision list) உருவாக்கப்படும். இந்த 'EDL' லிஸ்ட் என்பது மொத்த நெகட்டிவிலிருந்து எந்த எந்த பகுதி பிம்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற தகவலைக்கொண்டிருக்கும், இந்த தகவலைக்கொண்டு நெகடிவில் இருந்து பயன்படுத்தப்பட்ட பகுதிகளை வெட்டி எடுத்து ஒன்றிணைப்பார்கள். இந்த முறைக்கு 'நெகடிவ் கட்டிங்' என்று பெயர். இப்படி எடுத்து ஒன்றிணைக்கப்பட்ட நெகடிவைக்கொண்டு திரைப்படப் பிரதி எடுக்க தேவையான 'பிச்சர் நெகட்டிவை' (Picture Negative) உருவாக்குகிறார்கள். பின்பு இதனோடு 'சவுண்டு நெகட்டிவ்' (Sound Negative)-வையும் சேர்த்து பிரிண்ட் போட்டு தியேட்டர்களுக்கு அனுப்பும் பழைய முறைதான்.
குறிப்பு: இந்த 'ஆவிட்' முறையில் உலகளவில் முதலில் எடிட் செய்யப்பட்ட படம் 'Let's Kill All the Lawyers'(1992). தமிழில், முதல் படம் 'மகாநதி'(1993)
3.டெலிசினி & D.I முறை:
இந்த முறையில் நாம் மேலே பார்த்த அதே முறையில்தான் எடிட் செய்யப்படுகிறது. அதாவது டெவலப் செய்யப்பட்ட படச்சுருள் - டெலிசினி - ஆவிட் அல்லது FCP மென்பொருள்- 'EDL' லிஸ்ட் என்பது வரை அதே முறைதான். பின்பு 'நெகடிவ் கட்டிங்'(Negative Cutting) தான் நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக 'D.I' என்கிற புதிய முறை பயன்படுத்தப்படுகிறது. (இந்த D.I -ஐப் பற்றி தனியாக கட்டுரை உள்ளது)
இந்த 'D.I' முறையில், 'EDL' லிஸ்ட் எடுத்தபிறகு, அந்த லிஸ்டை அப்படியே மற்றொரு கணினியில் ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கணினி அதோடு இணைக்கப்பட்ட 'ஸ்கேனர்' (Scanner) கருவியின் துணைக்கொண்டு அந்த லிஸ்டில் குறிக்கப்பட்டிருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட ஷாட்டுகளை மட்டும் 'ஆதார நெகடிவிலிருந்து' (Original Negative) அப்படியே முழுமையாக 'ஸ்கேன்' (Scan) செய்து எடுத்துவிடுகிறது. இப்படி ஸ்கேன் செய்த பிம்பங்கள், டெலிசினி செய்யும்போது கிடைக்கும் வீடியோவைப்போல் குறைந்த தரத்தில் (Low Resolution 576i50) இல்லாமல் அதிக தரத்தில்(High Resolution-2K/4K) இருக்கும். இந்தப் பிம்பங்களை எடிட் செய்த வரிசைபடி கணினியில் அடுக்கி, பின்பு கணினியிலேயே 'color correction' செய்கிறார்கள். இப்படி 'color correction' செய்யப்பட்ட பிம்பங்களை மற்றொரு கருவியான 'நெகடிவ் ரெக்கார்டர்' (Negative Recorder)-ஐக் கொண்டு மீண்டும் படச்சுருளில் பதிகிறார்கள். இதற்கென தனியே சிறப்பு நெகடிவ் (RDI) இருக்கிறது. இப்படி புதிதாக உருவாக்கப்பட்ட நெகடிவ்தான் திரைப்படம் பிரிண்ட் போட தேவையான 'Picture Negative'-வாக பயன்படுத்தப்படுகிறது. பின்பு இதனோடு 'Sound Negative' இணைத்து பிரிண்ட் போடுகிறார்கள்.
இந்த முறையில் 'நெகடிவ் கட்டிங்' (Negative Cutting) செய்யப்படுவதில்லை.
சொல்லப்போனால் நம்முடைய 'Original Negative' அப்படியே இருக்கிறது. 'D.I' கணினியில் 'ஸ்கேன்' செய்யப்பட்ட பிறகு, அது அப்படியே பத்திரமாக வைக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட நெகடிவ் தான் பிரிண்ட் போட பயன்படுத்துகிறோம்.
இப்போதெல்லாம் தியேட்டரில் 'Digital Projection' வந்துவிட்டது. அதற்கு நெகடிவோ பிரிண்டோ தேவையில்லை. அப்படியே 'D.I' கணினியிலிருந்து 'Digital files'-ஆக அதாவது வீடியோவாக 'Digital Projection' இருக்கும் திரையரங்குகளுக்குக் கொடுத்துவிட முடிகிறது.
படத்தொகுப்பு செய்ய பயன்படுத்தப்படும் ஆதார தொழில்நுட்ப முறைகளைப்பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருள்கள் 'லேபில்' 'டெவலப்' செய்யப்பட்ட பிறகு, எப்படி திரைப்படமாக படத்தொகுப்பு செய்யப்படுகிறது என்பதைப்பற்றிய சிறிய விளக்கமே இந்தக் கட்டுரை.
1. ரஷ் & நெகடிவ் கட்டிங் முறை:
இந்த முறையில், ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருளானது 'லேபில்' டெவலப் செய்யப்பட்ட பிறகு, அதிலிருக்கும் தவறான ஷாட்டுகளை (Not Good shots-NG shots) நீக்கிவிட்டு பிரிண்ட் போடப்படும். இதை 'ரஷ்' (Rush) என்கிறார்கள். அதாவது படச்சுருளில் என்ன பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதை 'சரிபார்க்கும் பிரதி' எனலாம். இந்த 'ரஷ் பிரிண்டைக்' கொண்டு எடிட் செய்கிறார்கள். தனித்தனியாக இருக்கும் ஷாட்டுகளை தேவைக்கேற்ப ஒன்றிணைத்து ஒரு முழுமையான படத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு 'மூவியாலா' மற்றும் 'ஸ்டின்பெக்'( Moviola, Steenbeck) என்ற கருவிகள் பயன்பட்டது. பின்பு இதை முன்மாதிரியாக கொண்டு படத்தின் ஆதார 'நெகட்டிவ்' (Original Negative)-வைக் கத்தரித்து ஒன்றிணைத்து, ஒரு திரைப்படத்தைப் ப்ரிண்ட் போடத் தேவையான 'பிச்சர் நெகட்டிவை'(Picture Negative) உருவாக்குகிறார்கள். பிறகு இதனோடு 'சவுண்டு நெகட்டிவ்' (Sound Negative)-வையும் சேர்த்து பிரிண்ட் போட்டு தியேட்டர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை 'லீனியர்' (linear editing) முறை என்கிறார்கள். இந்த முறை 1990க்கு முன்பு பயன்படுத்தப்பட்டது.
2. டெலிசினி & நெகடிவ் கட்டிங் முறை:
1987-இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1993-இல் பரவலாக பொதுப்பயன்பாட்டிற்கு 'ஆவிட்'(Avid) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. கணினியில் இயங்கும் இந்த கருவியைக்கொண்டு எடிட்டிங் செய்யமுடிந்தது, நாம் பதிவுசெய்த படச்சுருளை 'வீடியோவாக' மாற்றி கணினியில் ஏற்றி எடிட் செய்யும் முறை இது. இந்த முறையை 'நான்-லீனியர்' (Non-linear editing) எடிட்டிங் என்கிறார்கள்.
இந்த முறையில், நாம் பதிவுசெய்த படச்சுருளை 'லேபில்' டெவலப் செய்தபிறகு, ரஷ் பிரிண்டு போடுவதில்லை. அதற்குப் பதிலாக அந்த நெகட்டிவை 'டெலிசினி' என்ற கருவி/தொழில்நுட்பம் கொண்டு வீடியோவாக மாற்றுகிறார்கள். அதாவது நெகடிவாக இருக்கும் படத்தை நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் வீடியோ பிம்பங்களாக மாற்றுகிறார்கள். இந்த வீடியோ பிம்பங்கள் கணினியில் ஏற்றப்பட்டு 'ஆவிட்' எனும் மென்பொருளைப் பயன்படுத்தி எடிட் செய்யப்படுகிறது. (இப்போது 'FCP' மற்றும் பல மென்பொருள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன)

குறிப்பு: இந்த 'ஆவிட்' முறையில் உலகளவில் முதலில் எடிட் செய்யப்பட்ட படம் 'Let's Kill All the Lawyers'(1992). தமிழில், முதல் படம் 'மகாநதி'(1993)
3.டெலிசினி & D.I முறை:

இந்த 'D.I' முறையில், 'EDL' லிஸ்ட் எடுத்தபிறகு, அந்த லிஸ்டை அப்படியே மற்றொரு கணினியில் ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கணினி அதோடு இணைக்கப்பட்ட 'ஸ்கேனர்' (Scanner) கருவியின் துணைக்கொண்டு அந்த லிஸ்டில் குறிக்கப்பட்டிருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட ஷாட்டுகளை மட்டும் 'ஆதார நெகடிவிலிருந்து' (Original Negative) அப்படியே முழுமையாக 'ஸ்கேன்' (Scan) செய்து எடுத்துவிடுகிறது. இப்படி ஸ்கேன் செய்த பிம்பங்கள், டெலிசினி செய்யும்போது கிடைக்கும் வீடியோவைப்போல் குறைந்த தரத்தில் (Low Resolution 576i50) இல்லாமல் அதிக தரத்தில்(High Resolution-2K/4K) இருக்கும். இந்தப் பிம்பங்களை எடிட் செய்த வரிசைபடி கணினியில் அடுக்கி, பின்பு கணினியிலேயே 'color correction' செய்கிறார்கள். இப்படி 'color correction' செய்யப்பட்ட பிம்பங்களை மற்றொரு கருவியான 'நெகடிவ் ரெக்கார்டர்' (Negative Recorder)-ஐக் கொண்டு மீண்டும் படச்சுருளில் பதிகிறார்கள். இதற்கென தனியே சிறப்பு நெகடிவ் (RDI) இருக்கிறது. இப்படி புதிதாக உருவாக்கப்பட்ட நெகடிவ்தான் திரைப்படம் பிரிண்ட் போட தேவையான 'Picture Negative'-வாக பயன்படுத்தப்படுகிறது. பின்பு இதனோடு 'Sound Negative' இணைத்து பிரிண்ட் போடுகிறார்கள்.
இந்த முறையில் 'நெகடிவ் கட்டிங்' (Negative Cutting) செய்யப்படுவதில்லை.
சொல்லப்போனால் நம்முடைய 'Original Negative' அப்படியே இருக்கிறது. 'D.I' கணினியில் 'ஸ்கேன்' செய்யப்பட்ட பிறகு, அது அப்படியே பத்திரமாக வைக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட நெகடிவ் தான் பிரிண்ட் போட பயன்படுத்துகிறோம்.
இப்போதெல்லாம் தியேட்டரில் 'Digital Projection' வந்துவிட்டது. அதற்கு நெகடிவோ பிரிண்டோ தேவையில்லை. அப்படியே 'D.I' கணினியிலிருந்து 'Digital files'-ஆக அதாவது வீடியோவாக 'Digital Projection' இருக்கும் திரையரங்குகளுக்குக் கொடுத்துவிட முடிகிறது.
Comments
இது போல் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லையா என்று யோசித்திருக்கிறேன் முன்பெல்லாம். நீங்கள் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள்!
Very Nice and useful details. All the very best and thanks a lot
Regards
Vijay
Salalah- Oman
+968 95609132