முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை (From Editing to Print)- ஆதார தொழில்நுட்பங்கள்

திரைப்படத்தை உருவாக்க உதவும் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று படத்தொகுப்பு (எடிட்டிங்). படத்தொகுப்பின் நுணுக்கங்கள், விதிகள் என பல உண்டு என்றாலும் நான் இங்கே விவரிக்கப்போவது படத்தொகுப்பு எப்படிச் செய்யவேண்டும் என்கிற பாடத்தை அல்ல. 


படத்தொகுப்பு செய்ய பயன்படுத்தப்படும் ஆதார தொழில்நுட்ப முறைகளைப்பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருள்கள் 'லேபில்' 'டெவலப்' செய்யப்பட்ட பிறகு, எப்படி திரைப்படமாக படத்தொகுப்பு செய்யப்படுகிறது என்பதைப்பற்றிய சிறிய விளக்கமே இந்தக் கட்டுரை.



1. ரஷ் & நெகடிவ் கட்டிங் முறை:

இந்த முறையில், ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருளானது 'லேபில்' டெவலப் செய்யப்பட்ட பிறகு, அதிலிருக்கும் தவறான ஷாட்டுகளை (Not Good shots-NG shots) நீக்கிவிட்டு பிரிண்ட் போடப்படும். இதை 'ரஷ்' (Rush) என்கிறார்கள். அதாவது படச்சுருளில் என்ன பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதை 'சரிபார்க்கும் பிரதி' எனலாம். இந்த 'ரஷ் பிரிண்டைக்' கொண்டு எடிட் செய்கிறார்கள். தனித்தனியாக இருக்கும் ஷாட்டுகளை தேவைக்கேற்ப ஒன்றிணைத்து ஒரு முழுமையான படத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு 'மூவியாலா' மற்றும் 'ஸ்டின்பெக்'( Moviola, Steenbeck) என்ற கருவிகள் பயன்பட்டது.  பின்பு இதை முன்மாதிரியாக கொண்டு படத்தின் ஆதார 'நெகட்டிவ்' (Original Negative)-வைக் கத்தரித்து ஒன்றிணைத்து, ஒரு திரைப்படத்தைப் ப்ரிண்ட் போடத் தேவையான 'பிச்சர் நெகட்டிவை'(Picture Negative) உருவாக்குகிறார்கள். பிறகு இதனோடு 'சவுண்டு நெகட்டிவ்' (Sound Negative)-வையும் சேர்த்து பிரிண்ட் போட்டு தியேட்டர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை 'லீனியர்' (linear editing) முறை என்கிறார்கள். இந்த முறை 1990க்கு முன்பு பயன்படுத்தப்பட்டது. 


2. டெலிசினி & நெகடிவ் கட்டிங் முறை: 

1987-இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1993-இல் பரவலாக பொதுப்பயன்பாட்டிற்கு 'ஆவிட்'(Avid) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. கணினியில் இயங்கும் இந்த கருவியைக்கொண்டு எடிட்டிங் செய்யமுடிந்தது, நாம் பதிவுசெய்த படச்சுருளை 'வீடியோவாக' மாற்றி கணினியில் ஏற்றி எடிட் செய்யும் முறை இது. இந்த முறையை 'நான்-லீனியர்' (Non-linear editing) எடிட்டிங் என்கிறார்கள். 


இந்த முறையில், நாம் பதிவுசெய்த படச்சுருளை 'லேபில்' டெவலப் செய்தபிறகு, ரஷ் பிரிண்டு போடுவதில்லை. அதற்குப் பதிலாக அந்த நெகட்டிவை 'டெலிசினி' என்ற கருவி/தொழில்நுட்பம் கொண்டு வீடியோவாக மாற்றுகிறார்கள். அதாவது நெகடிவாக இருக்கும் படத்தை நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் வீடியோ பிம்பங்களாக மாற்றுகிறார்கள். இந்த வீடியோ பிம்பங்கள் கணினியில் ஏற்றப்பட்டு 'ஆவிட்' எனும் மென்பொருளைப் பயன்படுத்தி எடிட் செய்யப்படுகிறது. (இப்போது 'FCP' மற்றும் பல மென்பொருள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன)


இந்த முறையில் எடிட் செய்ய 'டெலிசினி' செய்யும் போது, நெகட்டிவில் இருக்கும் ஒவ்வொரு பிம்பத்திற்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டிருக்கும், இந்த அடையாள எண்களும் வீடியோவாக மாற்றப்படும் பிம்பத்தோடு கணினியில் ஏற்றப்படும். பின்பு படத்தொகுப்பு முடிந்த பிறகு, இந்த அடையாள எண்களைக்கொண்டு 'EDL' (edit decision list) உருவாக்கப்படும். இந்த 'EDL' லிஸ்ட் என்பது மொத்த நெகட்டிவிலிருந்து எந்த எந்த பகுதி பிம்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற தகவலைக்கொண்டிருக்கும், இந்த தகவலைக்கொண்டு நெகடிவில் இருந்து பயன்படுத்தப்பட்ட பகுதிகளை வெட்டி எடுத்து ஒன்றிணைப்பார்கள். இந்த முறைக்கு 'நெகடிவ் கட்டிங்' என்று பெயர். இப்படி எடுத்து ஒன்றிணைக்கப்பட்ட நெகடிவைக்கொண்டு திரைப்படப் பிரதி எடுக்க தேவையான 'பிச்சர் நெகட்டிவை' (Picture Negative) உருவாக்குகிறார்கள். பின்பு இதனோடு 'சவுண்டு நெகட்டிவ்' (Sound Negative)-வையும் சேர்த்து பிரிண்ட் போட்டு தியேட்டர்களுக்கு அனுப்பும் பழைய முறைதான்.


குறிப்பு: இந்த 'ஆவிட்' முறையில் உலகளவில் முதலில் எடிட் செய்யப்பட்ட படம் 'Let's Kill All the Lawyers'(1992). தமிழில், முதல் படம் 'மகாநதி'(1993)


3.டெலிசினி & D.I முறை:

இந்த முறையில் நாம் மேலே பார்த்த அதே முறையில்தான் எடிட் செய்யப்படுகிறது. அதாவது டெவலப் செய்யப்பட்ட படச்சுருள் - டெலிசினி - ஆவிட் அல்லது FCP மென்பொருள்- 'EDL' லிஸ்ட் என்பது வரை அதே முறைதான். பின்பு 'நெகடிவ் கட்டிங்'(Negative Cutting) தான் நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக 'D.I' என்கிற புதிய முறை பயன்படுத்தப்படுகிறது. (இந்த D.I -ஐப் பற்றி தனியாக கட்டுரை உள்ளது)


இந்த 'D.I' முறையில், 'EDL' லிஸ்ட் எடுத்தபிறகு, அந்த லிஸ்டை அப்படியே மற்றொரு கணினியில் ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கணினி அதோடு இணைக்கப்பட்ட 'ஸ்கேனர்' (Scanner) கருவியின் துணைக்கொண்டு அந்த லிஸ்டில் குறிக்கப்பட்டிருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட ஷாட்டுகளை மட்டும் 'ஆதார நெகடிவிலிருந்து' (Original Negative) அப்படியே முழுமையாக 'ஸ்கேன்' (Scan) செய்து எடுத்துவிடுகிறது. இப்படி ஸ்கேன் செய்த பிம்பங்கள், டெலிசினி செய்யும்போது கிடைக்கும் வீடியோவைப்போல் குறைந்த தரத்தில் (Low Resolution   576i50) இல்லாமல் அதிக தரத்தில்(High Resolution-2K/4K) இருக்கும். இந்தப் பிம்பங்களை எடிட் செய்த வரிசைபடி கணினியில் அடுக்கி, பின்பு கணினியிலேயே 'color correction' செய்கிறார்கள். இப்படி 'color correction' செய்யப்பட்ட பிம்பங்களை மற்றொரு கருவியான 'நெகடிவ் ரெக்கார்டர்' (Negative Recorder)-ஐக் கொண்டு மீண்டும் படச்சுருளில் பதிகிறார்கள். இதற்கென தனியே சிறப்பு நெகடிவ் (RDI) இருக்கிறது. இப்படி புதிதாக உருவாக்கப்பட்ட நெகடிவ்தான் திரைப்படம் பிரிண்ட் போட தேவையான 'Picture Negative'-வாக பயன்படுத்தப்படுகிறது. பின்பு இதனோடு 'Sound Negative' இணைத்து பிரிண்ட் போடுகிறார்கள்.


இந்த முறையில் 'நெகடிவ் கட்டிங்' (Negative Cutting) செய்யப்படுவதில்லை. 
சொல்லப்போனால் நம்முடைய 'Original Negative' அப்படியே இருக்கிறது. 'D.I' கணினியில் 'ஸ்கேன்' செய்யப்பட்ட பிறகு, அது அப்படியே பத்திரமாக வைக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட நெகடிவ் தான் பிரிண்ட் போட பயன்படுத்துகிறோம். 


இப்போதெல்லாம் தியேட்டரில் 'Digital Projection' வந்துவிட்டது. அதற்கு நெகடிவோ பிரிண்டோ தேவையில்லை. அப்படியே 'D.I' கணினியிலிருந்து 'Digital files'-ஆக அதாவது வீடியோவாக 'Digital Projection' இருக்கும் திரையரங்குகளுக்குக் கொடுத்துவிட முடிகிறது. 



கருத்துகள்

  1. சூப்பர் விஜய்..! நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்..ஆனா இப்போதான் கமெண்ட் பண்றேன்..
    இது போல் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லையா என்று யோசித்திருக்கிறேன் முன்பெல்லாம். நீங்கள் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. Dear Vijay.,

    Very Nice and useful details. All the very best and thanks a lot

    Regards
    Vijay
    Salalah- Oman
    +968 95609132

    பதிலளிநீக்கு
  3. இதே போல் வீடியோ எடிட்டிங் , அனிமேஷன் மற்றும் சினமாவில் பயன்படுத்தும் சாப்ட்வேர் நுட்பம் பற்றியும் தொடர் பதிவு போடவும் . மிகவும் பயன் உள்ளதாக உள்ளது .

    பதிலளிநீக்கு
  4. இதே போல் வீடியோ எடிட்டிங் , அனிமேஷன் மற்றும் சினமாவில் பயன்படுத்தும் சாப்ட்வேர் நுட்பம் பற்றியும் தொடர் பதிவு போடவும் . மிகவும் பயன் உள்ளதாக உள்ளது .

    பதிலளிநீக்கு
  5. தோழர், ப்ரிண்டிலிருந்து திரையிடல் வரை என்று ஒரு பதிவு போடவும். ஏனெனில் நான் இருதினங்களுக்கு முன், ௭ஆம் அறிவு திரைப்படம் பார்த்தேன். பல காட்சிகளில், தேவையற்ற blur (out of focus) வந்தது. நிச்சயம் ரவி கே. சந்திரன் அவர்கள் இப்படி படம்பிடித்திருக்க மாட்டார் என்று நம்புகின்றேன். என்னவோ ப்ரொஜெக்டரில் பிரச்சினை. ஆகவே, முதல் பிரிண்ட் ரெடியானதிலிருந்து திரையரங்கில் திரையிடப்படும் வரை என்ன நடக்கின்றது என்பதைப்பற்றியும் பலவிதமான ப்ரோஜெக்டர்களைப்பற்றியும் ஒரு பதிவு எழுதவும்.

    பதிலளிநீக்கு
  6. சக்திவேல் தோழர்..கண்டிப்பாக பதிவிடுகிறேன். சொல்லுவதற்கு சில செய்திகள் இருக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  7. "Arms" great detail boss :) thanks for sharing

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். அப்படி பல புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்குக் கொண்டு சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். உலகப்புகழ் பெற்றப் பல படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன. மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்: Kevin Carter’s most famous photo Source: The Unsolicited Opinion 1994-ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' (Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம் வருடம் சூடானில் எடுக்கப்பட்டது. சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக் கணக்கானவர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருந்தது. ஐ.நா சபையின் மூலம் உணவு பொருட்கள் நாடு முழுவதும் பரவலாக வழங்கப்பட்டன. அப்படியான ஒரு உணவு முகாமை நோக்கித் தவழ்ந்து சென்ற ஒரு பெண் குழந்தையை