முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்_Part-2

இக்கட்டுரை,  'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில் - என்ற கட்டுரையின் தொடர்ச்சி. அதைப் படித்துவிட்டு தொடரவும்.

ஒரு டிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக அதன்..

அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount)
ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor)
இ. ரெக்கார்டிங் (Recording)
ஈ. வியு பைண்டர் (View Finder)

போன்றவைகள் கருதப்படுகின்றன என்பதையும், அதில் ‘லென்ஸ் மௌண்டு’ பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்டோம் என்பதை நீங்கள் படித்துவிட்டுத்தான் இங்கே வந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையைத் தொடர்கிறேன்.. 

ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor):

டிஜிட்டல் கேமராக்களின் மிக ஆதாரமான பாகம், அதன் சென்சார் தான். சென்சாரின் தரத்தைப் பொருத்தே டிஜிட்டல் கேமராக்களின் தரம் மதிப்பிடப்படுகிறது. 'Single CCD', '3 CCD' கேமராக்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ‘CCD’ மூலம் ஒளியை உள்வாங்கி பதிவுசெய்வது என்பது 'Single CCD' கேமரா எனவும், மூன்று ஆதார வண்ணங்களுக்கு ஏற்ப, மூன்று தனித்தனியான 'CCD'-க்கள் மூலமாக ஒளியை பிரித்து உள்வாங்கி, பதிவு செய்வது '3CCD' கேமரா என, வகைப்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். பெரும்பாலான ‘தொழில்முறை’ (professional) கேமராக்கள் '3CCD' வகையைச் சார்ந்தவைகள்தான்.


'CCD' என்பது ஒரு வகையான சென்சார் என்றால், ‘CMOS’ என்பது மற்றொரு வகை சென்சார். இவற்றுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தையும் தொழில்நுட்ப செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள, தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். விரைவில் அதைப்பற்றி எழுதுகிறேன். இங்கே நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது, ‘CMOS’ என்று ஒரு சென்சாரும் பயன்பாட்டில் இருக்கிறது என்பதும், அந்த ‘CMOS’ சென்சார்தான் ‘ALEXA’ கேமராவில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதையும்தான்.

‘ALEXA’ கேமராவில் ‘35mm format ALEV III CMOS’ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. முழு சென்சாரின் அளவு (Sensor Size) 3392 x 2200 Pixels என்றாலும், '16:9'Aspect Ratio-வில் நமக்கு பயன்படுவது (Image Out) 2880 x 1620 Pixels தான்.

(The ALEV III sensor has a horizontal pixel count of 3.5K resulting in true 2K
resolution. It covers the full Super-35 format and it provides a latitude of 14 stops and a base sensitivity of 800 ASA)

இந்த சென்சார் 800 ASA திறன் கொண்டது. ‘14-stops latitude’ கொண்டது. இந்த ‘latitude’ மிக முக்கியமானது. ஃபிலிமைப் போல அதிக ‘latitude’ திறன் என்பது ஒரு டிஜிட்டல் கேமராவின் மதிப்பைக் கூட்டும். பொதுவாக டிஜிட்டல் கேமராக்கள் ‘latitude’ திறனில் தான் அடிவாங்கும். ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்கும் இருக்கும் வித்தியாசங்களில், இந்த ‘latitude’-தான் மிக முக்கியமானது. சில டிஜிட்டல் கேமராக்கள் ‘3-stops’ அல்லது ‘5-stops latitude’ திறன் தான் கொண்டிருக்கும்.

800 ASA என்பதும் ‘14stops latitude’ என்பதும் ‘ALEXA’ கேமராவை திறன் வாய்ந்ததாகக் கருத செய்கிறது. 800ASA-வினால் குறைந்த வெளிச்சத்திலும் இக்கேமராவைப் பயன்படுத்த முடிகிறது. மேலும் உட்புற (Indoor) படப்பிடிப்பு மற்றும் இரவு நேரக்காட்சிகளில் குறைந்த அளவு ஒளியமைப்பே போதுமானதாக இருக்கிறது. குறைந்த அளவு ஒளியமைப்பு என்று நான் குறிப்பிடுவது ‘ஒளியின் அளவைத்தானே’ (quantity of Light) தவிர, ஒளியமைப்பின் முறையை (Way of Light - Lighting Pattern) அல்ல.



குறிப்பாக உட்புற படபிடிப்பின் போது பெரிய விளக்குகளுக்கு (4K PAR) பதிலாக, சிறிய விளக்கை (4Bank/10 Bank) பயன்படுத்த முடிகிறது. இப்படிச் சிறிய விளக்குகளை பயன்படுத்துவது செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் நேரத்தையும் மிச்சப்படுத்தும். ‘ஒண்டிப்புலி’ படத்தில் மிகக் குறைந்த ஒளியைப் பயன்படுத்தி சில காட்சிகள் எடுத்தேன். ஒரு காட்சியில் சிறு விளக்குகளையும் கொஞ்சம் ‘fill light’-யும் பயன்படுத்தி பதிவு செய்திருக்கிறேன்.

இரவு..

சிறுவிளக்குகள் + Photoflood Light

தீ.. மட்டுமே

‘ALEXA’ கேமராவில் ‘14stops latitude’ திறன் இருப்பதனால் வெளிப்புறப் படப்பிடிப்பும் சுலபமானதாக இருக்கிறது. ஃபிலிமைப் பயன்படுத்துவதைப் போலவே ‘ALEXA’ கேமராவையும் பயன்படுத்த முடிகிறது. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு காட்சியை ஃபிலிம் கேமரா மற்றும் ‘ALEXA’ கேமராவையும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் படம்பிடித்து பார்த்தால், இரண்டு கேமராக்களும் பதிவுசெய்த பிம்பங்களில் வித்தியாசம் இருக்கலாம் (ஒருவேளை) என்றுதான் நினைக்கிறேன். அதுவும் ‘latitude’ சார்ந்து பெரிதாக வித்தியாசம் இருக்காது, அப்படியே இருந்தாலும் மிக மிகக் குறைவாகவே இருக்கும். அது ‘half stop’ அல்லது ‘one stop’-ஆகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தனியாக ‘Camera Test’ எடுத்துதான் அதைப் பார்க்கவேண்டும்.


இங்கே நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.. ‘ALEXA’ கேமராவை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஒரு ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்துவது போலவே, வெளிப்புறப் படப்பிடிப்புகளில்  பயன்படுத்தலாம்/பயன்படுத்த முடிகிறது என்பதைத்தான். மேலும் ‘SHADOWS’-உம்‘HIGHLIGHTS’-உம் ஃபிலிமைப் போலவே பதிவுசெய்கிறது. இதனால் பிம்பத்தின் ‘Contrast Ratio’ பாதிக்கப்படாமல் இருக்கிறது.

'35mm size' சென்சார் என்பதனால் ‘SHALLOW DEPTH OF FIELD’ ஆனது 35mm ஃபிலிமில் கிடைப்பதைப்போன்றே கிடைக்கிறது.

மொத்தத்தில் Alexa-வின் ‘இமேஜ் சென்சார்’, நமக்குப் போதுமானதாக இருக்கிறது என்பது உண்மை. ஃபிலிமுக்கு இணையான (ஏறக்குறைய) தரத்தில், பிம்பத்தை பதிவுசெய்கிறது என்பது என் அனுபவம்.



மற்றவை அடுத்தக்கட்டுரையில் தொடரும்...


கருத்துகள்

  1. அருமையான பகிர்வு..நிறைய தெரிந்துக்கொண்டேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தொழில்முறை ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டு இவ்வளவு தகவல்களை வெளிப்படையாக சொல்வது அரிது என்றே நினைக்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நான் பல புகைப்பட கலைஞர்களுடனும் சில திரைப்பட ஒளிப்பதிவாளர்களுடனும் இணையத்தில் பழகிவருகிறேன். அவர்களில் வெகு சிலரே தொழில்நுட்ப விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதற்கு காரணம், தங்களின் மேலுள்ள நம்பிக்கையே. பலர், தனக்கு தெரிந்தது அடுத்தவருக்கும் தெரிந்தால் தம் பொழப்பு நாறிப்போகும் என்று நினைப்பது, அவர்களுக்கே அவர்களின் திறமையின் மேல் நம்பிக்கை இல்லாததையே காட்டும். இதில் நீங்கள், உங்களின் மேல் நம்பிக்கையுள்ளவராக இருக்கின்றீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன