முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Dark Knight Rises: நம்பிக்கைக்குரிய நாயகன்.!



கிருஸ்டோபர் நோலன் எப்போதும் நம்மை ஏமாற்றியதில்லை. இம்முறையும் அப்படியே.  ‘The Dark Knight Rises’ மூலம், தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபிக்கிறார். சத்யத்தில் காலை 9.30 மணிக்காட்சியில் படம் பார்த்தேன். இப்போது இந்தக் கணம் வரை படத்திலிருந்து வெளிவரமுடியவில்லை.

நோலன், பல செய்திகளை இப்படத்தில் வைத்திருக்கிறார். முதல் பாகமான ‘Batman Begins'-இல் துவங்கிய இப்பயணம், இதில் சரியான ஒரு முடிவை அடைகிறது. முதல் பாகத்தில் அறிமுகமான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவங்களும், குறிக்கோளும், வழிமுறையும்,  லட்சியமும் இப்படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

தீயவர்களின் கூடாரமாகியிருந்த தன் நகரைச் சுத்தப்படுத்த பல நிலைகளை பேட்மேன் கடந்து வரவேண்டியதிருந்தது. முந்தைய இரண்டு பாகங்கள் அதைத்தான் விவரித்தன. தான் உருவாக்கிய அமைதி, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதனால், தானே கொலைகாரன் என்ற பழியைச் சுமந்து தப்பி ஓடும் பேட்மேனை, இரண்டாம் பாகமான ‘The Dark Knight’-இன் இறுதியில் பார்க்க முடியும். அதன் பிறகு பேட்மேனின் தேவையற்று, தீயவர்களின் குறுக்கீடு இல்லாமல் அமைதியாக கோத்தம் நகரம் வாழ்ந்து வருகிறது. பேட்மேன் கொலைகாரனாக தப்பி ஓடி எட்டு வருடங்கள் கடந்து போன நிலையில் ‘Bane’ வடிவில் ஒரு புதிய, பெரும் ஆபத்து கோத்தம் நகருக்கு வருகிறது. அது தலைமறைவாகிப்போன பேட்மேனை வெளிக் கொண்டுவருகிறது.  சீரழிந்து கிடந்த ‘கோத்தம்’ நகரை மீட்டெடுக்க பேட்மேன் செய்த அத்தனை செயல்களும் தியாகங்களும் பயனற்றுப்போவதே, இப்படத்தில் பேட்மேன் சந்திக்கும் சவால்.

தன் மக்களுக்காக போராட விரும்பும் எந்த  நாயகனும் தலைவனும், தன் கடமை முடிந்துவிட்டதாக எந்நிலையிலும் விலகி விட முடியாது என்பதும்.. செய்த, செய்கிற எந்த தியாகமும் முடிவல்ல என்பதும் இப்படம் சொல்லும் செய்தி. உலகின் அத்தனை தலைவர்களுக்கும் இது பொருந்தும். அத்தனை சிறந்த புரட்சியாளர்களின் வாழ்விலும் இது நிகழ்ந்திருக்கிறது. அத்தகைய உயர்ந்த நிலையை காமிக்ஸ் கதாப்பாத்திரமான ‘Super Hero’ ஒருவனோடு சம்பந்தப்படுத்தி, அக்கதாப்பாத்திரத்தின் மேன்மையை உயர்த்தி விடுகிறார் நோலன். ஆழ்ந்த பல கேள்விகளும், சிந்தாந்தகளும் பதில்களும் கொண்ட இம்மூன்று பாக பேட்மேன் தொடர்.. முழுமையான, நிறைவான ஒரு முடிவை அடைந்திருக்கிறது. படத்தின் முடிவில் முந்தைய இரண்டு பாகங்களும் மனதில் ஓட.. மீக நீண்ட பெரியதோர் சூழலிலிருந்து வெளிவருவதை உணர முடிந்தது.

இப்படத்தில் இரண்டு சங்கடங்களை நான் காண்கிறேன். ஒன்று, வில்லனான ‘Bane’ பற்றிய தகவல்கள் குறைவாக இருப்பது. அவன் யார், அவன் ஏன் இப்படி இருக்கிறான், ஏன் முகமூடி போட்டுக்கொண்டிருக்கிறான் போன்ற கேள்விகளுக்குச் சரியான போதுமான தகவல்கள் படத்தில் இல்லை. அதனால் அவனைப்பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொண்டு படத்தைப் பார்ப்பது நலம். இரண்டாவது, பேட்மேன் காமிக்ஸை படித்தவர்களுக்கு இப்படத்தில் சொல்லப்படும் பல செய்திகள் காட்சிகள் முன்பே தெரிந்திருப்பதனால் அவர்களைத் திருப்தி படுத்தவும் படம் தவறுகிறது. ஆனாலும் சிறப்பான ஒளிப்பதிவும், அற்புதமான பின்னணியிசையும், தேர்ந்த இயக்கமும் நம்மைப் புதியதோர் சூழலுக்கு கொண்டு செல்வதை மறுக்கமுடியாது.

இப்படம், மற்ற இரண்டு படங்களின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டிய படம். முந்தைய அவ்விரு படங்களையும் பார்க்காமல் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு பல இடங்கள் புரியாமல் போகும். அதனால் நண்பர்களே மற்ற இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு இப்படத்திற்கு போகவும்.

அல்லது கருந்தேள் எழுதிருக்கும் இப்பதிவுகளைப் படித்து விட்டு, படம் பார்க்கச் செல்லவும்..









கருத்துகள்

  1. இந்த படம் பார்க்கனும்னு ஏற்கனவே தோனுச்சு.. ஆனா உங்க பதிவ படிச்சதும் இப்பவே பாக்கனும்னு தோனுது...


    நன்றி நட்பே...

    பதிலளிநீக்கு
  2. கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டின் அதி புத்திசாலியான இயக்குனர். பிரபலமான ஸ்டீவன் ஸ்பீல்பர்க்,ஜேம்ஸ் கேமரூன், ரிட்லி ஸ்காட் போன்றவர்களை விட மிக திறமையானவர். நீங்கள் நன்றாக விமர்சனம் செய்துளீர்கள். ஒரு சில பதிவாளர்கள் நோலன் என்றால் யார் என்றே தெரியாமல் எதையோ எதிர்பார்த்து இந்த படத்துக்கு சென்று,தாங்கள் விரும்பியது இல்லாத ஆத்திரத்தில் கண்ணா பின்ன என்று செல்வராகவன் பட ரேஞ்சுக்கு விமர்சனம் செய்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்களை போன்று இயக்குனர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சிலரே இந்த படத்தை பற்றி உண்மையாக சொல்ல முடியும். கடைசியாக நோலனின் the prestige படம் பார்த்துவிட்டு அதை பற்றி சில கருத்துக்கள் வெளியிடுங்கள். Very clever film making.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சித்ரவேல், காரிகன்.

    காரிகன்//- உண்மைதான் கிறிஸ்டோபர் நோலன் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவர். தன் படங்களை எப்போதும் உளவியல் ரிதியாக அனுகுபவர். என் விருப்பத்திற்கு உரியவர். அவருடைய எல்லாப் படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படங்களைப்பார்க்கும் போது, நாம் புதியதோர் சூழலில் தள்ளப்படுவதை உணர முடியும். ’The Prestige' அத்தகைய படங்களில் ஒன்றுதான்.. :)

    பதிலளிநீக்கு
  4. உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது சார் ... நன்றி !

    பதிலளிநீக்கு
  5. முதலிரண்டு பாகங்களை பார்த்ததாலும் கருந்தேளின் பதிவுகளை படித்ததாலுமே இந்த மூன்றாம் பாகம் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. ஒளிப்பதிவாளரே வணக்கம்.

    இன்று 'சுழல்' என்றொரு திரைப்படம் பார்த்தேன். இடைவேளை வரை ஒன்றும் தோன்றவில்லை. படமும் நன்றாக இல்லை. இடைவேளைக்குப்பிறகு ரயிலில் பயணம் செய்து, கப்பலில் மரண விளையாட்டு ஆட ஆரம்பித்ததும் தான் ' இது ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தின் காப்பி' என்றும்,, அந்த ஒரிஜினல் படத்தைப்பற்றிய உங்களின் ஒரு கட்டுரையை படித்ததாகவும் நினைவு வந்தது.ஆனாலும் ஒரு சந்தேகம். அது நீங்கள் எழுதிய கட்டுரை தானா? ஆம் எனில் அது எந்தப்பக்கம் எனக்குறிப்பிட்டுச்சொல்ல முடியுமா? நான் தேடிப்பார்த்துச்சலித்து விட்டேன்.

    பேராசிரியர்
    பி.ஜி.கதிரவன், மதுரை.

    பதிலளிநீக்கு
  7. professor PGK: வணக்கம் சார்..

    நீங்கள் சொல்லுவது போன்ற காட்சிகள் கொண்ட படத்தைப்பற்றி நான் எழுதியதாக நினைவில்லை. அநேகமாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். மன்னிக்கவும். ஆனால் அது என்ன படமாக இருக்கும் என்று யோசித்து முடிந்தால் சொல்லுகிறேன்.. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால