முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

AZHAGU KUTTI CHELLAM (OFFICIAL MUSIC VIDEO)


எங்கள் ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தில் வரும் இப்பாடலைக் கேட்ட கணத்திலேயே எனக்குப் பிடித்துப்போய் விட்டது. படத்தின் உயிர்ப்பை அப்படியே கொண்டு வந்திருக்கிற பாடல் இது. பாடலின் வரிகளை பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்கள் எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாட, கேபா தன் கிடார் மீட்டலின் வழியே உயிரூட்ட, ஒரு அற்புத அனுபத்திற்குள் நம்மை ஆழ்த்தியிருக்கிறார் இளம் இசையமைப்பாளர் திரு.வேத் சங்கர் சுகவனம்.

எங்கள் குழுவில், அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய இப்பாடலை, படத்தின் முன்னோட்டமாக உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்பினோம். திரைப்படத்தில் வரும் காட்சிகளோடு இப்பாடலை தற்போது வெளியிட முடியாத நிலையில், இதற்கென்றே ஒரு காட்சி வடிவத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டது. இப்பாடலின் உயிர்நாடிகளாக, வரிகளோடு இணைந்து குரலும் கிடாரும் இருப்பதை உணரமுடியும். ஆகவே அக்கலைஞர்களை உங்கள் முன்னால் கொண்டு வந்திருக்கிறோம். கடல், மரியான் போன்ற படங்களில் ஏ.ஆர்.ரகுமான் குழுவில் கிடார் மீட்டிய கேபாவுக்கும், ’நெஞ்சுக்குள்ளே’ பாடலின் மூலம் நம்மைக் கவர்ந்த சக்தி ஸ்ரீ கோபாலனுக்கும் முன்னுரையோ அறிமுகமோ தேவையில்லை.

குழந்தைகள், கடவுளின் பிரதிகள் என்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூமிக்கு அருளப்படும் வரம். ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைகள் கொண்டு வரும் வசந்தத்தை, மகிழ்ச்சியை சொல்லில் அடக்க முடியாது. பலரின் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதே குழந்தைகள்தான். குழந்தைகளே நம்மை மீட்க வந்த மீட்பர்கள். இப்பாடலின் ஒவ்வொரு வரியும் அதைத்தான் சொல்லுகின்றன... எங்கள் திரைப்படத்தின் மைய கருத்தும் அதுதான்!

அமைதியான சூழலில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.. உங்களை அடிமை கொள்ளும் இப்பாடல்!

   

    

கருத்துகள்

  1. வாழ்த்துக்கள் சார்.... மிகச் சிறப்பாக இருக்கிறது... படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்....

    பதிலளிநீக்கு
  2. very Soothing music & voice .

    Black & white stills also too good ...

    Congrats to team AKC...

    பதிலளிநீக்கு
  3. Dear Sir,
    Arumayana Thalattu...
    Melody Camara Moving...
    Nice Lighting...
    I realise your perfomance sir..
    I realy miss sir...
    I Wish you All Success to sir..
    -thamizh sathya

    பதிலளிநீக்கு
  4. கேபா வின் கிடார் இசையோடு சக்திஸ்ரீ யின் குரல் தேனாக ஒலிக்கிறது முத்துக்குமாரின் அருமையான வரிகளை உங்கள் கேமரா நிச்சயம் கவித்துவத்துடன் பதிவு செய்திருக்கும் வாழ்த்துக்கள் விஜய்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...