• விஜய் ஆம்ஸ்ட்ராங், ஒளிப்பதிவாளர்

  • கற்றதும் பெற்றதும் . .  யாவருக்கும்!

Amazon Kindle - டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் படிக்க


அமேசானில் வாங்கும் புத்தகத்தை எப்படி படிப்பது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக இது.

அமேசான் நிறுவனம் புத்தகங்களைப் படிப்பதற்காக, Kindle என்னும் கையடக்க கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறது. இது ஏறக்குறைய ஒரு ‘Tablet’ போன்றதுதான். இது பல வகைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாங்கும் புத்தகங்களை இதில் படிக்கலாம். மற்றவர்களுக்கு இமெயிலில் பகிரவோ, பரப்பவோ முடியாது. ஆகையினால், நம் புத்தகங்கள் கள்ளச் சந்தையில் பரவி விடும் என்ற பயமில்லை. உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானப் புத்தகங்கள் இதில் கிடைக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் தினமும் இதில் புத்தகங்களை படிக்கிறார்கள். புத்தகம் படிப்பதை நவினமாக்கியிருக்கிறார்கள். படிப்பதற்கும், சேமிப்பதற்கும் இலகுவானது. 1,400 புத்தகங்களுக்கும் மேலாக இதில் சேமிக்கலாம் என்கிறார்கள். நம்முடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாடல்களை வாங்கிக்கொள்ளலாம்.


Ipad, Iphone, Samsung Tab, Lenovo Tab.. என பிற நிறுவனங்களின் டேப்லெட்டுகளை(Tablets) பயன்படுத்துவோர்கென ‘Kindle App’ தனியாக கிடைக்கிறது. Ipad, Iphone பயன்படுத்துபவர்கள் Apple App Store- இலும், ஆண்ட்ராயிடு டேப்களை பயன்படுத்துபவர்கள் கூகுளின் Play Store-இலும், Mac மற்றும் Windows-க்கும் ‘Kindle App’-ஐ இலவசமாக தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம். அமேசானில் வாங்கும் புத்தகங்கள் தானாகவே இதில் தரவிறக்கம் செய்துக்கொள்ளும்.


என்னுடைய ‘ஒளி எனும் மொழி’ புத்தகத்தை, பல வெளிநாட்டு நண்பர்கள் எங்கே வாங்குவது என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அச்சடித்த புத்தகங்களை இங்கிருந்து அனுப்பி வைப்பது என்பது புத்தக விலையைப்போல இரண்டு மூன்று மடங்கு செலவு பிடிப்பதாக இருக்கிறது. ஆகையினால், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள் படிப்பதற்கு வசதியாக டிஜிட்டல் வடிவத்தில் அப்புத்தகத்தை தருவது நல்லது என்று நினைத்தோம். அது இப்போதுதான் நடந்திருக்கிறது.

அச்சடித்த புத்தகத்தை விட இதில் படிப்பது இலகுவானது. தேவைக்கேற்ப Font Size-ஐ பெரிதுப்படுத்திக்கொள்ளலாம். தேவையான பக்கங்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். முக்கியமென்று கருதுவதை அடிக்கோடிடலாம் (Highlight). தேவையான பக்கத்தை மட்டும் ஃபிண்ட் செய்துக்கொள்ளலாம். உங்கள் கணினி, செல்ஃபோன், டேப் என எல்லா கருவிகளிலும் வசதிக்கேற்ப படிக்கலாம். வீட்டில் இருக்கும் போது கணினியில் படிப்பவர்கள், வெளியே செல்லும்போது செல்ஃபோனிலோ, டேபிலோ விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அச்சடித்த புத்தகத்தைப்போல சுமந்து திரிய வேண்டியதில்லை.

நண்பர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், ஆர்வம் கொண்டவர்களுக்கு தகவல் சொல்லுங்கள். நன்றி.


No comments

About Me

My photo

Cinematographer from Tamil Film Industry..Chennai.Tamil Nadu. India

Search This Blog

Blog Archive

Popular Content

About us

Amazon

123RF

Toggle menu