கடலோரக் கவிதைகள்: இயக்குநர் பாரதிராஜாவோடு ஓர் உரையாடல்

Image
நேற்று, BRIIC மாணவர்களுடன், பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படத்தை அவரோடு சேர்ந்து, அகண்டத்திரையில் பார்த்தோம். 
எளிமையான காதல் கதை.  காதல் கதைகளுக்கே உரிய பரவசமும், துயரமும் நிரம்பியக்கதை. 1986-இல் வெளியானத்திரைப்படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்,  நம்மைப் பாதிக்கிறது. படம் துவங்கியதிலிருந்து இறுதி வரை கட்டிப்போடுகிறது. எனில், அதன் செய்நேர்த்தியையும், கலைத்தன்மையையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் திரைப்படத்தின் மீது ஒரு இயக்குநருக்கு இருக்க வேண்டிய ஆளூமையை இத்திரைப்படம் நன்கு உணர்த்தியது. 
திரைப்பட இயக்கம் என்பது என்ன..? ஒரு கதையை, அதன் சுவாரசியம் குறையாமல், உணர்வுப்பூர்வமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பது தானே..!? 
அதை மிகச் சிறப்பாக பாரதிராஜா செய்திருக்கிறார் என்பதும், அவர் ஏன் தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பதையும் இத்திரைப்படம் பார்க்கப் புரிந்துக்கொள்ள முடியும். படம் பார்த்தவர்கள் பலருக்கும் அது புரிந்திருக்கும். பார்க்காத நண்பர்களையும், ஏற்கனவே பார்த்த நண்பர்களையும் இத்திரைப்படத்தை (மீண்டும்) பார்க்க பரிந்துரைக்கிறேன். 


படம் முடிந்த பின்.. இயக்குநர…

காமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’
காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல. மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு..
காலம் என்பது ஆறுபோல் எப்போதும் ஒரே திசை நோக்கி ஓடக்கூடியது அல்ல! காலமானது.. ஒரு தடாகத்தில் கல்லை எறிந்தால் நீரில் அடுத்தடுத்து வளையங்களாக எழும் அலைகளைப் போன்றது

இவ்வரிகளை அண்மையில் படித்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்தேன். ஆச்சரியமாக இருக்கிறது. நவீன அறிவியல் சொல்லும் அதே கருத்தைக்கொண்டு அண்மையில் ஒரு திரைப்படமும் பார்த்தேன். இரண்டுமே சிறுவர்களுக்கானது என்று நம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்த கலை படைப்புகள்

தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்என்னும் காமிக்ஸ் தான் அந்த அற்புத புத்தகம். Vikings- களை அடிப்படையாக கொண்ட இக்காமிக்ஸ், மற்ற காமிக்ஸிலிருந்து தனித்துவமானது. கதை சொல்லும் போக்கு, அதிலிருக்கும் ஃபேண்டஸி, அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என இத்தொடர் ஒரு கவித்துவமானதும் கூட. இதுவரை காமிக்ஸ் படிக்காதவர்களுக்கு கூட இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்அடுத்து.. அண்மையில் வெளியாகிய ஸ்பைடர்மேன் திரைப்படமான ‘SPIDER MAN INTO THE SPIDER VERSE’ திரைப்படம்தான் நான் குறிப்பிட்ட காலம் தொடர்பான திரைப்படம். பல்வேறு காலத்திலிருந்து வந்து சேரும் பல ஸ்பைடர்மேன்களைப் பற்றியப்படம் இது. பொழுதுபோக்குதான் ஆதாரம் எனினும், அறிவியல், ஆன்மீகம், இருப்பு, வாழ்வு குறித்தான பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தவல்ல திரைப்படம் இது. பலரும் இது குழந்தைகளுக்கானப்படம் என்று தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் அது அப்படி அல்ல. திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்ட அத்துணை நண்பர்களுக்கும் இத்திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்
மேலும்… Netflix இல் ‘VIKINGS’ என்றொரு நீண்டதொரு தொடர் இருக்கிறது. வரலாறும் புனைவும் கலந்த அத்தொடர் மற்றொரு அற்புதம். History Channel இல் தயாரிப்பான இது. போர்க்கலம், வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், காதல், நம்பிக்கை, துரோகம், இரத்தம் என நிரம்பிக்கிடக்கும் இத்தொடர், அதையும் தாண்டி பல அற்புத கணங்களை கொண்டிருக்கிறது. வரலாற்றின் ஊடாக ஒரு புதிய பார்வையை இத்தொடர் உண்டாக்கும். தவற விடாதீர்கள் நண்பர்களே..! Comments

Popular posts from this blog

கடக்கமுடியாத வலிகளுண்டு

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்