முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! | 03


 

கடவுள் குறித்தான பார்வை ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம். இங்கே நான் சொல்லிக்கொண்டிருப்பது எனக்கான புரிதல். அவ்வளவே. இதுவே சாஸ்வதம், இதுவே உண்மை என்றாகாது.

அது சரி, கடவுள், கடவுள் சம்பந்தப்பட்டது என்றாலே, நிலையான உண்மை என்று ஒன்று இருக்க முடியுமா என்ன? எல்லாமே நம்பிக்கைதானே...!? சந்தேகத்திற்கு உட்பட்டதுதானே..?


சரி, அது இருக்கட்டும் ஒருபக்கம்.


திரைப்படங்கள் வாயிலாககடவுள் இருப்புகுறித்தான என்னுடைய பார்வையை முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டேன் அல்லவா. எனில் என் வாழ்வில் கடவுள் இருப்பிற்கான சந்தர்ப்பங்களை நான் சந்திக்கவே இல்லையா


அதற்கு என் பதில்ஆம்இல்லை இரண்டும்தான். புரியவில்லையா…!? விளக்குகிறேன்.


என்னளவில், தனிப்பட்ட எந்த முயற்சிக்கும், கடவுளை துணைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை. ஒரு செயலை முறையாக, சரியாக செய்தால் அது வெற்றியடையும் என்று நம்புகிறவன் நான். தகுதியேஎதையும் வெற்றடைவதற்கான வழி. தகுதியை வளர்த்துக்கொள்வது நம்முடைய முயற்சியும் கடமையும் ஆகும். அதற்கான சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமல்லவா? வாய்ப்பில்லாதவர்கள் என்னதான் செய்வதாம்? என்ற கேள்விகள் உங்களுக்கு தோன்றலாம். என்னைப்பொறுத்த வரை, சந்தர்ப்பத்தை அமைத்துக்கொள்வது, நம்முடைய கடமையே ஆகும். எந்த செயலையும் செய்யாமல், தள்ளிப்போடுவதற்கோ, தவீர்ப்பதற்கோ காரணங்கள் சொல்லுவது, அல்லது காரணங்கள் இருப்பதாக நம்புவது, நம்முடைய சோம்பேரித்தனம் என்றுதான் நான் நினைக்கிறேன்


உலகெங்கிலும், பல்வேறு துறைகளில் வெற்றிப்பெற்ற சாதனையாளர்களின்வாழ்க்கைகுறிப்புகளிலிருந்து நான் இதனைத்தான் காண்கிறேன். தனிமனித உழைப்பு. அசராத, கடின உழைப்பே அவர்களை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச்சென்றிருக்கிறது. தகுதியை வளர்த்துக்கொள்வதேவெற்றிக்கான குறுக்கு வழி


இதில் கடவுள் துணை என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம்கடவுளின் துணை இருக்கலாம். ஆனால் அது கட்டாயம் அல்ல


அப்போவெற்றி பெற்றவர்கள் பலரும்… “எல்லாம் அவன் செயல்என்கிறார்களேஅது பொய்யா?


இல்லை. அது பொய் அல்ல. அது, அவர்களுடைய அடக்கத்தைக் குறிக்கிறது. அவ்வளவே


உதாரணத்திற்குஇளையராசா, .ஆர்.ரகுமான், ரஜினிகாந்த் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் சாதனைகளுக்கு காரணம், அவர்களா? அல்லது கடவுளா


கடவுள் என்றீர்கள் என்றால், இதைவிட அவர்களை, அவமானப்படுத்த வேறு வார்த்தைகள் வேண்டாம். அவர்களின் சாதனைக்குப்பின்னால் இருக்கும் உழைப்பை நாம் மதிக்க வேண்டும். அதை கவனித்து உள்வாங்க வேண்டும். எத்தனை விதமான பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டிருப்பார்கள்..!? தன் தகுதியை வளர்த்துக்கொள்ள எத்தனை நாட்களை அவர்கள் செலவிட்டிருப்பார்கள்..!? அவர்களுடைய தகுதியே, அவர்களை உயர்த்திட்டது என்று நம்புகிறேன். அவர்கள் இன்று நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு அவர்களின் உழைப்பே காரணம் என்று, நான் முழுமையாக நம்புகிறேன். தகுதியே வழி…. வேண்டுமானால் கடவுளை, துணைக்கு வைத்துக்கொள்ளலாம். அவரும் (ஒருவேளை இருந்தால்) அதைத்தான் விரும்புவார். மொத்த பாரத்தையும் தூக்கி அவர் மேல் போடுவது, அவரை அவமானப்படுத்து செயல் அல்லவா


அப்ப கடவுளே இல்லையா? ஜீசஸ், புத்தா, நபிகள், நம்முடைய ஞானிகள், திருவருட்பா, திருமந்திரம், திருவாசகம், திவ்யபிரபந்தம், இராமகிருஷ்ணர், விவேகானந்தர்…. ஐயின்ஸ்டின் சொல்வதெல்லாம் தப்பா


தெரியவில்லை. நான் இன்னும் அந்த உண்மையை கண்டடையவில்லை. ஐயின்ஸ்டின் சொல்கிறE = mc2 , முற்பிறவி, கர்மா, விதி என்பதெல்லாம், நமக்கு புரியாத ஒன்றை, கடவுள் இருப்பாக உருவகப்படுத்துவதில் இருக்கும் சௌகரியம் என்றுதான் நான் புரிந்துக்கொள்கிறேன்


அதனால், மனித சாதனைகள் எல்லாவற்றிற்கும் பின்னே, அயராத உழைப்பும், தகுதியும் இருப்பதையே நான் நம்புகிறேன். அதனால், தனிப்பட்ட முறையில் கடவுள் துணைத்தேடுவது என் போக்கு அல்ல. தேடுவதும் தேடாததும் உங்கள் விருப்பம்


மேலும், இப்புவியில் நிகழும் பல்வேறு துயரங்களை கண்டு, கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், அவரால் எப்படி சும்மா வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது? என்ற (அரைவேக்காட்டுத்தனமான) கேள்வியும் எனக்கு உண்டு.


அதனால்தான், வாழ்வில் கடவுள் இருப்பு குறித்தான புரிதலை அடைய சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை என்கிறேன். ஆனால், அண்மைகாலமாக, ஒரு பெரியவரின் அறிவுறுத்தலில்குலதெய்வத்தைவேண்டிக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. உன் தந்தையை, பாட்டனை துணைக்கு அழைப்பது போன்றதுதான் அது, என்கிற அந்த வாதம் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது. என்னோடு வாழும், வாழ்ந்த மனிதனை துணைக்கு அழைப்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அது என் ஈகோவை எவ்விதத்திலும் சீண்டவில்லை. கடவுள் வேறு, தெய்வம் வேறு என்கிற புரிதல் எனக்கு உண்டு.


மேலும், வயது ஆகஆகநமது இலக்கின் தூரம் நீண்டு கொண்டே போவதைப்பார்க்கும் போது, துவண்டு போகும் மனதிற்கு ஒரு துணைத்தேவைப்படுகிறது. வழித்துணை போல. இனி தாக்குபிடிக்க முடியாது என்ற சூழல்களில் ஒரு துணையிருந்தால் நல்லது என மனம் ஏங்கும் கணத்தில் தான், கடவுள் இருப்பு குறித்தான பார்வை மாறுகிறது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று. எனக்கு என் முன்னோர் துணை. அவ்வளவே


என் நண்பர் ஒருவர் இருக்கிறார். தீவிர பெரியார் பக்தர். கடவுள் மறுப்பாளர். என்னுள் ஏற்பட்டிருக்கும்குல தெய்வமாற்றதையும், ஏற்றுக்கொள்ள கூடியவர் அல்ல. நான் இதைப்பற்றி பேசினால், கிண்டல் அடிக்க கூடியவர்


சில ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய தந்தை நோய்வாய்பட்டு, மருத்துவமனையில் சில காலம் இருக்க வேண்டியதாகிவிட்டது. தந்தைக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, தன்னுடைய இந்த நிலைமையை பற்றி, அவருடைய குலதெய்வத்திடம் தினமும் முறையிடும் பழக்கமும் அவருக்கு உண்டு. அதாவது, “மருத்துவமனை படுக்கையில் ஏண்டாப்பா என்னை வைத்திருக்கிறாய்சீக்கரம் கொண்டு போயேன்என்பதுபோன்ற முறையிடல் அது. இதனை தினமும் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பருக்கு, எரிச்சல் தான் வந்தது. “என்ன இவர்? இவரை காப்பாற்றத்தானே இத்தனை முயற்சி செய்கிறோம், இவர் என்னடாவென்றால் இப்படி பிதற்றிக்கொண்டிருக்கிறாரே…!?” என்ற குறை அது. நாட்கள் கடந்துக்கொண்டே இருந்தது. தந்தை நலம் பெற்று வீடு திரும்பவது நீண்டு கொண்டே போனது. தந்தையும் நோயால் மிகுந்த வேதனை அடையத்துவங்கினார். அவர் படும் வேதனையை, மகனாக இவரால் காண முடியவில்லை. அவர் மேல் ஒரு பச்சாதாபம், பரிதவிப்பு வருகிறது. அச்சோதந்தை இத்தனை வேதனைகளை அனுபவிக்கத்தான் வேண்டுமா? இதைவிட அவர் மரணித்துவிடுவது அவருக்கு விடுதலையாகுமா? என்றெல்லாம் யோசிக்கத்துவங்கிவிட்டார். என்றாலும் ஒரு மகனாக, தந்தையை விட்டு விட முடியுமா? மருத்துவம் தொடர்கிறது.


நண்பர், ஒருநாள் அவர்களுடையகுலதெய்வ கோவிலைகடக்க நேரிட்டிருக்கிறது. கடக்கையில், ஒரு கணம் நின்று…”தெய்வமேஎன் தந்தை படும் வேதனை நீ அறியாததா? அவர் இப்படியேதான் இருக்க வேண்டுமா? அவருக்கு உதவி செய்யேன்என்று நினைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அதாவது, இவருக்கு கடவுள் குறித்து நம்பிக்கை இல்லை. ஆனால், தந்தைக்கு உண்டு. அதன் அடிப்படையில், இந்த முறையீடு நடந்ததுஅவ்வளவே.


அன்று இரவு தந்தை காலமானார். அவருடைய தீராத வேதனை மறைந்துவிட்டது. அடுத்த நாள், இறுதி சடங்கிற்கு சென்றிருந்த என்னிடம், நண்பர் இதனை சொல்லி அழுதார். “அச்சோநான் தான் அப்பாவின் மரணத்திற்கு காரணம் ஆகிட்டேனோ..!? ஒரு கணம் அப்படி வேண்டிக்கொள்ளாமல் இருந்திருக்கலாமோ..!? இது என்னை பெரும் மனவேதனைக்கு தள்ளுகிறது ஆம்ஸ்” 


இதற்கு நான் என்ன பதில் சொல்லுவது? கடவுள் நம்பிக்கை இல்லாதவர் வாழ்வில், நடந்திட்ட இந்த சம்பவம்….  ‘கடவுள் இருப்புகுறித்தான என் பார்வையை விசாலமாக்கி இருக்கிறது என்பதைத்தவீர…!


கடவுள் இருப்பு என்பது ஒரு நம்பிக்கை, ஒரு தேவைஉண்மையான்னு தெரியவில்லை.


கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

  


(நடந்ததும்கடந்ததும்தொடரும்)


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால