முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! | 04



என்னுடைய சிறுவயதிலிருந்து, நான் மறக்காமல், நினைவில் வைத்திருக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தனை வயதுக்கு அப்புறம், நினைக்கும் போதெல்லாம் மனமெங்கும் பரவசம் தருபவர்கள். அவர்களை நான் ஒருபோதும் சந்தித்தது இல்லை. என்றாலும், அவர்களே என்னுடைய சிறந்த நண்பர்கள்..! 

புரியவில்லையா…? 😀


அதில் முதல் நண்பன் பேரு… ‘கபீஷ்


ஆங்அவனேதான். குட்டி குரங்கு நண்பன். அமர் சித்திரைக்கதைகளிலும், பூந்தளிர் இதழ்கள் மூலமும் வந்து சேர்ந்த நண்பன் அவன். வளரும் தன்மைக்கொண்ட வாலை வைத்துக்கொண்டு அவன் போடும் ஆட்டங்களை மறக்க முடியுமா? இப்போதும், எங்கே குரங்கு குட்டிகளைப்பார்த்தாலும் அவன் ஞாபகம் வந்து விடும்


கூடவே பல நண்பர்கள்


காக்கா காளி, புலி புண்யகோடி என காட்டு நண்பர்கள் ஒருபுறம் என்றால்சுப்பாண்டி, தபால்கார பரமு, வேட்டைக்காரர்(பெயர் மறந்துவிட்டது) என பெரும் நண்பர்கள் வட்டமே இருந்தது. 80களில் சிறுவர்களாக இருந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள். இவர்கள் எங்களின் பொழுதுகளை எத்தனை சுவாரசியமாக்கினார்கள் என்று சொல்லுவார்கள்


நகைச்சுவை ததும்பும் கதைகள், மெல்லியதாக இழையோடும் அறறெறி, சுவாரசியமான கதாப்பாத்திரங்கள் என குழந்தைகள் உலகத்து பொக்கிஷங்கள் அவை


அம்புலிமாமா, பூந்தளீர் புத்தகங்கள் ஒருபுறம் என்றால், தினமலர் நாளேட்டுடன், வெள்ளிகிழமை இணைப்பாக வந்தசிறுவர்மலர்இன்னொரு அற்புதம்


மகாபாரதம், இராமாயிணம், பீர்பால், தெனாலிராமன் என வகைவகையான கதைகளை வாரம்தோறும் கொண்டு வந்து சேர்க்கும்


உயிரைத்தேடிஎன்றொரு கதைத்தொடர், சிறுவர்மலரில் வந்தது. எதிர்காலத்தில், அணுகுண்டு, வைரஸ் போன்ற காரணங்களால் மனித கூட்டம் அழிந்துவிடுகிறது. இரத்தத்தில் ஏதோ ஒரு ஸ்பெஷல் தன்மைக்கொண்ட ஒரு சிறுவன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அவன் தன்னைபோல வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என தேடி, இந்த உலகம் முழுவதும் சுற்றுவதே கதை. அவனுக்கு ஆபத்து, மிருகங்களாலும், வைரஸ் தாக்குதலால், மரணம் அடையாமல்கொடுரமான உருவத்தையும், குணத்தையும் பெற்றுவிட்ட சில மனிதர்களாலும் வருகிறது. தன்னை காத்துக்கொள்ள, துப்பாக்கி, கார், ஏரோபிளேன், காற்றடைத்த பெரும் பலூன் என பலவற்றை அவன் பயன்படுத்துகிறான். வழியில் அவனைப்போலவே, தப்பிப்பிழைத்த சில சிறுவர்களையும் காண்பான். அவர்களோடு இணைந்து உயிர் வாழ்ந்திட முயல்வதே கதை


தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, ஏனோ அக்கதை தான் ஞாபகம் வருகிறது. மறக்க முடியாத கதை அது. பெரும் ஆபத்துகளையும், பெரும் சாகாசங்களை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட அக்கதை, அடிப்படையில் அன்பையும், தோழமையும், கூடி வாழ்ந்தலையும் போதிக்கிறது


உண்மையில்சிறுவர்களா இருப்பதில் தான், எத்தனை சௌகரியம் இருக்கிறதுஇல்லையா


அது ஒரு காலம். கதைகளின் காலம்…! கற்பனை உலகத்தில் பறந்து திரிந்த காலம். கையில் ஒருபுத்தகம் இருந்தால் போதும், கால இயந்திரத்தில் ஏறியது போன்றுராஜாக்கள் காலத்துக்கும், வான்வெளிக்கும், காடுகளுக்கும் நொடியில் பயணம் செய்யலாம். சுற்றித்திரிந்து விட்டு திரும்பி வந்தால்வீட்டில் நேரத்திற்கு திண்பண்டமும், சாப்பாடும் கிடைக்கும். நிம்மதியாய் சாப்பிட்டுவிட்டு உறங்கப்போகலாம் அல்லது மீண்டும் கற்பனை லோகத்தில் உலாவப்போகலாம்


இப்போது அப்படி செய்ய முடியவில்லை. பாழாப்போன அறிவு அதனை தடுக்கிறது




(நடந்ததும்கடந்ததும்தொடரும்)


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...