முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறும்படங்களும் அதன் தேவையும்:


தற்போதெல்லாம் குறும்படம் எடுப்பது என்பது, ஒரு வணிகப்படத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாகநுழைவுச்சீட்டாகத்தான் பார்க்கப்படுகிறது. இரண்டரை மணிநேரப்படத்தை சுருக்கி ஒரு குறும்படமாக அதனை காட்டி, பெரும்படத்தை பெற்றுவிடுவது நோக்கம்

இது பலருக்கும் கைக்கொடுத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி, லோகேஷ் கனகராஜ்என்று பெரும் பட்டியலே இருக்கிறது. சொல்லப்போனால், திரைத்துறையில் இருப்பவர்களே, அதைத்தான் கேட்கிறார்கள். ஒரு கதையைச் சொன்னால், அதனை ஒரு குறும்படமாக எடுத்துக்கொண்டு வாருங்களேன், பார்க்கலாம் என்கிறார்கள். காரணம், சொல்லும் கதையை, திரையில் கடத்த அவருக்கு வருகிறதா? என்று கண்டு கொள்வதற்காக


இது ஒருவிதத்தில் நன்மை பயக்கக்கூடியதுதான். இன்னொரு விதத்தில், சிக்கலானதும் கூடபொருளாதார குறை, அதனால் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடு, நடிகர்களின் திறமை இன்மை, இடம், கலை சார்ந்த போதாமை என பல்வேறு குறைகளைக் கொண்ட படைப்பாக அது வெளிப்பட்டு, அதனால் தடைபட்டு விடும் வாய்ப்பு என இருமுனை கத்தியாக இருக்கிறது. சரி அது இருக்கட்டும் ஒருபுறம்.


உண்மையில்ஒரு குறும்படத்தின் தேவை என்ன


ஒரு வணிகப்படத்தைப பெறுவதற்கான அறிமுகச்சீட்டா அது? அல்லது அதே களத்தை, கதையை சுறுக்கி பேசுவதா


இல்லை…!


ஒரு வணிக்கப்படம் பேசமுடியாத, சாத்தியப்படாத கதையை, களத்தை அணுகுவதற்கும், பேசுவதற்குத்தான் குறும்படங்கள் பயன்படவேண்டும். மெல்லிய உணர்வுகளை, எளிய மனிதர்களை, தவீர்க்கப்பட்ட களங்களை, சொல்லத்துணியாத கதைகளை பேசுவதற்கும், பதிவுசெய்வதற்கும் குறும்படங்கள் ஒரு சுலப கலை வடிவம்


அவ்வகையில், ஒரு சிறு எண்ணத்தைவோட்டத்தை, சிறு கண்ணி திறப்புகளை கோடிட்டு காட்ட, குறும்படங்களை, சிலர் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது


அண்மையில், ‘Not all answers are found in Google’ எனும் குறும்படத்தைப் பார்த்தேன். இப்பெரும் தொற்றுக்காலத்தில், லாக்டவுன் குறும்படமாக இதனை அதன் இயக்குநர் ‘Triden V Balasingam’ எடுத்திருக்கிறார். தாத்தாவிற்கும் பேத்திக்குமான மெல்லிய உணர்வை, நெருக்கத்தை உரையாடல்கள் வழியாகவும், சிறு சிறு சம்பவங்களின் வழியாகவும் கடத்தி இருக்கிறார். இறுதியில் நம் மனதில் நிற்கும் ஒரு செய்தியோடு படம் முடிகிறது. எளிய முயற்சி. சிறப்பான முயற்சியும் கூட… 


காட்சி வடிவமாக இல்லாமல், உரையாடலாகவே கதையை நகர்த்துவது ஒரு குறைஎன்றாலும் இது லாக்டவுன் காலம், அதில் கிடைத்த குறைந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி செய்த படம் என்றபலனைஅவருக்கு கொடுப்போம்





கடந்த வருடம், லாக்டவுன் அறிவித்த போது, Triden V Balasingam… இணையம் வழியாக என்னிடம்ஒளிப்பதிவுகுறித்து பாடம் பயின்றார். ஈழத்து இளைஞர். கனடாவில் வசிக்கிறார். தொலை தொடர்புத்துறையில் பணி புரிகிறார், என்றாலும் கலையின் மீதும், திரைத்துறையின் மீதும் மிகுந்த ஆர்வமும், மதிப்பும் கொண்டவர். புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நேர்த்தியான, சிறந்த திரைப்படங்கள் ஒருநாள் வரும் என்பது என் அசைக்க முடியாத எண்ணம். அவ்வெண்ணத்தை மேலும் வலுவாக்கியவர். மிகுந்த பொறுப்புணர்வும், அன்பும், சிரத்தையும் கொண்டவர். தான் கற்றுக்கொண்டதை மேலும் மெறுகூட்ட, தன்னாலான எல்லாம் முயற்சிகளையும் மனம் தளராது செய்யக்கூடியவர். ஏற்கனவே ‘Toaster ‘ எனும் குறும்படம் எடுத்து சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றவர்.


வாழ்த்துகளும், அன்பும்சகோதரா…!


  • விஜய் ஆம்ஸ்ட்ராங்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...