முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (5)



தைப்பூசத் திருவிழாவில் பெரிய கேமராவை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்து படமெடுத்தமுத்துமாமா. நட்ராஜ் ஜாமெண்டரி பாக்ஸ் அளவில் மிகச்சிறிய கேமராவை வைத்து படமெடுத்தமுருகன்மாமா. பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தூக்க முடியா பாரத்தில் இருக்கும் கேமராவை, ஆளுயர ஸ்டேண்டில் நிறுத்தி, கருப்புத்துணி போர்த்தி படமெடுத்த அந்த அண்ணா, என்று கேமராவை முதன் முதலில் என கண்ணில் காட்டியவர்கள் இவர்கள்தாம்


பிற்காலத்தில் முத்து மாமா பயன்படுத்தியது ‘TWIN Lens Camera’ என்றும் முருகன் மாமா பயன்படுத்தியது ‘Pocket Cameras’ வகையைச் சார்ந்தது என்றும் பள்ளியில் படமெடுத்தது ‘Large Format’ கேமரா என்றும் தெரிந்துக்கொண்டேன்


Twin Lens கேமராக்களில், பார்ப்பதற்கு ஒரு லென்ஸும், படமெடுப்பதற்கு மற்றொரு லென்ஸும் பயன்படுகின்றன. மேலும் கீழுமாக இருக்கும் இரண்டு லென்ஸுகளுக்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதனால், ஒரு காட்சியை சட்டகத்திற்குள் (Frame) கொண்டு வரும்போது, கவனமாக செயல்பட வேண்டும், அதனை சரி செய்யவே SLR (Single Lens Reflector) வகைக் கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘Pocket’ கேமராக்களில் கேசட் வடிவில் இருக்கும் படச்சுருளைப் பயன்படுத்தி படமெடுக்கலாம் என்பதும், ‘Large Format’ கேமராக்களில் நாம் வழக்கமாக பயன்படுத்தும் 35MM படச்சுருளை விட பெரிய படச்சுருள்கள் (120 film format - roughly 61 mm) பயன்படுத்துகின்றன என்பதை அறிந்துக்கொள்ள வெகுகாலம் தேவைப்பட்டது


சிறுவயதில், புகைப்படத்துறையின் மீது காதல் வருவதற்கு இந்த மூவர்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். பிறகு எங்கள் வீட்டில் ஒரு பாக்கெட் கேமராவை அப்பா வாங்கினார். வெகுகாலம் அதனை அவர் மட்டுமே பயன்படுத்தினார். குடும்பமாக சுற்றுல செல்லும்போதெல்லாம் அதனை பயன்படுத்தினோம். பிறகு அதில் ஏதோ பழுது ஏற்பட்டு தீண்டுவார் இல்லாமல் வீட்டு அலமாரியில் கிடந்தது. அதனை ஒரு நாள் தேடி எடுத்து, முருகன் மாமாவிடம்(அத்தைப் பையன்) கொடுத்து சரி செய்து வாங்கினேன். அதற்கு தேவையான படச்சுருள்(Film) எப்படி எனக்கு கிடைத்தது என்பதை இங்கே விவரித்தால், அது ஒரு பெரிய கதையாக மாறும், அதை பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு அக்கேமராவைப் பயன்படுத்தி படமெடுத்தது பார்த்தேன் என்பதும், அதில் பத்து படம் கூட தேறவில்லை என்பதனைக் கண்டு, புகைப்படமெடுப்பதில் பெரிய ஆர்வம் கொள்ளாமல் விட்டு விட்டேன் என்பதையும் மட்டும் தெரிந்துக்கொள்வோம். இதுவெல்லாம் நான் எட்டாவது, ஒம்பதாவது படித்தக்காலத்திற்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டவை.


பிறகு திரைப்பட ஒளிப்பதிவின் மீது ஆர்வம் ஏற்பட்ட, பெங்களூரில் கேமரா பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் வரை, வேறெந்த கேமராவையும் தொட்டுப்பார்த்ததில்லை


“If you want something in life, the whole Universe conspires for you to get it,” - Paulo Coelho


"வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் பெற முழு பிரபஞ்சமும் உதவி(சதி) செய்கிறது," - என்கிறார் பாலோ கோயல்ஹோ


ஆம், அது உண்மைதான்.


பிற்காலத்தில், நான் தொட்டுப்பார்க்காத கேமராக்களே இல்லை எனலாம். பெங்களூர் கேமரா நிறுவனத்திற்கு, அனைத்து வகை கேமராக்களும் வந்ததன. அதை எல்லாவற்றையும் நான் பயன்படுத்திப் பார்த்தேன். பல மாடல் கேமராக்கள், நூற்றுக்கணக்கான படச்சுருள்கள் என்று புகைப்படங்கள் எடுக்க முடிந்தது என் அதிஷ்டம் எனலாம், அல்லது பிரபஞ்சம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகள் எனலாம்


ஒன்றை நாம் ஆழமாக நேசித்து, நேர்மையோடு தேடும் போது, அது நம்மை நோக்கி நெருங்கி வரும் அல்லது அதற்கான பாதையில் வாழ்வு நம்மை வழி நடத்தும்


இது நான், என் வாழ்வில் கண்டெடுத்த பாடம் அல்லது உண்மை


(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...