முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

03: சிறு, குறு முதலீட்டுத் திரைப்படங்கள்:



 பொதுவாக ஒரு சிறிய முதலீட்டுத் திரைப்படம் எடுக்க, 1.5 கோடியிலிருந்து 2 கோடி வரை ஆகும் என்பதையும், அப்பணம் எப்படியெல்லாம் செலவாகிறது, எதற்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதைப்பற்றியும் முந்தைய இரண்டு பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். (ஆர்வம் கொண்டவர்கள் அதனை படித்துவிட்டு, மேலே தொடருங்கள்)


கோடிகள் எதற்கு... சில லட்சங்களே போதும்(குறு முதலீடு), ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும் என்று நம்புகிறவர்களை, சொல்பவர்களையும் நான் அறிவேன். அதுசரிதானா? அப்படி லட்சங்களில்மட்டும்செலவு செய்து ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா? என்று என்னைக்கேட்டால்...


முடியும் என்பதுதான் என் பதில்ஆனால்


தரமான திரைப்படமாக எடுத்துவிட முடியுமா? என்பதுதான் இங்கே தொங்கி நிற்கும் கேள்வி. அதற்குதான் பதில் தேட வேண்டியதாகிறது.


குறைந்த செலவில் (சில லட்சங்கள்) ஒரு தரமான திரைப்படம் எடுக்க பல்வேறு காரணிகள் இருக்கிறன


முதலில், தரமான திரைப்படம் என்றால் என்ன? என்பதை நாம் விள(ங்)க்கிக் கொள்ள வேண்டும். இங்கேதான் பெரும்பாலும் சிக்கல் ஏற்படுகிறது. காரணம், தரமான திரைப்படம் என்பதை இங்கே பலரும், பலவிதமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஜனரஞ்சகமான பொழுதுபோக்குத் திரைப்படங்கள், கலைப்படங்கள், மக்கள் பிரச்சனையை பேசும் திரைப்படம், வாழ்வியலைப் பேசும் திரைப்படங்கள், உணர்வுகளை, உணர்ச்சியை கடத்தும் படங்கள் என்று பல்வேறு வரையறைகளை நாம் வைத்திருக்கிறோம். இதில் தரமான திரைப்படம் என்றால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று நினைவுக்கு வரும்


எந்தப்படமாக வேண்டுமானாலும் இருக்கலாம், எல்லாவற்றிற்கு ஒரே ஒரு பொது விதி ஒன்று இருக்கிறது. அதுபார்வையாளனோடு உரையாடுவது


அதாவது, நீங்கள் சொல்லும் கதை பார்வையாளனுக்கு செய்தியாக, தகவலாக போய் சேரக்கூடாது. உணர்வுப்பூர்வமாக அவனை அது தாக்க வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் பார்வையாளன்எதிர்வினைஆற்ற வேண்டும். சிரிப்போ, துக்கமோ, அழுகையோ, ஆச்சரியமோ, அதிர்ச்சியோ, ஆர்வமோ, இணக்கமோ வெளிப்படுத்த வேண்டும். திரையில் ஊடாடும் கதாப்பாத்திரங்களை அவன் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். அவனாகவோ, பக்கத்துவீட்டுக்காரனாகவோ, நண்பனாகவோ, எங்கோ செய்தியில் படித்தவனாகவோஇருக்கலாம். அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை உண்மை என்று நம்பவேண்டும். அப்போது பார்வையாளனுக்கும், திரையில் உயிர்த்தெழும் கதாப்பத்திரத்திற்கு இடையே ஒரு இழை உண்டாகும். அந்த இழை, கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பட்டு, இரண்டு பேரையையும் கடைசிவரை பிணைத்து வைக்க உதவும். அப்படி பிணைக்கப்பட்ட பார்வையாளன், திரைப்படத்தோடும், கதாப்பாத்திரங்களோடு உரையாட துவங்கிவிடுவான். இது நிகழ்ந்தே ஆகவேண்டும்


எனில், ஒரு தரமான திரைப்படம் என்பது, ‘பார்வையாளனோடு உரையாடும் படம்என்று புரிந்துக்கொள்வோமா? அப்படி ஒரு திரைப்படம் உரையாடுவதற்கு, பல்வேறு காரணிகள் காரணமாக இருக்குமென்றேன் இல்லையா?


அது என்னென்ன


  1. கதை
  2. திரைக்கதை
  3. கதாப்பாத்திரங்கள்
  4. வசனம்
  5. நடிகர்கள்
  6. நடிப்பு
  7. இயக்கம்
  8. ஒளிப்பதிவு
  9. கலை இயக்கம்
  10. படத்தொகுப்பு
  11. இசை


என்று பல்வேறு துறை சம்பந்தப்பட்டிருப்பதனால், இத்துறைச்சார்ந்த திறமையும், அனுபவமும் கொண்ட கலைஞர்களின் கூட்டு முயற்சியாகத்தான் ஒரு தரமான திரைப்படம் இருக்க முடியும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா? இருக்காது என்று நம்புகிறேன். எனில், அத்தகைய கலைஞர்களின் துணையில்லாமல், அனுபவம் இல்லாமல் ஒரு குறு முதலீட்டுப்படத்தை எடுத்து விட முடியும் என்று நம்புவது எத்தகைய மூடத்தனம்..!? 


என் அனுபவத்தில் இப்படி குறு முதலீட்டில் திரைப்படம் எடுக்க முயற்சிப்பவர்கள், பெறும்பாலும் அனுபவம் அற்றவர்களாக, தகுதியான கலைஞர்களின் துணையில்லாமலும் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். தம்மிடம் போதுமான அளவு பணம் இல்லாததனால், குறு முதலீட்டுத் திரைப்படங்களை எடுக்க முயல்கிறார்களேத் தவீர வேற நோக்கம் இல்லை. அதனால் தான் அத்தகையப் படங்கள் தோல்வியில் முடிகிறது


உண்மையில் நீங்கள் ஓர் குறு முதலீட்டுத் திரைப்படத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு முதலில் தேவைப்படுவதுஒரு கதை அல்லது ஒரு கதாப்பாத்திரம்கூடவே திறமையும் அனுபவமும் வாய்ந்த கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள்.


சரிமுதலில் கதையைப்பற்றிப் பேசுவோம்


பொதுவாக ஹீரோயிஸப்படங்கள், காதல் படங்கள், வாழ்க்கை வரலாறு படங்களைத்தாண்டி, சிறந்த திரைக்கதைகளை இப்படி வகைப்படுத்தலாம் என்கிறார்கள்


A. ‘சராசரி மனிதர்கள்அசாதரமான சூழலில் சிக்கிக்கொள்வது’ - அதாவது நம்மைப்போன்ற ஒரு சராசரி கதாப்பாத்திரம், சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்சனையில் சிக்கிக் கொள்வது. ‘ரோஜாதிரைப்படத்தில்காதல் ஜோடிகாஷ்மீர் போராளிகளிடம் மாட்டிக்கொள்வது, கணவனை மீட்க போராடும் ஒரு எளிய காதல் மனைவி’. இதில் காதல் ஜோடியே பிரதானம். அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, சம்பவங்கள் இரண்டாவதாக இருக்கிறது.


B. ‘ஒரு அசாதரன சம்பவம்அதை கையாளும் கதாப்பாத்திரங்கள்’ - அதாவது, விபத்து, கொலை, கொள்ளை, பெரும் ஆபத்து போன்ற ஒரு சம்பவத்தை தீர்த்து வைக்கும் அல்லது கையாளும் கதாப்பாத்திரம்’. அறம் திரைப்படத்தில்குழிக்குள் விழுந்துவிடும் குழந்தைஅதனை மீட்டெடுக்கும் ஆட்சியர்’. இதில் பிரச்சனை, சம்பவமே பிரதானம். அதனை கையாளும் கதாப்பாத்திரங்கள் இரண்டாவதாக வருகிறார்கள்


யோசித்துப்பார்த்தல், எந்தவொரு தரமான திரைப்படத்தையும், இப்படி இரண்டு வகைமையில் பிரித்துவிட முடியும்.


உதாரணத்திற்கு சிலப்படங்கள்.


A. ஜெய்பீம், மகாநதி, அன்பே சிவம், பம்பாய், ஹேராம், பொல்லாதவன்

B. போர்த்தொழில், அயோத்தி, கத்தி


எங்கேநீங்கள் சிலப்படங்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம். படத்தின் பெயர், அது எந்த வகைமையில் வருகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அல்லது A,B என்று குறிப்பிடுங்கள்.


  • விஜய் ஆம்ஸ்ட்ராங்


#Cinema  #tamilcinema  #movies  #MovieMaking  #filmmaking  #expenses #filmexperience #vijayarmstrong 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...