வருங்காலங்களில் 'Digital' தொழில்நுட்பம் ஆட்சி செலுத்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது திரைப்படத் தயாரிப்பிலும் பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேபோகிறது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நம்மை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். நம்மை 'update' செய்துக்கொள்வது என்பது இன்றைய சூழலில் மிக ஆதாரமான செயலாகிறது. புதிய தொழில்நுட்பங்களையும் புதிய கருவிகளையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன். அதன் வரிசையில் 'ARRI' நிறுவனத்திலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'ALEXA' என்கிற 'HD' தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவைப்பற்றிய கட்டுரை இது.
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!