முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன?

திரைப்படம் எடுக்க பல வகையான கருவிகள் உபயோகிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது 'கேமரா'(Camera) மற்றும் 'ஃபிலிம்' (Film) என்று அழைக்கப்படும் படச்சுருள். அதாவது படத்தைப் பதிவு செய்ய தேவையான கருவிகள். இப்போது இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன? அவற்றில் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்பதை அறிய உங்களுக்கு ஆர்வம் உண்டா?


நீங்கள் பல பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ARRI, ARRI-III, ARRI 435, Red One, HD, Super 16mm, Super 35mm, HDV எனப் பல வகையான கேமராக்களைப் பற்றியும் 'ஃபார்மேட்ஸ்'(Formats) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றைப்பற்றி ஒரு அறிமுகமாக, சுருக்கமாகச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.


முதலின் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது மூன்று விஷயங்கள்.


1. படத்தை எதில் எடுக்கிறார்கள், அதாவது படத்தை (பிம்பத்தை) எந்த ஊடகத்தில் (Mediam) பதிவுசெய்கிறார்கள்?
2. எந்த 'ஃபார்மேட்ஸை' (Formats) பயன்படுத்துகிறார்கள்?
3. எந்த கேமராவைப் பயன்படுத்துகிறார்கள்.?


ஊடகம்(Mediam):
இங்கே 'ஊடகம்' என்பதை பதிவுசெய்ய தேவைப்படும் கருவியாக, மூலமாகக் கொள்வோம். அதாவது படத்தை 'ஃபிலிம்' அல்லது 'டிஜிட்டலில்' (Digital) பதிவு செய்யலாம்.


'ஃபார்மேட்ஸ்'(Formats):
இங்கே 'ஃபார்மேட்ஸ்' என்பது எந்த அளவில் படத்தை (பிம்பத்தை) பதிவு செய்கிறார்கள் என்பதைக் குறிக்கும். அதாவது ஃபிலிமில் என்றால் 35mm, 16mm, Super 16mm, Super 35mm மற்றும் 'சினிமாஸ்கோப்'(Cinemascope) போன்றவை உண்டு. 70mm, Imax என்றெல்லாம் உண்டு. அவை இங்கே பயன்படுத்தப்படுவதில்லை. எனவே இங்கே பயன்படுத்தப்படுபவற்றைப் பற்றி மட்டும் பார்ப்போம்.


'டிஜிட்டல்'(Digital) என்றால் HD, HDV என்றெல்லாம் உண்டு.


கேமரா:
எந்த கேமரா என்பதை முடிவு செய்ய நாம் முதலில் எந்த 'ஊடகம்' என்பதையும் எந்த 'ஃபார்மேட்' என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

ஃபிலிமில் எடுக்கலாம் என்றால் எந்த 'ஃபார்மேட்' என்பதை முடிவு செய்ய வேண்டும்.


S16mm, 35mm- என்பது ஃபிலிமின் அளவை (Size) குறிக்கிறது.


'சினிமாஸ்கோப்' என்பது அகண்ட திரையை (Wide Screen) குறிக்கிறது. அதற்கு 'அனமார்ப்பிக் லென்ஸ்' (Anamorphic Lens) பயன்படுத்தப்படுகிறது, இதில் இருக்கும் லென்ஸ் நீள்வாக்கில் (Horizontally) பிம்பத்தைச் சுருக்கிக் கொடுக்கும்.


'Super 35mm'  என்பது வழக்கமான வட்டவடிவமான (spherical lenses) லென்ஸைக்கொண்டு படம் பிடிப்பது. நெகட்டிவில் ஒலிப்பதிவிற்கான இடத்தையும் சேர்த்து பிம்பத்தை பதிவுசெய்வது.


மேலும் விபரங்களுக்கு சினிமாஸ்கோப் vs Super 35mm என்ற கட்டுரையைப் படிக்கவும்.


'சினிமாஸ்கோப்' மற்றும் 'Super 35mm' இரண்டுக்கும் ஒரே கேமரா மற்றும் ஃபிலிமைத்தான் பயன்படுத்துகிறார்கள். லென்ஸில் தான் வித்தியாசம்.
Super 35mm-க்கு கேமிராவில் சில மாற்றங்கள் செய்யவேண்டும், அவ்வளவுதான்.


'டிஜிட்டல்'(Digital):


HD:  'ஹை டெஃபனிஷன்' (High Definition)  என்பதன் சுருக்கமே HD. நாம் வழக்கமாக பயன்படுத்தும் VHS, DV, Beta, Digi Beta எல்லாம் 'SD'(Standard Definition  வகையைச்சார்ந்தது. அதாவது இவையெல்லாம் நம்முடைய வீட்டிலிருக்கும் TV க்கு தேவையான 'பிக்சல் ரேஷியோ'(Pixel Ratio)-வான 720 x 576 pixels இல் படத்தை பதிவுச்செய்கிறது. ஆனால் HD இன்னும் பெரிதாக 1080 pixel அளவில் பதிவுசெய்கிறது. இன்னும் விரிவாக HD-யைப்பற்றி வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.


ஆதாரமான வித்தியாசத்தை நாம் இங்கே தெரிந்து கொண்டால் போதும். HD பிம்பங்கள் பெரிதாக இருப்பதினால் திரைப்படத்திற்குத்தேவையான 'Resolution' கிடைக்கிறது. இதற்கு என்று தனியாக கேமராவும், நாடாவும் (Cassette) இருக்கிறது.


HDV: HD பிம்பத்தை (Image) 'DV  Cassette'-இல் பதிவுசெய்வது. இதற்கென்று தனியாகக் கேமரா இருக்கிறது, பதிவு செய்ய வழக்கமான 'Mini DV Cassette' போதும்.


இங்கே பயன்படுத்தப்படும் கேமராக்கள்:


ARRI 435: இது ARRI நிறுவனத்தின் தயாரிப்பு. 435 என்பதில் 4 என்பது, இது நான்காவது தலைமுறை கேமரா என்பதைக்குறிக்கிறது.(அடுத்தடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியை தலைமுறை-Generation என்பார்கள்) 35 என்பது '35mm format'-ஐ குறிக்கிறது.


அதாவது ARRI 435 என்பது ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நான்காவது தலைமுறை 35mm கேமரா. இதில் பல வகைகள் உண்டு. 435 ES, 435 Xtreme,etc.


இதே கேமராவை 'சினிமாஸ்கோப்'-க்கும் 'Super 35mm'க்கு சில மாறுதல்கள் செய்தும் பயன்படுத்தலாம்.


ARRI-III: ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது தலைமுறை 35mm கேமரா.   இந்த கேமராவையும் 'சினிமாஸ்கோப்'-க்கும் 'Super 35mm'க்கு சில மாறுதல்கள் செய்தும் பயன்படுத்தலாம்.




ARRI 235: ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சமீபத்திய கேமரா. எடை குறைவாக இருக்கும். அதனால் 'Hand Held' shots-க்கு உதவியாக இருக்கும். இது 35mm நெகட்டிவையே பயன்படுத்துகிறது.






ARRI 416: என்பது ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நான்காவது தலைமுறை 16mm கேமரா.


ARRI SR 3 -S16mm:  என்பது ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது தலைமுறை 16mm கேமரா.






RED ONE: என்பது 'டிஜிட்டல்' கேமரா. HD பிம்பங்களை 'Hard Disc'-இல் அல்லது 'Chip'-ல் பதிவுசெய்யும்.




ARRI D-20, D-21: இது ARRI நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட HD கேமரா.  HD பிம்பங்களை 'Hard Disc'-இல் பதிவுசெய்யும்.






Sony Z-1, Z-7: என்பது HDV கேமரா.




Sony PMW EX3: இது HD பிம்பத்தை 'Chip'-ல் பதிவுசெய்கிறது.


இப்படி 'Panasonic', 'JVC', மற்றும் 'Thomsan' போன்ற நிறுவனங்களின் சில கேமராக்களும் உண்டு.


கருத்துகள்

  1. பதிவா போட்டு தாக்கறிங்க... நல்ல விஷயமா எழுதி வருகின்றீர்கள்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இப்போதுதான் உங்கள் வலை அறிமுகமாகி, உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். ரொம்ப நாட்களாக மனதில் உள்ள திரைத்துறை ஒளிப்பதிவு சார்ந்த பல கேள்விகளுக்கு உங்களின் பதிவுகள் விடையளித்தன. மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
    ஒரு சின்ன சந்தேகம். பல technical-ஆன நுட்பமான விஷயங்களை (behind the film, camera & lens, உதாரணமாக film vs digital பதிவு) ஆர்வத்தின் காரணமாக நீங்களாகவே கற்றுக்கொண்டீர்களா இல்லை உதவி ஒளிப்பதிவாளராக இருந்தபோதே கற்றுக்கொடுக்கப்பட்டதா?
    மிக்க நன்றி!
    http://vizhiyil.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. பதிவுகள் படங்களுடன் எளிய தமிழில் மிகவும் இலகுவாய் புரிந்துகொள்ள முடிகிறது,பெரிய மனதுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. ஜாக்கி சேகர் பதிவின் மூலம், உங்களின்
    தளம் வந்தேன். எளிமையான விளக்கங்கள்!!!
    அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நண்பர்களுக்கு நன்றி..
    Amal சார், இங்கு யாரும் யாருக்கும் எதையும் சொல்லித்தருவதில்லை. கற்றுக்கொள்வது முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு. பொதுவாக எதேனும் சந்தேகம் இருந்தால் நான் நேரடியாக இனையத்தில் தான் தேடுவேன். அப்படித் தேடும்போதுதான் தெரிந்தது, கிடைப்பது எல்லாம் ஆங்கிலதில், தமிழில் ஒளிப்பதிவைப் பற்றி எதுவுமே இல்லை என்பது. அதுவே இந்த 'தளத்தின்' உருவாக்கத்திற்கு காரணமாயிற்று. ..அனைத்து கட்டுரைகளுக்கும் இரண்டு வார்த்தையிலாவது கருத்துகள் சொல்லுங்கள், அப்போதுதான் அது முழுமை அடைந்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியும். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. அருமையான விளக்கங்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள் சார். படிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. மேலும் தமிழ்மணம் , தமிழிஷ் ல் இணைத்தீர்களானால் இன்னும் நிறைய பேரை சென்றடையும்.

    பதிலளிநீக்கு
  9. ஜாக்கி சேகர் தளத்திலிருந்து வருகின்றேன். தொடர்ந்து எழுதுங்கள் சகா. படிக்கக்காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அருமை சார். பகிர்விற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

    கேமாரா பற்றிய விபங்களுடன் அதன் உத்தேச விலையும் குறிப்பிடவும்.


    ஜாக்கி... உன் பதிவுக்கு நன்றி மக்கா.

    பதிலளிநீக்கு
  11. சூர்யா நேத்துதான் பார்த்தேன்.. ரோம்ப நல்லா எழுதி இருக்கார்.. அதுவும் கடமைக்குன்னு கூட எழுதல... சரி கமென்ட் பக்கம் வந்தா... ஒரு பய இதை வாசிச்சா போல தெரியலை அதனாலதான் இன்னைக்கு இதை தனிப்பதிவா போட்டு லிங் கொடுத்தேன்...

    அன்புடன்
    ஜாக்கி

    பதிலளிநீக்கு
  12. //தமிழில் ஒளிப்பதிவைப் பற்றி எதுவுமே இல்லை என்பது. அதுவே இந்த 'தளத்தின்' உருவாக்கத்திற்கு காரணமாயிற்று. //

    ஆம் உண்மைதான். தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிக மிக குறைவான அளவே உள்ள நிலையில் உங்களின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

    வாழ்த்துக்கள்.. தொடருங்கள் நாங்கள் உங்களை தொடருகிறோம்

    நன்றி :)

    பதிலளிநீக்கு
  13. அருமையான வலைத்தளம். ஒரு கல்லூரிக்குச் சென்று படிப்பது போல் உள்ளது.

    தேடினாலும் தமிழில் கிடைக்காத தகவல்கள். நிறைய பேர் வெட்டி நிகழ்வுகளை எழுதி வரும் பொழுது பாடத்திட்டமாக படிக்க வேண்டிய விசயங்களை எளிய முறையில் எழுதியமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    இத்தளத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து திரு. ஜாக்கி சேகருக்கு பலப் பல நன்றிகள். உங்களின் பாராட்டப் பட வேண்டிய இந்தப் பணி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. நண்பரே பதிவுலகத்திற்கு வருகிறேன் உங்கள் கலைப் பயணத்தில் வெற்றி உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்யட்டும். உங்களிடம் இருந்து நிறைய புதிய ஒளிப்பதிவாளர்கள் பிறக்கட்டும் நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  15. கண்ணா, முருகன் மற்றும் வடிவேலன்...நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  16. அருமை. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  17. அருமை. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...